Sunday, August 12, 2012

வாதாபி நகர விஜயம்!!!-4இதை படிக்கும் முன் கீழ்க்கண்ட பதிவுகளை படித்து விட்டு தொடரவும்.

வாதாபி குடவறை கோவில்களுக்கு போலாமா...
போவதற்கு முன்னால் கல்கி இந்த கோவில்களை பற்றி என்ன சொல்றார்னு பார்த்துட்டு போவோம்.

குண்டோ தரன் சக்கரவர்த்தியைப் பணிந்து விட்டுக் கூறினான்:

பிரபு! இப்போதெல்லாம் புலிகேசிச் சக்கரவர்த்திக்குக் கலைகளிலே ரொம்ப மோகமாம்! வாதாபியிலுள்ள பாறைகளையெல்லாம் குடைந்து மாமல்லபுரத்துச் சிற்பங்களைப் போல் அமைத்துக் கொண்டிருக்கிறாராம்! நமது தொண்டை மண்டலத்திலிருந்து கைகால்களை வெட்டாமல் சிறைப்பிடித்துக் கொண்டு போன சிற்பிகள் சிலர் அந்தப் பாறையிலே வேலை செய்வதை நானே பார்த்தேன். ஆனால், ஒரு வேடிக்கையைக் கேளுங்கள். அந்தச் சீன யாத்திரிகன் ஹியூன் சங்கைப் புலிகேசி மேற்படி சிற்பப் பாறைகளுக்கு அழைத்துச் சென்று காட்டியபோது, 'இந்தப் பாறைச் சிற்பங்களைப் பார்த்து விட்டுத்தான் காஞ்சி மகேந்திர பல்லவன் மாமல்லபுரத்தில் இதே மாதிரி செய்யப்பிரயத்தனப்பட்டான்! அவனுக்கு நல்ல புத்தி கற்பித்து விட்டு வந்தேன்!' என்றானாம்."


இந்த படம் ஏரிக்கரையில் இருந்து வாதாபி கோவில்களை நோக்கி எடுத்தது...படத்தை பெரிது செய்து  பார்த்தீர்கள்   என்றால் அதன் மேற்புறமும் கோட்டை போன்ற அமைப்பு உள்ளது தெரியும்.அது திப்பு சுல்தான் பின்னர் கட்டியது என்கிறார்கள்.இதை தெற்கு கோட்டை என்றும் வாதாபி கோட்டையை வடக்கு கோட்டை என்றும் சொல்கிறார்கள்.இன்னும் கூர்ந்து பார்த்தீர்கள் என்றால் வாதாபி குடவறை கோவில்கள் கூட தெரியும்.


இது முதல் குகை 


18 கைகளுடன் நடராஜர்.ஒவ்வொரு கையும் பரதத்தின் ஒவ்வொரு அடவுகளையும் காண்பிக்கிறது.
துவாரபாலகர்கள் 
சங்கர நாராயணர்.ஒரு பக்கம் விஷ்ணு லக்ஷ்மியும் மறுபக்கம் சிவன் பார்வதியும்...


பிருகு முனிவரும் அர்த்த நாரீஸ்வரரும் 


ஓவியர் மணியம் அவர்கள் ஒரு முறை கன்னட நாட்டிலுள்ள பாதாமி என்ற இடத்திற்கு சென்று அங்கிருந்த சிற்பங்களை ரசித்து வியந்து ஊள்ளார். மன்னர்கள் காலத்தில் இச்சிற்பங்கள் எப்படி வடிக்கப்பட்டு இருந்திருக்கும் என்ற கற்பனையை ஓவியமாக தீட்டி அன்றைய கல்கி இதழில் வெளியிட்டுள்ளார். இவ்வோவியங்களுக்கு அவர் வைத்திட்ட பெயர் 'வாதாபி மடல்'இதே ஓவியங்களின் மறுபதிப்பை ஒரு பழைய மாத இதழில் (ஓம் சக்தி) பார்க்க நேரிட்டது. அவற்றின் ஸ்கேன்கள் அப்படியே இங்கே....  இங்கே கிளிக்கி பார்க்கவும்   coutesy: comicstamil.blogspot.in

