Monday, November 26, 2012

வெண்கல விளக்குகள் விளக்க ஒரு எளிய வழி


கார்த்திகை வந்தாச்சு.எல்லா  வேலைகளுக்கும் நடுவே வெண்கல விளக்குகளை பள பள என்று விளக்குவது ஒரு பெரிய வேலை தானே...அதுவும் நிறைய விளக்குகள் இருந்தால் அதிக அளவு நேரம் இதற்கே செலவிட வேண்டி இருக்கும்.அந்த நேரத்தை குறைப்பதற்க்கான ஒரு எளிய வழி  தான் இந்த பதிவு.

இந்த வழி அவள்விகடனிலையோ சிநேகிதிலையோ படிச்சா நினைவு...இந்த முறை உபயோகபடுத்தி பார்த்தேன்.

தேவையான பொருட்கள் :
கையளவு புளி 
ஒரு பெரிய பாத்திரம் 

முதலில் கையளவு புளி எடுத்து  கொண்டு பாத்திரம் முழுக்க நீர் நிரப்பி அதில் கரைத்து கொள்ளவும்.

பின் அனைத்து விளக்குகளையும் இந்த நீரில் ஊற வைக்கவும்.


ஒரு நாள் இரவு முழுவதும் ஊறலாம்.

  காலையில் விளக்குகளை எடுக்கும் போதே நல்ல பள பளப்பாகத்தான் இருந்தது.பின் நீங்கள் உபயோகிக்கும் பவுடர் (நான் பீத்தாம்பரி உபயோக படுத்தினேன்) கொண்டு லேசாக தேய்த்து கழுவி விடுங்கள்.


எப்போதும் ஆகும் நேரத்தை விட பாதி கூட ஆக வில்லை.

அனைவருக்கும் கார்த்திகை தீப திருநாள் வாழ்த்துக்கள்.

Thursday, November 15, 2012

கனவு இல்லத்தின் பதிவுகள் கொண்ட புத்தகம்

சினேகிதியில் வந்த கனவு இல்லத்தின் பதிவுகள் கொண்ட 32 பக்க துணை புத்தகம் இதோ உங்கள் பார்வைக்கு 

word  வடிவில் பார்க்க 

https://docs.google.com/open?id=0B48AKfLIF1XNaTNreEFUX2xSa2c

pdf வடிவில் பார்க்க 

Wednesday, November 7, 2012

பூக்கோலம்

தீபாவளிக்கு எல்லோரும் ரெடி ஆகிட்டே இருக்கீங்களா...
புது துணி , பட்டாசு க்கு அப்புறம் தீபாவளி ஸ்பெஷல் கோலம் வேற இருக்கே...
உங்களுக்காக அதிக நேரம் எடுக்காம எளிதா போடற பூக்கோலங்கள் இந்த பதிவுல ஷேர் பண்ணுறேன்.

இந்த கோலங்கள் அனைத்தும் எங்க டவுன்ஷிப்பில் நடந்த ஒரு போட்டியில் போடப்பட்டது.     


இதையும் பாருங்க 

Sunday, November 4, 2012

t ஷர்ட் stenciling

என்  கணவர் சமீபமா ஒரு t ஷர்ட் வாங்கனும்னு இணையத்துல தேடிட்டு இருந்தார்.யாரோ wrestling பிளேயர் jhon cena வாம்...அவர் டிசைன் பண்ணின ஷர்ட் போல .அதுவும் particular wording வேணும்னு பார்த்திட்டு இருந்தார்.ஆனா t ஷர்ட் black கலர் ல மட்டும் தான் இருந்துது...இவரும் நீல கலர் ல தேடி பார்த்துட்டு கிடைக்கலன்னு வேலைக்கு கிளம்பி போய்ட்டார்.அது என்ன அப்படி ஒரு ஊர்ல இல்லாத ஷர்ட் ன்னு பார்த்தா இதோ இந்த படத்தில இருக்கறதுதான்... 


சரி வேலை முடிஞ்சு வரது குள்ள நம்மளே ஒரு surprise கொடுக்கலாம்னு பண்ணினதுதான் இந்த DIY ப்ராஜெக்ட்.   
வீட்டில் இருந்த ஒரு சில பாக்கிங் அட்டைகள் எடுத்து அதில் படத்தில் உள்ள wordings யை அப்படியே எழுதி கொண்டேன்.அட்டை கொஞ்சம் தடிமனாக இருப்பது நல்லது.வெறும் பேப்பரில் என்றால் நகராமல் இருக்க பின் செய்ய வேண்டி இருக்கும். 


