Monday, October 22, 2012

கலசத்தை அம்மனாக அலங்கரிக்கும் முறை

தேவையான பொருட்கள் 

ஒரு வெண்கல செம்பு அல்லது எவர்சில்வர் செம்பு
மாவிலைகள்
குடுமி உள்ள தேங்காய்
அம்மன் முகம் 
Blouse துணிகள் - இரண்டு அல்லது மூன்று...


முதலில் ஒரு பலகையை நன்றாக கழுவி துடைத்து அதன் மேல் சிறு கோலம் இட்டு கொள்ளுங்கள்.மற்ற பூஜை சமயங்களில் இந்த பலகை மேலேயே அம்மன் அலங்கராம் செய்யலாம்.

 

இது சரஸ்வதி பூஜை ஆதலால் வீட்டில் குழந்தைகளின் புத்தகங்கள்,பெரியவர்களின் புத்தகங்கள், நோட்டுகள் போன்றவற்றை அடுக்கி பின் அம்மன் அலங்காரம் செய்ய வேண்டும் .இதற்கு ஏடு அடுக்குதல் என்று பெயர்.பின் இதனை ஒரு துணியால் மூடி விட வேண்டும். 

சரஸ்வதி பூஜை அன்று பூஜையில் வைத்து பூஜிக்கும் புத்தகங்களை அன்று முழுவதும் பூஜையிலேயே வைக்க வேண்டும்.இதன் உள்ளே வைத்த புத்தகங்களை மறு நாள் விஜய தசமி  அன்று பூஜை செய்து பின்னரே பிரிக்க வேண்டும்.இதற்கு ஏடு பிரித்தல் என்று பெயர்.

 


இதன் மேலே வெண்கல செம்பை நீர் இட்டு வைத்து,மாவிலை நடுவில் வைத்து பின்னர் தேங்காய் வைக்க வேண்டும்.அம்மன் முகம் கொண்டு தேங்காய் குடுமியில் கட்ட வேண்டும்.

அம்மன் முகம் இல்லாதவர்கள் குடுமி பகுதியில் மஞ்சளையும் சந்தனத்தையும் கொண்டு சாற்றி மூக்கு போன்று பிடித்து கொள்ளவும்.கண் அமைப்பதற்கு இரு சிறிய பூண்டு எடுத்து கொண்டு மூக்கின் மேல் பகுதியில் வைக்கவும்.பூண்டின் மேலே மிளகு வைத்து அமுக்கி விடவும்.குங்குமம் கொண்டு உதட்டு பகுதி வரைந்து கொள்ளவும்.


 


செம்பின் வாய் பகுதியில் ஒரு கயறு கட்டவும்.ஒரு துணியை நன்றாக கொசுவம் வைத்து மடித்து இந்த கயிறில் சொருகி நன்றாக விரித்து விடவும்.இன்னொரு துணி கொண்டு படத்தில் காண்பித்த படி அமைக்கவும்.நான் blouse களில்  border வைக்க பயன்படுத்தும் துணி வைத்து அலங்கரித்துள்ளேன்.
இப்போது பூக்கள் கொண்டும்,நகைகள் அணிவித்தும் மேற்படி அலங்காரம் செய்யலாம்.   இப்போது அழகான அம்மன் உங்கள் வீட்டிலேயே எழுந்து அருளி இருப்பதாக ஐதீகம் . இதே முறையில் வர லக்ஷ்மி பூஜை மற்றும் அம்மனை மையமாக வைத்து வரும் பூஜைகளுக்கு அம்மன் அலங்காரம் செய்யலாம்.


படம் மட்டும் வைத்து பூஜை செய்வதற்கு பதில் இந்த முறையில் செய்யலாம்.விளக்கை எப்படி அம்மனாக அலங்கரிப்பது என்று இன்னொரு சந்தர்ப்பத்தில் படங்களுடன் விளக்குகிறேன்.


அனைவருக்கும் சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி வாழ்த்துக்கள்.

Friday, October 19, 2012

cushion கவர் சுவர் அலங்காரம்

சமீபத்தில் ஐந்து cushion கவர்கள் வாங்கினேன்.வாங்கியதில் இருந்தே இதை cushion கவர் ஆக பயன் படுத்த தோன்றவே இல்லை!!!.வேறு என்ன பண்ணலாம் என்று யோசித்த போது வந்தது இந்த wall hanging ஐடியா.  