மேலே பார்த்த பிருகு முனிவரும் அர்த்த நாரீஸ்வரரும்  படத்தை மணியம் அவர்களின் கை வண்ணத்தில்  
குகையின் மேற்புறங்களில் கூட சித்திரங்கள் அமைத்திருகிறார்கள்.ஒரு சிலவற்றில் வண்ணங்கள் கூட காண படுகிறது.ஆயிரத்து ஐநூறு ஆண்டுகள் முன்னாடி போடப்பட்ட வண்ணம்...
குகை கோவில்கள் அமைக்கும்போது எவ்வளவு precision இருக்க வேண்டும் இல்லையா...
இறுதியில் வீடியோ இணைத்துள்ளேன்.அதனால் ரெம்ப விரிவாக பிரஸ்தாபிக்கவில்லை  .ஒவ்வொரு குகைக்குள்ளும் உள்ள முக்கியமானவற்றை மட்டும் பகிர்ந்து கொள்ளுகிறேன்.
 இரண்டாம் குகைக்கு போவோமா...
இங்கே செல்ல நேர்ந்தால் குகைகளின் மேற்புறம் ceiling இல் செய்யபட்டிருக்கும் வேலை பாடுகளை மிஸ் செய்து விடாதீர்கள். 


வாதாபி  திரு விக்ரமன் or  வாமன அவதாரம் 
மகாபலிபுரத்தில் உள்ள திரு விக்கிரமன் சிலை .... இரண்டுக்கும் எவ்வளவு ஒற்றுமை .தமிழர்கள் தான் இதை  செய்திருப்பார்கள் என்பதற்கு இதை விடவும் சாட்சி வேண்டுமோ  ...


வாதாபி  வராக மூர்த்தி 
மகாபலிபுரத்தில் உள்ள  வராக மூர்த்தி  சிலை 


அப்போவே செஸ் விளையடுவாங்களோ  ?


மூன்றாம் குகை 
நான்காவது சமணர் குகை.
இப்போது வீடியோ வ பாருங்க...


சரி போன பதிவுல வாதாபிக்கே கூட்டிட்டு போறேன்னு சொல்லி இருந்தேன் இல்லயா...என்ன போலாமா..ரெடி ஆகிடீங்களா...

இப்போ நான் இங்க கொடுத்து இருக்குற link சை ஒவ்வொன்னா கிளிக் பண்ணி பாருங்க.360 டிகிரி view இருக்கு.

அதுல இருக்குற வளைந்த அம்பு குறிய கிளிக் பண்ணினா அதே play ஆக ஆரம்பிக்கும்.இல்லன்னா உங்க mouse அ click பண்ணியே வச்சுருந்தீங்கன்னாலும் play ஆகும்.

ஒவ்வொரு லிங்க் play ஆகி முடிச்சவுடனே அந்த view ல உங்களுக்கு அங்க அங்க சில சிகப்பு புள்ளிகள் தெரியும்.அத கிளிக் பண்ணினீங்கன்னா மற்ற இடங்களையும் பார்க்கலாம்.

ஒரு முறை பார்தீங்கன்னா  உங்களுக்கே புரியும். ready set go ... U R ON A VIRTUAL TOUR

Link 1: மொதல்ல கோட்டைக்கு போகலாமா...அங்க அங்க தெரியுற சிகப்பு புள்ளிகளை கிளிக் பண்ணி பாக்க மறந்துராதீங்க...

Link 2: upper sivalaya கோவிலுக்கு போவோமா...

Link 3:lower sivalaya (வாதாபி கோவில்) லும் பார்த்துருவோம்..

Link 4:கோட்டையின் பின்புறம் 

Link 5:பூதநாதர் கோவில்   

Link 6:ஏரிக்கரையில் உள்ள இன்னொரு கோவில் மல்லிகர்ஜுனர் கோவில்.(இதை போரில் வெற்றி பெற்ற உடன் மாமல்லர் கட்டினாருன்னு நினக்குறேன்) 

Link 7:குகை கோவில்கள் க்கு போவோமா..இங்க உள்ள எந்த சிகப்பு புள்ளிகளையும் மிஸ் பண்ணாம பாருங்க..

என்னங்க சொன்னபடி பாதாமிக்கு கூட்டிட்டு போயிட்டேன் இல்லயா...

இல்ல நான் நேர்லயே போய் தான் பார்க்கணும்னு நினைச்சீங்கன்னா இந்த தகவல்கள் உங்களுக்கு உபயோகமா இருக்கும். 

