Showing posts with label DIY. Show all posts
Showing posts with label DIY. Show all posts

Sunday, November 4, 2012

t ஷர்ட் stenciling

என்  கணவர் சமீபமா ஒரு t ஷர்ட் வாங்கனும்னு இணையத்துல தேடிட்டு இருந்தார்.யாரோ wrestling பிளேயர் jhon cena வாம்...அவர் டிசைன் பண்ணின ஷர்ட் போல .அதுவும் particular wording வேணும்னு பார்த்திட்டு இருந்தார்.ஆனா t ஷர்ட் black கலர் ல மட்டும் தான் இருந்துது...இவரும் நீல கலர் ல தேடி பார்த்துட்டு கிடைக்கலன்னு வேலைக்கு கிளம்பி போய்ட்டார்.அது என்ன அப்படி ஒரு ஊர்ல இல்லாத ஷர்ட் ன்னு பார்த்தா இதோ இந்த படத்தில இருக்கறதுதான்... 


சரி வேலை முடிஞ்சு வரது குள்ள நம்மளே ஒரு surprise கொடுக்கலாம்னு பண்ணினதுதான் இந்த DIY ப்ராஜெக்ட்.   
வீட்டில் இருந்த ஒரு சில பாக்கிங் அட்டைகள் எடுத்து அதில் படத்தில் உள்ள wordings யை அப்படியே எழுதி கொண்டேன்.அட்டை கொஞ்சம் தடிமனாக இருப்பது நல்லது.வெறும் பேப்பரில் என்றால் நகராமல் இருக்க பின் செய்ய வேண்டி இருக்கும். 


பின் cutter கொண்டு படத்தில் காண்பித்து போன்று உள் பக்கமாக  நறுக்கி எடுக்க வேண்டும்.














இப்போது ஸ்டென்சில் கள்  தயார்  .











இதை வீட்டில் இருந்த ஒரு நீல கலர் ப்ளைன் t ஷர்ட் மீது வைத்து வெள்ளை வண்ணத்தை brush கொண்டு தீட்டினேன்(acrylic colors / Fabric paint).ப்ளூ அண்ட் வைட் beautiful sight இல்லையா..அதுனால தான் இந்த கலர் combination . !!!

அடியில் அதாவது சட்டையின் உள்பக்கம் சில செய்தி தாள்களை மடித்து வைத்து கொள்ள வேண்டும்.அப்போது நீங்கள் முன்பக்கம் செய்யும் கலர் சட்டையின் பின் பக்கம் படியாமல் இருக்கும்.


ஸ்டென்சில் ஐ எடுக்காமல் இரண்டு மூன்று முறை கலரை கோட் செய்து கொண்டேன்.இப்போது t ஷர்ட் தயார்.இதை ஒரு நாள் முழுவதும் காய விடுங்கள்.நன்றாக காய்ந்த உடன் சட்டையை உள் பக்கமாக திருப்பி மிதமான சூட்டில் அயன் செய்து கொள்ள வேண்டும்.அவ்வளவு தான் .துவைத்தாலும் இது போகாது.ஆனால் நேரடியாக அயன் செய்யாமல் ஒவ்வொரு முறையும் திருப்பி போட்டு அயன் செய்ய வேண்டும்.



வீடு திரும்பிய கணவருக்கு நிஜமாவே ரெம்ப surprise ...பின்னே அந்த சட்டை விலை 1500 ஆச்சே...நான் வெறும் நாலு டப்பா வெள்ளை கலர் fabric பெயிண்ட் மட்டும் வைச்சு அவர் ஆசையை நிறைவேத்திருக்கேனே  ..(ஓரளவுக்காவது ஒரிஜினல் சட்டை மாறி தானே வந்திருக்கு?)



சிம்பிள் ஐடியா தானே..
குழந்தைங்க t ஷர்ட் ளையும் நீங்களே டிசைன் பண்ணலாம்.ஏழு கலர் ல ப்ளைன் t shirts வாங்கி ஒவ்வொரு சட்டையிலும் அந்த சட்டை வண்ணத்தின் பெயர், ஒரு கிழமையின் பெயர்,ஒரு பழத்தின் பெயர்,ஒரு காய்கறியின் பெயர் ஸ்டென்சில் பண்ணி கொடுத்தீங்கன்னா விளையாட்டா அவங்க எல்லா ஸ்பெல்லிங்கும் படிச்சுக்குவாங்க.வண்ணங்களையும் தெரிஞ்சுக்குவாங்க.      

Friday, October 19, 2012

cushion கவர் சுவர் அலங்காரம்

சமீபத்தில் ஐந்து cushion கவர்கள் வாங்கினேன்.வாங்கியதில் இருந்தே இதை cushion கவர் ஆக பயன் படுத்த தோன்றவே இல்லை!!!.வேறு என்ன பண்ணலாம் என்று யோசித்த போது வந்தது இந்த wall hanging ஐடியா.  