தேவையான பொருட்கள் 
அழகிய ஐந்து cushion கவர்கள்.
கைதையல் போட தேவையான நூல் கண்டு.
கொஞ்சம் கனமான அட்டைகள் 

 cushion கவர்கள் வாங்கிய போது
 நான்கையும் இணைத்து கை தையல் போட்டுள்ளேன்.(பிறகு மனசு மாறினால் cushion கவர் ஆ கூட உபயோக படுத்தலாமேன்னு ;-))
 முன் பக்கம் 
 மீதமுள்ள கவர் யை நான்கு பக்கமும் மடித்து பின் செய்துள்ளேன்.
 அதன் முன் பக்கம் 
 மடித்த ஐந்தாவது cover ஐ படத்தில் காண்பித்து போல நடுவில் வைத்து பின் செய்துள்ளேன்.
 ஒரு பழைய ஜன்னல் கொசுவலை ரெம்ப நாட்களாக என்னிடம் சும்மாவே இருந்து வந்தது.அதை அடியில் வைத்து நான்கு புறமும் மடித்து பின் செய்துள்ளேன்.wall hanging ஆக தொங்க விடும் போது பக்கவாட்டில் மடியாமல் இருபதற்க்காக shoe box அட்டையை நான்கு புறமும் வைத்துள்ளேன்.
எதாவது ஒரு முனையில் சின்ன நூலை கொண்டு ஆணியில் தொங்க விட ஒரு வளையம் போன்று செய்து கொள்ளவும் . கொசு வலை,அட்டை டப்பாக்கள் recycle செய்ய முடிந்ததில் மகிழ்ச்சி .
குறைந்த செலவில் அழகிய wall hanging தயார் (cushion கவர்கள் 350 ரூபாய்க்கு வாங்கினேன்) . 

Wednesday, October 10, 2012

ஐந்து அழகிய நவராத்திரி gift ஐடியாக்கள் /Golu Gift ideas

இன்னும் நவராத்திரிக்கு ஒரு வாரம் தானே இருக்கு.எங்கள் வீட்டில் ஐம்பது வருடங்களுக்கு மேலாக கொலு வைத்து கொண்டிருக்கிறோம்.  கடந்த இரண்டு வருடங்களாக சில காரணங்களால் வைக்க முடியவில்லை.

எங்கள் வீட்டில் ஒன்பது படிகள் கொண்ட கொலு வைப்போம்.ஒவ்வொரு வருடமும் கொலு வருகிறது என்றாலே மிகவும் உற்சாகமாக இருக்கும்.பரணில் இருக்கும் பொம்மைகளை எடுத்து துடைத்து , வர்ணம் மங்கிய பொம்மைகளுக்கு வர்ணம் கொடுத்து,அந்த வருடத்திற்கு புதிய பொம்மைகள் என்ன வந்திருக்கிறது என்று பார்த்து வாங்கி , கொலுவிற்கு வருகிறவர்களுக்கு கிப்ட் என்ன கொடுப்பது என்று பார்த்து பார்த்து வaங்குவதில் தொடங்கி தினம் ஒரு சுண்டலுடன்,பல விருந்தினர்கள் ,பாடல்கள்,வித விதமாக அம்மனுக்கு அலங்காரம்,அழகான ரங்கோலிகள்,கோலங்கள் என நவராத்திரி ஒன்பது நாளும் கன ஜோராக களை  கட்டும். 

அடுத்த வருடம் எப்படியாவது வைத்து விட வேண்டும்.இந்த முறை கொலுவிற்கு gift பொருட்கள் வாங்கி வீட்டீர்களா..முப்பது முதல் 90 ரூபாய்க்குள் அடங்கும் வகையில் நான் ஐந்து கிப்ட் ஐடியாக்கள்   சொல்றேன். 