  • Location: Badami is located in Karnataka, 30 Kms from Bagalkot and 589 Km from Bangalore
  • Nearest Airport: Belgaum, 190 Km
  • Nearest Railway station: Hubli, 100 Km
  • Accomodation: There are plenty of options for staying in Badami, but most of them are lodges and low to medium end hotels. 

Friday, August 10, 2012

வாதாபி நகர விஜயம்!!!-3

இத படிக்கும் முன் இதையும் வாதாபி நகர விஜயம்!!!-1 and  வாதாபி நகர விஜயம்!!!-2  கொஞ்சம் படிச்சுட்டு வாங்க

வாதாபி நகரத்தில் சிவகாமி சபதத்தோடு தொடர்புடைய பார்க்க வேண்டிய இடங்கள் இரண்டு.
அவை  

  1. வாதாபி கோட்டை (Badami Fort)
  2. வாதாபி குடவறை கோவில்கள் (Badami Cave Temples)
எனக்கு தெரிஞ்சு வாதாபி ஏன் பாதாமியா மாறிருக்கும்னா கன்னடத்துல வா(தமிழ்) அப்படின்னா பா ன்னு சொல்லுவாங்க...    ...தா அப்படியே இருக்கு.பி ஏன் மி யா மாறுச்சுன்னு தெரியல...;-) இங்க உள்ளவங்க இங்க உள்ள மலைத்தொடர்கள் badam நிறத்துல இருக்குறதால இந்த பெயர் மாறிருக்கும்னு சொல்றாங்க...

வாதாபி கோட்டைக்கு உள்ளே நுழைவதற்கு முன் ஒரு பெரிய  ஏரி  இருக்கிறது என்று சொன்னேன்  அல்லவா ...அதனுடைய முழு படம் ....

ஐந்தாம் நூற்றாண்டை   சேர்ந்த படித்துறையும் ஏரியும்....
இன்னும் மக்கள் புழக்கத்துல இருக்கு  
சரி வாங்க உள்ளே போகலாம்...;-)
இது ஒரு சின்ன நுழைவாயிலாக தான் இருக்கிறது...இதோடு
சேர்ந்து ஒரு சுற்று சுவர் இருந்திருக்க வேண்டும்.அது சிதிலமடைந்த நிலையில் காண படுகிறது.museum க்கு நுழைந்த போதே ஒரு நுழைவாயில் வழியா நுழைஞ்ச ஞாபகம் இருக்கு.
அதை போட்டோ எடுக்காம விட்டுட்டேன்.
அதுதான் முதல் நுழைவாயில்.
உள்ளே நுழைந்தால் இன்னொரு பெரிய நுழைவாயில் இருக்கிறது.ஏனோ அதை கற்களை வைத்து மறைத்து வைத்திருகிறார்கள்.இதுவே கோட்டைக்கு போகும் பிரதான வாயிலாக இருந்திருக்க வேண்டும் என்று தோன்றுகிறது.முன்னே பார்த்த வாயில் reception ஒ என்னமோ... வழி நெடுக காவலர்கள் இருந்துருப்பாங்க இல்ல..
இந்த கோட்டை இவ்வளவு காலம் நீடித்து இருப்பதற்கு காரணம் இது இரண்டு குன்றுகளுக்கு உள்ள இடைவெளியில் கட்ட பட்டிருகிறது.இடைவெளிக ளில் கற்சுவர்கள் அமைத்து கட்டி இருக்கிறார்கள். மாடமாளிகைகள் எல்லாம் குன்றின் மேற்புறத்தில் சம வெளியில் இருந்திருக்க வேண்டும்.
Image:
A Wandering mind (
 எல்லா இடத்துலயும் ஆர்வ கோளாறுல நானே நின்னு foto எடுத்துகிட்டேன்...  எவ்வளவுதான் இமேஜ் அ crop பண்றது..அதான்... )
நடை பாதை தளங்கள் அழகா அமைச்சுருகாங்க...இது அப்போவே அமைச்சதா இல்ல இப்போ மக்கள் வசதிக்காக போட பட்டதான்னு தெரியல...  அவ்வளவு அழகா கோவில்களே கட்டினவங்களுக்கு  நடை பாதை  தளங்கள்  அமைக்கிறதா  பெரிய விஷயம்...!!! ( படத்தில் இருப்பவர்களுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்ல.:-)..Image:  A Wandering mind