பின் cutter கொண்டு படத்தில் காண்பித்து போன்று உள் பக்கமாக  நறுக்கி எடுக்க வேண்டும்.


இப்போது ஸ்டென்சில் கள்  தயார்  .இதை வீட்டில் இருந்த ஒரு நீல கலர் ப்ளைன் t ஷர்ட் மீது வைத்து வெள்ளை வண்ணத்தை brush கொண்டு தீட்டினேன்(acrylic colors / Fabric paint).ப்ளூ அண்ட் வைட் beautiful sight இல்லையா..அதுனால தான் இந்த கலர் combination . !!!

அடியில் அதாவது சட்டையின் உள்பக்கம் சில செய்தி தாள்களை மடித்து வைத்து கொள்ள வேண்டும்.அப்போது நீங்கள் முன்பக்கம் செய்யும் கலர் சட்டையின் பின் பக்கம் படியாமல் இருக்கும்.


ஸ்டென்சில் ஐ எடுக்காமல் இரண்டு மூன்று முறை கலரை கோட் செய்து கொண்டேன்.இப்போது t ஷர்ட் தயார்.இதை ஒரு நாள் முழுவதும் காய விடுங்கள்.நன்றாக காய்ந்த உடன் சட்டையை உள் பக்கமாக திருப்பி மிதமான சூட்டில் அயன் செய்து கொள்ள வேண்டும்.அவ்வளவு தான் .துவைத்தாலும் இது போகாது.ஆனால் நேரடியாக அயன் செய்யாமல் ஒவ்வொரு முறையும் திருப்பி போட்டு அயன் செய்ய வேண்டும்.வீடு திரும்பிய கணவருக்கு நிஜமாவே ரெம்ப surprise ...பின்னே அந்த சட்டை விலை 1500 ஆச்சே...நான் வெறும் நாலு டப்பா வெள்ளை கலர் fabric பெயிண்ட் மட்டும் வைச்சு அவர் ஆசையை நிறைவேத்திருக்கேனே  ..(ஓரளவுக்காவது ஒரிஜினல் சட்டை மாறி தானே வந்திருக்கு?)சிம்பிள் ஐடியா தானே..
குழந்தைங்க t ஷர்ட் ளையும் நீங்களே டிசைன் பண்ணலாம்.ஏழு கலர் ல ப்ளைன் t shirts வாங்கி ஒவ்வொரு சட்டையிலும் அந்த சட்டை வண்ணத்தின் பெயர், ஒரு கிழமையின் பெயர்,ஒரு பழத்தின் பெயர்,ஒரு காய்கறியின் பெயர் ஸ்டென்சில் பண்ணி கொடுத்தீங்கன்னா விளையாட்டா அவங்க எல்லா ஸ்பெல்லிங்கும் படிச்சுக்குவாங்க.வண்ணங்களையும் தெரிஞ்சுக்குவாங்க.      

Friday, November 2, 2012

கனவு இல்லம் ஐடியாக்கள் மஞ்சுளா ரமேஷ் சிநேகிதியில் !!!!

கனவு இல்லம் followers , விசிட்டர்ஸ் க்கு   ஒரு குட் நியூஸ்...

நம் கனவு இல்லம் பிளாக் மற்றும்  facebook பக்கத்தில் பகிர்ந்து கொண்ட ஐடியாக்கள் மஞ்சுளா ரமேஷ் சிநேகிதி புத்தகத்தில் தனி இணைப்பாக வந்திருக்கிறது...எல்லோரும் வாங்கி படியுங்கள்...நானே இன்னும் பார்க்கல..புத்தகம் கொரியர் ல வந்துட்டே இருக்கு...  

சில சமயம் சில வீடுகளுக்குப் போகும்போது அத்தனை அழகாக அலங்கரித்திருப்பார்கள். 'ம்... நமக்கும் இவர்களை மாதிரி நிறைய பணம் இருந்தா நாமளும் இதை மாதிரி பண்ணலாம்' என பெருமூச்சு விடுவோம். வீட்டை அழகு வீடாக்க பெரியதாக பணம் தேவையில்லை. ஐடியா இருந்தால் போதும். இதோ நமது சினேகிதி கோமதி அழகழகான ஐடியாக்களைத் தருகிறார் பாருங்கள்... இவற்றைப் பின்பற்றி அனைவரையும் பிரமிக்க வையுங்கள்... 

மேலும் விவரங்களுக்கு நவம்பர் மாத மஞ்சுளா ரமேஷின் சினேகிதி இதழைப் வாங்கி படியுங்கள்

எல்லோரும் ஸ்வீட் எடுத்துகோங்க....

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...