தேவையான பொருட்கள் 
அழகிய ஐந்து cushion கவர்கள்.
கைதையல் போட தேவையான நூல் கண்டு.
கொஞ்சம் கனமான அட்டைகள் 

 cushion கவர்கள் வாங்கிய போது
 நான்கையும் இணைத்து கை தையல் போட்டுள்ளேன்.(பிறகு மனசு மாறினால் cushion கவர் ஆ கூட உபயோக படுத்தலாமேன்னு ;-))
 முன் பக்கம் 
 மீதமுள்ள கவர் யை நான்கு பக்கமும் மடித்து பின் செய்துள்ளேன்.
 அதன் முன் பக்கம் 
 மடித்த ஐந்தாவது cover ஐ படத்தில் காண்பித்து போல நடுவில் வைத்து பின் செய்துள்ளேன்.
 ஒரு பழைய ஜன்னல் கொசுவலை ரெம்ப நாட்களாக என்னிடம் சும்மாவே இருந்து வந்தது.அதை அடியில் வைத்து நான்கு புறமும் மடித்து பின் செய்துள்ளேன்.



wall hanging ஆக தொங்க விடும் போது பக்கவாட்டில் மடியாமல் இருபதற்க்காக shoe box அட்டையை நான்கு புறமும் வைத்துள்ளேன்.
எதாவது ஒரு முனையில் சின்ன நூலை கொண்டு ஆணியில் தொங்க விட ஒரு வளையம் போன்று செய்து கொள்ளவும் . கொசு வலை,அட்டை டப்பாக்கள் recycle செய்ய முடிந்ததில் மகிழ்ச்சி .
குறைந்த செலவில் அழகிய wall hanging தயார் (cushion கவர்கள் 350 ரூபாய்க்கு வாங்கினேன்) . 

Thursday, July 26, 2012

ஐந்து அழகிய பாட்டில் மறுசுழற்சி ஐடியாக்கள்

முதலாவது பாட்டில்களை அழகிய flower vase ஆக மாற்றுவது...மிகவும் எளிதானதும் கூட...

Image : paperplateandplane
 இங்கு கவனிக்க வேண்டியது மூன்று விஷயங்கள் 
  • பூக்களோட வண்ணத்தோட பாட்டில்களின் வண்ணமும் மேட்ச் பண்ணிருகாங்க...  
  • glitter உபயோகபடுத்தி decorate பண்ணிருக்காங்க... 
  • ஒரே நிறத்தின் வெவ்வேறு shadeகள் உபயோக படுத்தி பாட்டில்களை கலர் பண்ணிருக்காங்க .
ரெண்டாவது ஐடியா பாட்டில்களின் அடி பாகத்தை உபயோகப்படுத்தி தோரணங்கள் கட்டுவது ... நான் சொல்றத விட இந்த  படத்த  பார்த்தால் உங்களுக்கே புரியும்...

Tuesday, July 24, 2012

DIY - நீங்களே செய்யலாம் - 4/Lamp shade

இந்த lamp shade feviart facebook page மூலமா கிடச்சுது...  ரெம்ப சிம்பிள் ஆன ஒரு lamp shade செய்முறை. 


தேவையான பொருட்கள் :
பலூன் - 1
fevicol
கொஞ்சம் தடிமனான சனல் நூல் கண்டு -1
பலூனை ஊதி கொள்ளுங்கள்.பின் அதன் மேல் ஒரு bulb உள்ளே செல்லும் அளவுக்கு இடம் விட்டு ஒரு வட்டம் வரைந்து கொள்ளுங்கள்.
சனல் நூல் கண்டின் மேல் பெவிகால் தடவி கொள்ளுங்கள்.வெறும் fevicol  லை தடவுவது கடினமாக இருக்கும்.அதனால் பெவிகால் லை சிறிது நீருடன் கலந்து பின் கண்டின் மேல்  தடவுங்கள்...
பின் அதை பலூன் முழுவதும் படத்தில்  காண்பித்தது போல் சுற்ற தொடங்குங்கள்.இவ்வாறு சுற்றியவுடன் ஒரு இரவு முழுவதும் இதை காய விடுங்கள்.
காலையில் பலூனை எடுத்து விடுங்கள்.
எடுத்தால் அழகிய எளிதான சனல் நூல் கண்டு lamp shade தயார்...



Project & Image courtesy : FEVIART 

Thursday, July 12, 2012

DIY - நீங்களே செய்யலாம் - 3/பிளாஸ்டிக் ஸ்பூன் recycling

இதும் ஒரு recycling project தான்
சே...சான்சே இல்ல..உட்கார்ந்து யோசிப்பாங்களோ அப்படின்னு என்னை யோசிக்க வச்ச ஒரு DIY project இது... பிளாஸ்டிக் spoons அ கண்டிப்பா தூக்கி வீசாம collect பண்ண ஆரம்பிச்சுருக்கேன்...என்ன ஒரு creativity ...  
Project & Image Courtesy :   ohmyindia







இதுக்குள்ள ஒரு பல்ப் வச்சு connection கொடுத்தா இப்படி வரும்...

இன்னும் கலர் ஸ்பூன்ஸ் o இல்ல இந்த ஸ்பூன்ஸ் ye கலர் பண்ணி வச்சா இன்னும் பிரமாதமா இருக்கும்... சின்ன பாட்டில்கள் ல்ல  கூட ட்ரை பண்ணி பாக்கலாம்..