மேற் பகுதிக்கு போகும் வழிகளின் புகை படங்கள் கீழே...Pulikesi to Sivagami: இந்த அரண்மனைக்குள்ளே உன்னைச் சிறைப்படுத்தி வைத்திருப்பதாகவும் எண்ண வேண்டாம். உனக்கு இஷ்டமான போது நீ இந்த மாளிகையை விட்டு வெளியே போகலாம். வாதாபி நகரைச் சுற்றிப் பார்த்து விட்டு வரலாம். உங்கள் காஞ்சியைப் போல் எங்கள் வாதாபி அவ்வளவு அழகாயில்லாவிட்டாலும், ஏதோ பார்க்கத் தகுந்த காட்சிகள் இங்கேயும் இருக்கின்றன. இந்த அரண்மனை வாசலில் காவல் காப்பவர்கள் உன்னைச் சிறை வைப்பதற்காக இங்கு இருக்கவில்லை. உனக்கு ஏவல் புரிவதற்காக இருக்கிறார்கள்.

வாதாபியின் வீதியில் சிவகாமி நடனம் ஆடிய போது வானமும் பூமியும் அசைவற்று நிற்பது போல் தோன்றியது. வீதியிலே போய்க் கொண்டிருந்த வாதாபி நகர மாந்தர்கள் அப்படி அப்படியே நின்று அந்த விந்தையைப் பார்த்தார்கள். பந்தமுற்ற தமிழகத்து ஸ்திரீ புருஷர்கள் அசைவற்று நின்றார்கள்; கையில் சாட்டை பிடித்த கிங்கரர்களும் சும்மா நின்றார்கள்..Image:  A Wandering mind
போகிற வழிகளில் இந்த மாதிரி சின்ன சின்ன சிற்பங்கள் அங்க அங்க இருக்கு..

Kalki:ஆயிரத்து முந்நூறு வருஷங்களுக்கு முன்னால் பரத கண்டத்தில் பிரசித்தி பெற்றிருந்த மூன்று சாம்ராஜ்யத் தலைநகரங்களில் வாதாபி ஒன்றாகும். கன்யாகுப்ஜத்தையும் காஞ்சியையும் போலவே வாதாபி நகரத்தின் புகழும் அந்த நாட்களில் கடல் கடந்து வெகுதூரம் சென்றிருந்தது. ஒவ்வொரு தடவை திக்விஜயம் செய்து திரும்பும் போதும் புலிகேசியின் படை வீரர்கள் வெற்றி கொண்ட தேசங்களிலிருந்து ஏராளமான செல்வங்களைக் கொண்டு வந்து வாதாபியில் சேர்த்து வந்தார்கள். இதனால் வாதாபி நகரம் வளங்கொழிக்கும் நகரமாய் அந்தக் காலத்தில் விளங்கிற்று. அந்நகரில் வர்த்தகம் சிறந்தோங்கியிருந்தது. தூர தூர தேசங்களிலிருந்தெல்லாம் அந்நகருக்கு இரத்தின வியாபாரிகள் வந்து போய்க் கொண்டிருந்தார்கள். .Image:  A Wandering mind

Kalki: பிரசித்தி பெற்ற ஜைன ஆலயங்களும் பௌத்த மடங்களும் வாதாபியில் இருந்தபடியால், பற்பல நாடுகளிலிருந்தும் யாத்திரிகர்கள் அந்நகருக்கு வருவதுண்டு. இதனாலெல்லாம் வாதாபி நகரம் எப்போதும் கலகலப்பாகவே இருந்து வந்தது. அதிலும் சக்கரவர்த்தி தலைநகரில் இருக்கும் போது கேட்க வேண்டியதில்லை. சக்கரவர்த்தியைப் பேட்டி காண்பதற்காகச் சிற்றரசர்கள் காணிக்கைகளுடன் வருவார்கள். சீனம், பாரசீகம் முதலிய தூர தூர தேசங்களிலிருந்து அரசாங்கத் தூதர்கள் வருவார்கள். மாடமாளிகைகள், கூடகோபுரங்களுடன் விளங்கிய வாதாபியின் வீதிகள் எப்போதுமே திருவிழாக் காலத்தைப் போல் ஜனக்கூட்டம் நிறைந்து விளங்கும். வண்டிகள் வாகனங்களின் சப்தம் ஓயாமல் கேட்ட வண்ணமிருக்கும். 
Kalki:காஞ்சி வீதிகளில் தெரிந்தவர்கள் சந்தித்தால் ஒருவருக்கொருவர் அன்புடனும் மரியாதையுடனும் முகமன் கூறிக் கொண்டார்கள். வாதாபியின் தெருக்களிலோ, தெரிந்தவர்கள் சந்திக்கும் போது இடி முழக்க ஒலியில் சிரித்து ஆர்ப்பரித்தார்கள். காஞ்சியில் எஜமானர்கள் வேலைக்காரர்களுக்குக் கட்டளையிடும் போது கூட அன்புடனும், ஆதரவுடனும் பேசினார்கள். வாதாபியில் எஜமானர்கள் வேலைக்காரர்களிடம் பேசும் போது கடுமையான மொழிகளையும் துர்வசனங்களையும் கையாண்டார்கள். 

