Pages

Saturday, January 18, 2014

அலுமினிய குக்கரின் கருமையை போக்க ஒரு எளிய வழி

இது அநேகமாக எல்லோருக்கும் தெரிந்த வழி முறைதான்...இருந்தாலும் என்னை போல கற்றுகுட்டிகளுக்காக இதை பகிர்கிறேன்.அலுமினிய குக்கரின் உள்பக்க கருமையை போக்க எலுமிச்சை சிறந்த வழி என்று படித்து இருக்கிறேன்.இவ்வளவு நாள் அந்த குறிப்பை  உபயோகபடுத்தும் அளவுக்கு குக்கரில் கருமை படிய வில்லை.

இப்போது கொஞ்சம் கருமை படிந்து இருந்தது.அடியில் நீரில் இரண்டு எலுமிச்சை தோல்களை போட்டு வழக்கம் போல் மேலே பாத்திரம் வைத்து சாதம் வைத்து இறக்கினேன்.

குக்கரை திறந்த போது குக்கர் பளபளத்தது :-)



தொடர்புடைய பதிவுகள்:


FACEBOOK கில் கனவு இல்லத்தை தொடர இங்கே கிளிக்கவும் 

Sunday, January 12, 2014

ஆயிரம் விருப்பங்களை (likes) எட்டியது கனவு இல்லத்தின் facebook பக்கம் !!!

ஹப்பா...ஒரு வழியா கனவு இல்லத்தின் facebook பக்கம் இன்று ஒரு மைல் கல்லான 1000 லைக்களை எட்டியது.


FACEBOOK கில் கனவு இல்லத்தை தொடர இங்கே கிளிக்கவும் 
தொடர்புடைய மைல்கற்கள் :-) 



Saturday, January 11, 2014

வெந்தய கீரை வளர்ப்பது எப்படி

வீட்டிலேயே வெந்தய கீரையை எளிதாக வளர்க்கலாம்.வீட்டு தோட்டம் அல்லது பால்கனி தோட்டம் அமைக்க விரும்புபவர்கள் கோதுமை புல்க்கு பிறகு எளிதாக வளர்க்க கூடிய கீரை வகை.

விதைக்கு எங்கேயும் தேடி அலைய வேண்டாம்.அஞ்சறை பெட்டியில் இருக்கும் வெந்தயமே போதுமானது :-).வெந்தயத்திலும்  வெந்தய கீரையிலும் இருக்கும் சத்துக்கள் சொல்லி மாளாது

வெந்தய கீரையின் பலன்களை தமிழில் படிக்க : இங்கே கிளிக்கவும்
ஆங்கிலத்தில் படிக்க : இங்கே கிளிக்கவும் 

இவ்வளவு சத்துக்கள் நிரம்பிய கீரையை எந்த பூச்சி கொல்லி மருந்துகளும் இல்லாமல் இயற்கை முறைப்படி வளர்த்தால் தானே அதன் சத்துக்கள் நம்மை முழுமையாக சென்றடையும்.

எப்படி வளர்ப்பது என்று படி படியாக பார்ப்போம்.

தேவையான பொருட்கள் :
a)வெந்தயம் - 50 முதல் 100 கிராம் (நீங்கள் வளர்க்க பயன்படுத்தும் pot டை    பொருத்தது.
b)ஒரு pot -  அகலமாக இருந்தால் நல்லது.நான் என்னுடைய உருளி அலங்காரத்திற்கு வாங்கிய உருளியை பயன்படுத்தி உள்ளேன்.
c)potting mix : நான் மண்ணையே உபயோக படுத்தி உள்ளேன்.


1 )வெந்தயத்தை 8 -12 மணி நேரம் நன்றாக நீரில் ஊற வைத்து கொள்ளவும்.


2) பின் நீரை வடித்து துணியிலோ hot pack க்கிலோ போட்டு மூடி 8-12 மணி நேரம் நன்றாக முளை கட்டி கொள்ளவும். 




3) இப்போது உங்கள் விதைகள் தயார்.நீங்கள் வளர்க்க போகும் தொட்டியின் உயரம் 5-6 இன்ச்களாவது இருக்க வேண்டும்.நடவேண்டிய தொட்டியில் மண்ணை நிரப்பி கொள்ளுங்கள்.பின் வெந்தயத்தை நன்றாக பரப்பி தூவி விடுங்கள்.விதைகளை நெருக்கமாக தூவ வேண்டும்.
     

4) பின் மேலே மண்ணை தூவி மூடுங்கள்.லேசாக விதைகள் மறையும் அளவு தூவினால் போதுமானது.


5) நீரை தெளித்தால் போதும்.ஊற்ற வேண்டாம்.தொட்டியில் எப்போதும் ஈர பதம் இருக்க வேண்டும்.கவனம்: ஈரப்பதம் ...ஈரமாக அல்ல.தண்ணீர் அதிகம் விட்டால் விதைகள் அழுகி விடும்.கீழே படத்தில் இருப்பது வளர்ந்து 7 நாட்கள் ஆன கீரை தளிர்கள். 
                                                .

6)நேரடியாக சூரியனுக்கு கீழே வைக்க கூடாது.சூரிய வெளிச்சம் இருக்கும் இடமே போதுமானது.கீழே படத்தில் இருப்பது வேறு ஒரு பிளாஸ்டிக் கப்பில் வளர்ந்து உள்ள கீரை.அடியில் சூடான கம்பி கொண்டு நீர் வெளியேற துளைகள்  இட்டுள்ளேன்.