Monday, June 11, 2012

DIY - நீங்களே செய்யலாம் - 3: பிளாஸ்டிக் பாட்டில் இல் இருந்து ஒரு ஹோல்டர்

பிளாஸ்டிக் bottles அ பொதுவா நம்ம தூக்கி போட்டுடுவோம்...
அதுல இருந்து எப்படி அழகா ஒரு ஹோல்டர் செய்யறதுன்னு கத்துக்கலாம்...இத flower vase ஆவோ, இல்ல pen stand ஆவோ இல்ல spoon stand ஆவோ எப்படி வேணா use பண்ணிக்கல்லாம்... 


 தேவையான பொருட்கள் :
ஒரு பிளாஸ்டிக் பாட்டில்
கத்திரிகோல் 
படத்தில் காமித்த படி பாட்டில்லை பாதியாகவோ இல்ல உங்களுக்கு stand எந்த உயரத்திற்கு தேவை படுதோ அந்த அளவிற்கு கட் பண்ணிகொங்க...   
 இது முழுவதும் கட் பண்ணிய பிறகு...
 பின் படத்தில் காட்டியது போல நீள வாக்கில் strips (முக்கால் இன்ச் )  ஆக கட் செய்து கொள்ளவும்...
 அப்படி கட் செய்தால் 
 இப்படி வரும் 
 பின் இந்த strips ஒவ்வொன்றையும் படத்தில் காட்டிஉள்ளது  போல பாதியாக மடித்து விடவும்.பின் ஒரு strip எடுத்து மேல்பக்கமாக பக்கத்தில் உள்ள strip பில் பொருத்தவும்...   
மடித்து விடுவதால் ஒவ்வொன்றும் நன்றாக பிடித்து  கொள்ளும். 



பின் அதை படத்தில் காட்டிஉள்ளது போல திருப்பி நன்றாக அழுத்தவும்... இது அழகான வட்ட வடிவத்தை tight ட்டாக hold செய்ய உதவும்...

holder தயார்...


Wednesday, May 30, 2012

DIY - நீங்களே செய்யலாம் - 2 / சுவர் அலங்காரம் - 2


இதுவும் ஏற்கனவே சொன்ன ஐடியா தான்... invitation  கார்ட்ஸ்...
இது நான் என்னோட ஹால் ல ஒரு பக்க சுவர் ல பண்ணிருக்கற அலங்காரம்...


நான் ஏற்கனவே http://kanavuillam.blogspot.in/2012/05/diy-1.html சொன்ன மாதிரி வேற வேற color contrasting invitation கார்ட்ஸ் அ ஒட்டி செட் பண்ணிருக்கேன்...இதுல நடுல பிள்ளையார் இருக்கறதால சுத்தியும் பிள்ளையார் theme எடுத்துட்டு பண்ணிருக்கேன்...      

Sunday, May 27, 2012

DIY - நீங்களே செய்யலாம் - 1

என்னதான் கடைல இருக்குற அழகான பொருட்கள வீட்டுல வச்சு அழகு படுத்தினாலும் நம்மளே சின்ன சின்ன பொருட்கள் செஞ்சு நம்ம வீட்ட அழகு படுதற திருப்தியே தனிதான்...அந்த மாதிரி சின்ன சின்ன crafts பண்ண சொல்லி தரதுதான் இந்த பகுதியோட நோக்கம்...DO it yourself !!!!        

உங்களுக்கு வர வித்தியாசமான color color ஆன invitations அ சேகரிச்சு  வைக்குற பழக்கம்  இருக்கா உங்களுக்கு...அப்போ நீங்க உடனே இத செஞ்சுடலாம்...

நம்ம வீட்டுக்கு வரவங்க முதல்ல பாக்குறது calling bell அ தான் ....சோ அத simple அ அலங்கரிக்குறதுதான் இந்த project . 

இதுக்கு தேவையான பொருட்கள் நாலஞ்சு விதமான invitation , கத்திரிகோல், ordinary gum / பசை....


இது நான் என் வீட்டு calling பெல்லுக்கு பண்ணிருக்கிற அலங்காரம்... contrasting color அட்டைகள எடுத்துகோங்க... உங்களுக்கு விருப்பமான geometric  வடிவங்கள்ல அத வெட்டி ஒட்டி முடிச்சா அழகான craft தயார்... எனக்கு ராஜா காலத்து மடல் அனுப்புற ஸ்டைல் ல வந்த invitation அ பேஸ் அ வச்சு அதுக்கு மேல மத ரெண்டு கலர் அ வந்த invitation அ ஒட்டி இன்னொரு invitation ல இருந்து பிள்ளையாரையும் ஒட்டி முடிச்சா அழகான இந்த craft தயாரா ஆகிடுச்சு...
நீங்களும் உங்க விருப்ப படி இந்த மாதிரி செஞ்சு பாருங்களேன்... 

ஆகும் செலவு : ௦ ௦ ௦௦0 Rs ;-) 
  

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...