கொஞ்ச தூரம் நல்ல பாதையா இருக்கு அப்புறம் சில இடங்களில் கொஞ்சம் கடினமா இருக்கு...ஆனா ஏறிடலாம்.வயசனவங்கன்னா கொஞ்சம் கஷ்டம் தான்...நிறைய நடக்கணும்.


இத பார்த்தீங்கன்னா உங்களுக்கே புரியும்.யாராவது தெரிஞ்சவங்களோட போனாதான் நல்லது..இல்லன்னா தொலைஞ்சு போய்டுவோம்...
இமேஜ் : http://musafirhuyaron.blogspot.in
இந்த பாதை வழிய நடந்து போன இந்த கோட்டையின் மேற்புறத்திற்கு சென்று விடுகிறோம்.அங்கு சமவெளியா இல்லன்னாலும் மாளிகைகள் இங்கே இருந்திருக்க வாய்ப்பு இருக்கிறது...இனி  மேலே என்ன என்ன இருக்கு ன்னு பாக்கலாம்.

அங்கே தெரிவது  காவல் காரர்கள் இருந்து காவல் புரியும் watchtower
இன்னும் கொஞ்சம் பக்கத்தில் பார்ப்போமா 
ஆனா இது 14 th century சேர்ந்ததுன்னு  சொல்றாங்க (புலிகேசி காலம்  7th century...)  இமேஜ் : http://musafirhuyaron.blogspot.in
இதன் பக்கத்து குன்றில் ஒரு சிறிய கோவில் இருக்கிறது .வாதாபி விநாயகரை பரஞ்ச்யோதி இந்த கோவிலில் இருந்துதான் எடுத்து வந்ததாக கூற படுகிறது.இதை தான் வாதாபி விநாயகர் கோவில் என்று சொல்லுகிறார்கள்
இந்த படத்தில் வாட்ச் tower , விநாயகர் கோவில் ,கீழே உள்ள museum,மேலே உள்ள சிவன் கோவில்அனைத்தும் தெரிகிறது .கீழே இடது பக்கம் தெரியும் கோவில் lower சிவாலயா ... இந்த கோவில் தான் விநாயகர் kovil இங்கே இருந்து தான்  விநாயகரை எடுத்தாரோ ....
கோட்டைக்குள் அரண்மனை அல்லது அறைகள்  போன்ற அமைப்பு இருந்த அடையாளத்திற்கு சுற்று சுவர் தான் இருக்கு
இது தானிய கிடங்கா இருந்துருக்குமோ...இல்லை ஆயுத கிடங்கா...
அங்கே தூரத்தில் தெரிவதும் ஒரு watch tower தான்...ஆனா  நல்லா விசாலமானது...
இது மேலே உள்ள கோவில்.upper sivalaya என்று அழைகிறார்கள். 
இந்த கோவிலோட வீடியோ வ இங்க பார்க்கலாம்.இந்த கல்வெட்டு மாமல்லரோட கல்வெட்டான்னு   தெரியல... 

நம்ம இதுவரைக்கும் பார்த்ததோட வீடியோ தொகுப்பு...


இது ஏரிக்கரையில் உள்ள பூதநாதர் கோவில்...
.

இந்த கோவிலோட வீடியோ வ இங்க பார்க்கலாம்.