7) பார்க்கவே மிகவும் fresh ஆக இருக்கு இல்லையா...முழுதாக அறுவடை செய்ய ஒரு மாதம் ஆகும். தளிர்களின் மேலே வெந்தயத்தின் தோல் ஒட்டி கொண்டு இருக்கிறது.


8) இது இணையத்தில் எடுத்த முழுதாக வளர்ந்த வெந்தய கீரையின் படம்.என் தொட்டியில் வளர்வதை அவ்வபோது அப்டேட் செய்கிறேன் :-)

image:facebook

என்னுடைய வெந்தய கீரை அறுவடைக்கு தயாராக உள்ளது.நாளை பறித்து விடுவேன்.




தொடர்புடைய பதிவுகள்:


FACEBOOK கில் கனவு இல்லத்தை தொடர இங்கே கிளிக்கவும் 
https://www.facebook.com/kanavu.illam.blog

Friday, January 3, 2014

கோதுமை புல் சாறு / wheat grass juice / கோதுமை புல் வளர்ப்பது எப்படி

கோதுமை புல்  வீட்டிலேயே வளர்த்து அதில் இருந்து சாறு தயாரிப்பது மிகவும் எளிது.அருகம்புல் போலவே இதுவும் மிகவும் மருத்துவ குணங்கள் நிரம்பியது.
இணையத்தில் wheat grass juice பற்றி நிறைய செய்திகள் இருக்கிறது.

இது சந்தையில் மிகவும் அதிக விலைக்கு விற்கப்படும் ஒரு பொருளாகவும் இருக்கிறது.100 கிராம் கோதுமை புல் பொடி 400 ரூபாய்க்கு மேல் விற்க படுகிறது.இதன் சில நல்ல பயன்களை கீழே சுட்டியுள்ளேன்.





தேவையான பொருட்கள் :

கோதுமை - 100 கிராம் 
வளர்க்க ஒரு தொட்டி (பெரிய தொட்டி எல்லாம் தேவை இல்லை.சிறிய பிளாஸ்டிக் கப்புகள் கூட போதும்.

செய்முறை:
1 )கோதுமையை முழுகும் அளவு நீரில் ஊற வையுங்கள்.12 - 16 மணி நேரம் வரை ஊறலாம்.

2)பின்னர் நீரை நன்றாக வடித்து கழுவி அதை ஒரு துணியில் முடிந்தோ  இல்லை ஒரு hotpack லோ வைத்து 12 - 16 மணி நேரம் வைக்கவும்.திறந்து பார்க்கும் போது நன்றாக முளை கட்டி இருக்கும்.


3) நீங்கள் வளர்க்க விரும்பும் பாத்திரத்தில் மண்ணை நிரப்புங்கள்.பின் முளைகட்டிய கோதுமையை அதில் பரப்பி மேலும் மண்ணை தூவி மூடுங்கள்.கவனம் மண்ணை கோதுமை மறையும் வரை தூவினால் போதும் .அளவுக்கு அதிகமாக மண்ணை நிரப்பி மூடினால் கோதுமை புல்  வளர்வதில் சிரமம் இருக்கும். 





 4) இதற்கு அதிக நீர் தேவை படாது.கோதுமை புல் முளைத்து வெளியில் தெரியும் வரை நீரை கைகளால் தெளித்தால் போதுமானது.

5) படத்தில் இருப்பது விதை இட்டு நான்கு நாட்கள் கழித்து வளர்ந்து இருக்கும் கோதுமை புல்.அடுத்து இருப்பது ஒரு சிறிய பிளாஸ்டிக் டம்ளர் இல் வளர்த்தது.


6) படத்தில் இருப்பது வளர்ந்து 8 நாட்கள் ஆனா கோதுமை புல்.7 - 8 இன்ச் உயரம் வரும் போது நீங்கள் அறுவடைக்கு தயாராகலாம்.!!!

7) அடியில் வெள்ளை நிறத்தில் தெரியும் பகுதியை விட்டு புல்லை நறுக்கலாம்.நீங்கள் நறுக்கிய பின்னரும் புல் வளர தொடங்கும்.இரண்டு முறை அறுவடை செய்த பின்னர் முழுவதும் எடுத்து விதை இட்டு மறுபடியும் தொடங்கலாம்.



8)  கோதுமை புல்லை நன்றாக கழுவி கொள்ளவும்.



9) mixie இன் ஜூஸ் extractor இலோ அல்லது blender இலோ கழுவிய புல்லை இட்டு சிறிதளவு நீர் விட்டு அரைத்து எடுக்கவும்.நன்றாக பிழிந்து வடிகட்டினால் கோதுமை புல்  சாறு தயார். 


மேலும் கோதுமை புல் வளர்ப்பது மற்றும் சாறு தயாரிக்கும் முறையை காணொளியாக காண இந்த லிங்க் களை பார்க்கவும்.



மேலும் ஏதும் சந்தேகம் இருந்தால் கீழே இருக்கும் லிங்க் ல் பார்க்கவும்.


தொடர்புடைய பதிவுகள்:


FACEBOOK கில் கனவு இல்லத்தை தொடர இங்கே கிளிக்கவும் 
https://www.facebook.com/kanavu.illam.blog