குழந்தைகளுக்கு மர செப்பு சட்டி சாமான்கள் - Rs .75 கிடைக்கும் இடம்:Poombugar
அழகிய பத்தி ஸ்டாண்ட்  - Rs.50கிடைக்கும் இடம்:Mala iyer
Jute / Bamboo Wall Hanging - Rs 35
கிடைக்கும் இடம்:Mala iyer
ரெடிமேட் ரங்கோலி- Rs 75 to Rs 90கிடைக்கும் இடம்:easycrafts@gmail.com
Hand Painted அகல் விளக்குகள் Rs-45கிடைக்கும் இடம்: sriteja womens choice ,
villivakkam chennai ::: cont no: 9940554883

Monday, October 8, 2012

முதல் உதவி பெட்டி / First Aid box

        
எல்லோரும் நலமா?இன்னைக்கு பதிவு வீடுகளில் முக்கியமாக இருக்க வேண்டிய முதல் உதவி பெட்டி பற்றியது.

நேற்று பக்கத்து வீட்டு பெண்கள் சிலர் பேசி கொண்டு இருந்தோம்.எங்கள் சத்தம் கேட்டு காய்கறி நறுக்கி கொண்டு இன்னொரு பெண்ணும் உடனே அனைத்தையும் கீழே வைத்து விட்டு வந்து விட்டாள்.தப்புதான்.இரண்டு வயது குழந்தை தூங்கி கொண்டு இருந்ததால் வந்து விட்டாள்.bad லக் அவன் எழுந்து வந்து காய்கறி cutter மேலே காலை வைத்து விட்டான்.சின்ன காயம் தான்.ஆனால் இரத்தம் கொஞ்சம் வந்து விட்டது.பதறி போய் அவளுக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை.

                                    பஞ்சு எங்கே வைத்தேன்..காணோம்...
                                     dettol ஐயோ இங்க தான இருந்தது...
                      கத்திரிகோல் எங்க போய் தொலஞ்சதோ தெரியலையே...   

ன்னு ஒவ்வொரு டப்பாவா தேடி எடுத்துட்டு வரத்துக்குள்ள இரத்தமே நின்னு போய்டுச்சு. சின்ன காயமா  இருந்ததால சரியா போச்சு.எல்லா emergency  க்கும் இப்படி தேடிகிட்டு இருந்தா தப்பாச்சே.

உங்க வீட்டுல first aid பாக்ஸ் ன்னு தனியா வச்சுருகீங்களா  ... உங்களுக்கு ஒரு ஷொட்டு and பாராட்டுக்கள்.மத்தவங்களுக்கு ஒரு குட்டு and இனிமேயாச்சும் கீழ் கண்ட பொருட்களை வச்சு ஒரு முதலுதவி பெட்டி தயார் பண்ணுங்க. 

தயவு செஞ்சு இதுக்காக போய் ஒரு பிளாஸ்டிக் டப்பா  வாங்காதீங்க.ஒரு சின்ன அட்டை பெட்டி கூட போதும்.அதை white sheet ஆல் கவர் பண்ணி மேலே சிகப்பு marker கொண்டு கூட்டல் குறி வரைஞ்சுக்கொங்க.... 
கீழ் கண்ட பொருட்கள் ஒரு செட் வாங்கி இந்த டப்பாக்களில் போட்டு வைக்கணும்.
பஞ்சு roll
ஒரு சுத்தமான காட்டன் துணி 
கத்திரிக்கோல்  
Dettol  பாட்டில் 

Band aid கள் 
Gauze Bandage
Surgical tape 

காட்டன் crepe bandage
காயங்களுக்கான
அண்டிசெப்டிக் கிரீம் 
தீக்காயங்களுக்கானஅண்டிசெப்டிக் கிரீம்

தசை வலிகளுக்கான  cream or spray
paracetamol மாத்திரை (காய்ச்சல் வந்து மருத்துவரை பார்க்கும் நேரம் வரை உங்களை தயார்/ஆசுவாச படுத்த இது உதவும்)  


முக்கியமான தொலை பேசி எண்கள்.(குடும்ப மருத்துவர் , ஆம்புலன்ஸ் Etc)
மற்றும் முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயங்கள் 

1) நீங்கள் வீடில் இல்லாத சமயம் மற்றவர்கள் கூட உடனே பார்த்து எடுத்து விட கூடிய இடத்தில வைக்க வேண்டும்.
2)பெட்டியில் இருந்து ஒரு பொருளை எடுத்தால்  உடனே ஞாபகமாக அதை வாங்கி வைக்க வேண்டும்.
3)மருந்துகளின் expiry date கள் பார்த்து உபயோக படுத்த வேண்டும்.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...