இவர்தான் வாதாபி விநாயகர்.திரு செங்காட்டுகுடியில் இன்றும் கம்பிரமாக அருள் பாலித்து கொண்டு இருக்கிறார்."குதிரை மேலிருந்து இறங்கி வாசலை நெருங்கி வந்தார். அப்போது அந்த வாதாபிக் கோட்டை முன் வாசலில் அமைக்கப்பட்டிருந்த அருமையான வேலைப்பாடமைந்த சிற்பங்கள் அவர் கவனத்தைக் கவர்ந்தன. அந்தச் சிற்பங்களிலே கணபதியின் விக்ரகம் ஒன்றும் இருந்தது. பரஞ்சோதி அதன் அருகில் சென்று கைகூப்பி நின்றார். மனத்திற்குள் பின்வருமாறு பிரார்த்தனை செய்து கொண்டார்: 'விக்னங்களையெல்லாம் நிவர்த்தி செய்யும் விநாயகப் பெருமானே நாங்கள் வந்த காரியம் நன்கு நிறைவேற அருள்புரிய வேண்டும் என் குருதேவரின் குமாரி சிவகாமி தேவிக்கு எவ்விதத் தீங்கும் நேரிடாமல் அவரைப் பத்திரமாய் அவருடைய தந்தை ஆயனரிடம் ஒப்புவிப்பதற்குத் துணைசெய்ய வேண்டும். என்னுடைய இந்தப் பிரார்த்தனையை நீ நிறைவேற்றி வைத்தால் பதிலுக்கு நானும் உனக்கு இந்தக் கோட்டைத் தாக்குதலில் எவ்வித தீங்கும் ஏற்படாமல் பார்த்துக் கொள்கிறேன். உன்னை என் பிறந்த ஊருக்குக் கொண்டு போய் ஆலயங் கட்டிப் பிரதிஷ்டை செய்வித்துத் தினந்தோறும் பூஜையும் நடத்துவிக்கிறேன். "

என்னோட அடுத்த பதிவுல உங்கள நான் வாதாபிக்கே கூட்டிட்டு போகபோறேன்...அங்கே நீங்க நின்னு பார்த்தா எப்படி இருக்குமோ அப்படி இருக்கும்...பொய் இல்லங்க நிஜம்...

இதன் தொடர்ச்சி :

Wednesday, August 8, 2012

வாதாபி நகர விஜயம்!!!-2

இத படிக்கும் முன் இதை  வாதாபி நகர விஜயம்!!!-1 கொஞ்சம் படிச்சுட்டு வாங்க


அட...படிச்ச எல்லாருக்கும் என் பயண கட்டுரை பிடித்ததற்கு ரெம்ப சந்தோசம் and நன்றிகள்....இந்த பதிவுலயும் முடிக்கலன்னா திட்ட மாட்டீங்க தானே...

வாதாபி கோட்டைக்குள் நுழைவதற்கு முன்னால் சிவகாமியின் சபத கதை சுருக்கத்தை பார்த்து விடுவோம்...ஏன் னா உள்ள நுழையும் போது என் கணவருக்கு இந்த கதைய சொல்லிட்டே தான் நுழைந்தேன்.அவர் இப்புதினத்தை படிச்சதில்லை...அதுனால நான் ரெம்ப ஓவர் excited (!!!) டா கோட்டைக்குள் நுழையும் போது அவருக்கு ஒன்னும் புரியல...அதே மாதிரி இந்த பதிவ படிக்கற யாராச்சும் சிவகாமியின் சபதம் படிக்காம இருந்தாங்கன்னா அவங்களையும் படிக்க வைக்குரதுக்குதான் :-) நம்ம கால சக்கரத்தில் கூட்டிட்டு போறதுக்குத்தான் (கல்கியோட effect )இந்த கதை சுருக்கம்... 

கதை சுருக்கம் :

இப்புதினத்தின் கதையானது காஞ்சியில் ஏற்பட்ட போர்ச் சூழலையும், அதன் தொடர்ச்சியாக சாளுக்ய நாட்டின் தலைநகர் வாதாபியின் மீது பல்லவர் போர்தொடுத்தது பற்றிய செய்திகளையும் உள்ளடக்கியதாகும்.

இந்த சூழ்நிலையில் நாட்டியகலையில் சிறந்து விளங்கும் ஆயனர் மகள்சிவகாமி யும் பல்லவ மன்னனின் மகனும் காதல் கொள்கின்றனர்.
மகேந்திர பல்லவனுக்கும் தன் மகன் மாமல்லன் சிவகாமியை 
மணந்து கொள்ளவதில் விருப்பம் இல்லை.


