Showing posts with label recycling. Show all posts
Showing posts with label recycling. Show all posts

Tuesday, July 17, 2012

X-ray மறுசுழற்சி - 2

x ray வைத்து வேற என்னல்லாம் பண்ணலாம் ன்னு தேடின அப்போ இந்த படம் கிடைச்சுது...

image : www.grainsofearth.org


இதுவும் நல்ல ஐடியா தான் இல்லையா...spiral பைண்டிங் பண்றதுக்கு x ray use பண்ணிருக்காங்க... xerox கடை காரங்க வீடு வீடா பேப்பர் collect பண்றவங்க கிட்ட சொல்லி இப்படி x ray collect பண்ணி அவங்க கடையில easy யா recycle பண்ணலாம்... 
அது பேராசையோ...:-) முடிஞ்ச அளவு நம்ம வீட்டுக்கு எதாச்சும் xerox இல்ல spiral பைண்டிங் பண்ணினா நம்ம வீட்டுல இருக்கிற x ray க்கள மறு சுழற்சி பண்ணிக்கலாம்...     
இன்னொரு funny ஐடியா... தோரணம் கட்டலாம்...

image : www.grainsofearth.org

Sunday, July 15, 2012

X-ray மறுசுழற்சி

பழைய x -ray க்கள்   - இது எல்லார் வீடுகள் லயும்   கண்டிப்பா ஏதோ ஒரு அலமாரில ஒளிஞ்சுகிட்டு இருக்கும்...திரும்ப அது உதவாது...ஆனாலும் சில நேரம் நம்ம அந்த பழைய x ray க்கள தூக்கி போடாம வச்சுக்கிட்டு இருப்போம்...அத மறுசுழற்சி பண்ற ப்ராஜெக்ட்(!!) தான் இது...

x ray வையுமா அப்படின்னு நீங்க கேக்குறது எனக்கும் கேக்குது... ;-)

x ray ல வரையறதுக்கு பென்சில் தான் கரெக்ட் choice ... ஸ்கெட்ச் um உபயோக படுத்தலாம் .. ஆனா correction பண்ணனும்னா பென்சில்னா அழிச்சுட்டு வரஞ்சுக்கலாம்...

உங்களுக்கு வரைய  தெரிஞ்சா ஓகே... இல்லன்னா  உங்களுக்கு பிடிச்ச படத்து மேல x ray ய  வச்சு easy யா trace பண்ணிடலாம்...

பிறகு போஸ்டர் கலர்ஸ் வச்சு கலர் பண்ணிபருங்க...சும்மா சூப்பரா இருக்கும்...இது நான் அப்படி பண்ணின ஒரு painting ...நான் வரஞ்சுதான் பண்ணிருக்கேன்...போஸ்டர் கலர்ஸ் and 3d கலர்ஸ் உபயோக படுத்திருக்கேன்...



சின்னதா ட்ரை பண்ணி பாக்கனும்னா butterfly வரஞ்சு ட்ரை பண்ணி பாருங்க...3 னு  butterflies பெரிசு , சின்னது அதுக்கும் சின்னதா ஒண்ணுன்னு வரஞ்சு கலர் பண்ணி குழந்தைங்க ரூம்ல ஒட்டி பாருங்களேன்... 

Thursday, July 12, 2012

DIY - நீங்களே செய்யலாம் - 3/பிளாஸ்டிக் ஸ்பூன் recycling

இதும் ஒரு recycling project தான்
சே...சான்சே இல்ல..உட்கார்ந்து யோசிப்பாங்களோ அப்படின்னு என்னை யோசிக்க வச்ச ஒரு DIY project இது... பிளாஸ்டிக் spoons அ கண்டிப்பா தூக்கி வீசாம collect பண்ண ஆரம்பிச்சுருக்கேன்...என்ன ஒரு creativity ...  
Project & Image Courtesy :   ohmyindia







இதுக்குள்ள ஒரு பல்ப் வச்சு connection கொடுத்தா இப்படி வரும்...

இன்னும் கலர் ஸ்பூன்ஸ் o இல்ல இந்த ஸ்பூன்ஸ் ye கலர் பண்ணி வச்சா இன்னும் பிரமாதமா இருக்கும்... சின்ன பாட்டில்கள் ல்ல  கூட ட்ரை பண்ணி பாக்கலாம்..

Tuesday, June 12, 2012

செய்திதாள் மறுசுழற்சி (Newspaper Recycling)

இன்னைக்கு மொதல்ல படங்கள பாப்போம்...அப்புறம் விசயத்துக்கு வருவோம்... 







                                   

Image : ecocornerindia

என்னங்க எதுல செஞ்சு இருக்காங்கன்னு கண்டு பிடிச்சீங்களா ..
நானும் மொதல்ல பாக்கும் போது பிளாஸ்டிக்கோ இல்ல ஓலை கூடைகள் ன்னு நினச்சேன்...
ஆனா எல்லாமே செய்தி தாள்கள் ள செஞ்ச பொருட்கள்... 
இதெல்லாம் eco friendly paints ல கோட் பண்ணிருகங்கலாம்...கழுவினா கூட ஒன்னும் ஆகாதாம்...உடையவும் செய்யாதாம்...

இதுல செடிகள் நடவோ இல்ல laundry bag ஆவோ fruit basket ஆவோ இல்ல jewels வைக்கவோ ....நீங்க பிளாஸ்டிக் டப்பாக்கள் எதுக்கெல்லாம் use பண்ணுரீங்கள்லோ  அதுக்கு மாற்றா இத உபயோகிக்கலாம்... 

நானும் முடிஞ்சா இப்படி ஒன்னு செஞ்சு பார்த்துட்டு படங்கள் போடுறேன்...
வாங்கனும்ன்னு நினைசீங்கன்னா இந்த பொருட்கள் கிடக்குற இடம் 

Ecocorner
1 St floor , Skyzonel , High Street phenoix, lower parel, mumbai -13
Ph No : 022 3004 2350
Email Id: ecocornerindia@gmail.com

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...