Showing posts with label சுவர் அலங்காரம். Show all posts
Showing posts with label சுவர் அலங்காரம். Show all posts

Friday, October 19, 2012

cushion கவர் சுவர் அலங்காரம்

சமீபத்தில் ஐந்து cushion கவர்கள் வாங்கினேன்.வாங்கியதில் இருந்தே இதை cushion கவர் ஆக பயன் படுத்த தோன்றவே இல்லை!!!.வேறு என்ன பண்ணலாம் என்று யோசித்த போது வந்தது இந்த wall hanging ஐடியா.  

தேவையான பொருட்கள் 
அழகிய ஐந்து cushion கவர்கள்.
கைதையல் போட தேவையான நூல் கண்டு.
கொஞ்சம் கனமான அட்டைகள் 

 cushion கவர்கள் வாங்கிய போது
 நான்கையும் இணைத்து கை தையல் போட்டுள்ளேன்.(பிறகு மனசு மாறினால் cushion கவர் ஆ கூட உபயோக படுத்தலாமேன்னு ;-))
 முன் பக்கம் 
 மீதமுள்ள கவர் யை நான்கு பக்கமும் மடித்து பின் செய்துள்ளேன்.
 அதன் முன் பக்கம் 
 மடித்த ஐந்தாவது cover ஐ படத்தில் காண்பித்து போல நடுவில் வைத்து பின் செய்துள்ளேன்.
 ஒரு பழைய ஜன்னல் கொசுவலை ரெம்ப நாட்களாக என்னிடம் சும்மாவே இருந்து வந்தது.அதை அடியில் வைத்து நான்கு புறமும் மடித்து பின் செய்துள்ளேன்.



wall hanging ஆக தொங்க விடும் போது பக்கவாட்டில் மடியாமல் இருபதற்க்காக shoe box அட்டையை நான்கு புறமும் வைத்துள்ளேன்.
எதாவது ஒரு முனையில் சின்ன நூலை கொண்டு ஆணியில் தொங்க விட ஒரு வளையம் போன்று செய்து கொள்ளவும் . கொசு வலை,அட்டை டப்பாக்கள் recycle செய்ய முடிந்ததில் மகிழ்ச்சி .
குறைந்த செலவில் அழகிய wall hanging தயார் (cushion கவர்கள் 350 ரூபாய்க்கு வாங்கினேன்) . 

Wednesday, May 30, 2012

சுவர் அலங்காரம் - 1

உங்க வீட்டுல ஒரு சுவர் ரெம்ப வெறுமையா இருக்குன்னா உங்க மனசும் வெறுமையா இருக்குன்னு அர்த்தமாம்...அப்டில்லாம் விடலாமோ?

இப்போ latest trend சுவர் அலங்கரதுல என்னன்னு பார்த்தீங்கன்னா wall decal or ஸ்டென்சில் டிசைன் பண்றதுதானாம்...அது என்னடான்னு பார்த்தீங்கன்னா இந்த படத்த பாருங்க உங்களுக்கே புரியும்...  

image courtesy : wall sticker

இந்த மாதிரி சுவர் ல permanent அவோ இல்ல remove பண்ற மாதிரியோ decorate பண்றது...  
உங்களுக்கு கொஞ்சம் வரையுற திறமையும், சுவர் ல அலங்காரம் பண்றதுக்கு அனுமதியும்(!!!!) இருந்துதுன்னா நீங்களே பண்ணலாம். இல்லைன்னா  இந்த மாதிரி ஸ்டிக்கர்ஸ் வாங்கி ஒட்டி வைக்கலாம் . அதும் இல்லன்னா ஸ்டென்சில் கிடைக்குது...அப்படின்னா என்னன்னு கேக்குறீங்களா?

image courtesy: balzer designs
இது தான் ஸ்டென்சில்...இத சுவர்ல ஒட்டி இது மேல பெயிண்ட் பண்ணினா இந்த ஸ்டென்சில் ல இருக்குற டிசைன் உங்க சுவர் ல வந்துடும்....அப்பறம் இந்த பேப்பர் அ எடுத்துடனும்.இத மாதிரி ஸ்டென்சில் நம்மளே பண்ணலாம்..இல்லைன்னா ரெடிமேட்  ஆவும் கிடக்குது...
அத வாங்கி பண்ணல்லாம்...நம்மளே அலங்காரம் பண்ணினா திருப்தியும் கிடைக்கும்...இல்லைன்னா professional painters அ வச்சும் பண்ணலாம்... இந்த படங்கள பாருங்க...உங்களுக்கே ஒரு ஐடியா கிடைக்கும்...
 



image courtesy : cuttingedgestencils

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...