நாகநந்தியும் (வாதாபி சக்கரவர்த்தி யின் தம்பி ) சிவகாமியின் பால் ஈர்க்கபடுதல்,வாதாபி மன்னனின் காஞ்சி விஜயம்,காஞ்சியை விட்டு அவன்செல்லும் போது அவன் நடத்தும் அராஜகம் ,சிவகாமியை சிறை பிடித்து போதல்,வாதாபி நகர தெருக்களில் சிவகாமி நடனம் ஆடி தமிழ் மக்களைகாப்பாற்றுதல் என்று கதை தொடர்கிறது.சிவகாமியை மீட்க வரும் மாமல்லன் உடன் சிவகாமி வர மறுக்கிறாள்... காரணம் அவள் செய்த சபதம்...     

சிவகாமி நாக நந்தியிடம் கீழ் கண்டவாறு சபதம் ஏற்கிறாள் 

"வாதாபியைவிட்டு இப்போது கிளம்ப மாட்டேன். எப்போது புறப்படுவேன் தெரியுமா? 
நீங்கள் பயங்கொள்ளி என்று அவதூறு கூறிய வீர மாமல்லர், ஒரு நாள் இந்த வாதாபி நகர் மீது படை எடுத்து வருவார். நரிக்கூட்டத்தின் மீது சிங்கம் பாய்வதைப்போல, சாளுக்கிய சைன்யக்களை சின்னாபின்னம் செய்வார். நாற்சந்தி முனையிலே எங்களை நடனம் ஆடச்செய்த மாபாதக புலிகேசியை எமலோகம் அனுப்புவார்
. தமிழ்ப் பெண்களையும் ஆடவர்களையும் எந்த வீதிககளில் கட்டி இழுத்துக்கொண்டு போனார்களோ, அந்த வீதிகளில் இரத்த ஆறு ஓடும். அவர்களை எந்த நாற்சந்தி முனையிலே சவுக்கால் அடித்தார்களோ, அங்கே வாதாபி மக்களின் பிரேதங்கள் நாதியற்றுக் கிடக்கும். வாதாபி நகரத்தின் மாட மாளிகைகள் கூட கோபுரங்கள் எரிந்து சாம்பல் ஆகும். சாளுக்கியத் தலைநகர் சுடுகாடாக ஆகும். இத்தனைக்குப் பிறகு, போரில் வெற்றி பெற்ற வெற்றி மாலையோடு, வீர மாமல்லர் வருவார். என்னைக் கரம் பற்றி அழைத்துச் செல்ல வருவார். அப்போதுதான் நான் புறப்படுவேன். நீர் அனுப்பிப் போக மாட்டேன்.பல்லக்கில் ஏற்றி அனுப்பினாலும் போக மாட்டேன். யானை மீது ஏற்றி அனுப்பினாலும் போக மாட்டேன்”

இதுதான் சிவகாமியின் சபதம்.

okay...
இப்போ இதே ஒரு சினிமா கதையா இருந்தா ஒரு சோக பாடல் ஒன்னு வந்துருக்கும்.நம்மளோடது கல்கியோட கதை ஆச்சே...heroine ஹீரோக்காக காத்திட்டு இருக்காங்க...அப்போ ஹீரோ இங்க வந்தா நல்லா இருக்கும் அப்படின்னு நினச்சு ஒரு டூயட் சாங் இப்போ வருது....;-)

வேற ஒன்னும் இல்லங்க...நம்ம வந்தான் வென்றான் பட பாடல் தான்....topsya சிவகாமிய கற்பனை பண்றது கொஞ்சம் கஷ்டம்தான்...(கல்கி இத பார்த்திருந்தா என் நடுமண்டைல ஓங்கி ஒரு குட்டு வச்சுருப்பார்... )...இருந்தாலும் நமக்கு வேற வழி இல்ல...அப்படியே ஜீவாவ மாமல்லரா நினைச்சுகிட்டு இந்த பாட்டை பார்த்துட்டு வாங்க...இந்த பாட்டு fulla வாதாபி ல எடுத்த பாடல்...hd சாங்...ஓவர் டு வீடியோ...பாட்ட பார்த்துடீங்களா...சிவகாமி இந்த மாதிரி சபதம் எடுத்துட்டு வாதாபி ல வெயிட் பண்ணிட்டு இருக்கா...மாமல்லர் வரார்...எப்படி ஒளிந்து மறைந்து அவள எப்படியாவது கூட்டிட்டு போய்டனும்னு வரார்...

சிவகாமியைப் பார்க்கிறார். ஒருவரை ஒருவர் பார்த்துப்பேச நேரம் இல்லை. விவரிக்க நேரம் இல்லை. அழைக்கிறார். மறுக்கிறாள்.

‘நான் வரமாட்டேன். நான் சபதம் செய்து இருக்கிறேன். தமிழ்ப் பெண்களையும், ஆடவர்களையும் எந்த வீதிகளில் கட்டி இழுத்துக்கொண்டு போனார்களோ, அந்த வீதிகளில் இரத்த ஆறு ஓட வேண்டும். எந்த நாற்சந்தி முனையிலே சவுக்கால் அடித்தார்களோ, அங்கே வாதாபி மக்களின் பிணங்கள் நாதியற்றுக் கிடக்க வேண்டும். வாதாபி நகரத்தின் மாட மாளிகைகள் கூட கோபுரங்கள் எரிந்து சாம்பலாக ஆக்கப்பட வேண்டும். இந்த வாதாபி தீக்கு இரையாக ஆக்கப்பட வேண்டும்’ என்கிறாள்.

மாமல்லர் கோபத்தோடு திரும்புகிறார்...ஒன்பது ஆண்டுகளுக்கு பிறகு ஒரு மிக பெரிய சைன்யத்தை திரட்டி கொண்டு வந்து போர்  தொடுக்கிறார்  ..இதன் பிறகு நடப்பதுதான் சரித்திர புகழ் பெற்ற வாதாபி போர்...போர் என்றால் எப்படி பட்ட போர்...அறிஞர் அண்ணாவின் வைர வரிகளிலே சென்று வாதாபியிலே  என்ன நடந்தது பார்ப்போமா...

வாதாபி, சாளுக்கியத்தின் தலைநகரம் - எழில்மிக்க இடம். பல்லவப்படை, அந்த அழகு நகரை, அடியோடு அழித்து விட்டது. சாளுக்கிய நாட்டின் மீது, பல்லவன் நரசிம்மன் போர் தொடுத்தான் - போரென்றால், மிகப் பயங்கரமானது; வரலாற்றிலே மிகமிகக் குறிப்பிடப்பட வேண்டிய சம்பவம்.வாதாபியின் அழிவுபோல், வேறெந்தப் போரிலும், வேறெந்த நகருக்கும் அழிவு நேரிட்டதில்லை என்று கூறுவர் - அவ்வளவு பயங்கரமான அழிவு. 

சாளுக்கியனின் படைகள், சண்ட மாருதத்தில் சிக்கிய கலம் சுக்கு நூறாவது போல, சின்னா பின்னமாயிற்று. ஊர், உருத் தெரியாது அழிந்தது. புலிகேசி மன்னனும் களத்திலே பிணமானான். 
பல்லவப் படையின் தாக்குதலால், சாளுக்கிய சாம்ராஜ்யமே படுசூரணமாகி விட்டது.காஞ்சிபுரம் - வாதாபி! இடையே, எவ்வளவு தொலைவு!! இடையே, எவ்வளவு ஆறுகள், காடுகள், நாடு நகரங்கள்! இவ்வளவையும் தாண்டிச் சென்று, சிங்கத்தை அதன் குகையிலே சென்று தாக்கிக் கொன்றிடும் வீரம்போல பல்லவனின் படை, மாற்றானின் மணிபுரிக்குச் சென்று, தாக்குதலை நடத்தி வெற்றி பெற்றது.
Courtesy : http://annavinpadaippugal.info/Kurunavalgal/pidisambal_1.htm 


இப்போ நீங்க இந்த சரித்திர புகழ் வாய்ந்த வாதாபி கோட்டைக்கு உள்ளே செல்ல முழுசா தயார் ஆகிடீங்க....கோப படாதீங்க...அடுத்த பதிவுல கோட்டைக்கு உள்ள கண்டிப்பா போய் பார்த்துடலாம்...

இதன் தொடர்ச்சி :


LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...