Wednesday, September 12, 2012

குழந்தைகள் அறை அலங்காரம் with Dora தீம்

என்னங்க உங்க வீட்டு குட்டிக்கு dora ன்னா ரெம்ப பிடிக்குமா...
இந்த முறை அவங்க பிறந்தநாளுக்கு Doraவ மையமா வச்சு அவங்களுக்கு gift கொடுத்தa ரெம்ப சந்தோசபடுவங்கள்ள ...இங்க எனக்கு பிடிச்ச ஐடியா சில ஷேர் பண்றேன் பாருங்க...உங்க செல்ல குட்டியோட ரூம் அ அவங்களுக்கு பிடிச்ச dora வ வச்சு decorate பண்ணி கொடுங்களேன்.
Dora Bean bag
Image:http://www.childrens-rooms.co.uk


குட்டீஸ்க்கு பிடிச்ச மாதிரியும் வாங்கனும்....
நமக்கும் அவங்க திங்க்ஸ் வைக்க ஒரு பொருள் வாங்கின மாதிரியும்   இருக்கணும்னு   நினைசீங்கன்னா இது நல்ல chioce ... 
மேல அவங்களோட புக்ஸ் வைக்கலாம்...கீழ toys  வைச்சுக்கலாம்...
குட்டீஸ்க்கும்    சின்ன வயசுல இருந்து பொருட்கள அழகா எப்படி அடுக்கி வைக்குறதுன்னு   கத்து கொடுத்த மாதிரியும் இருக்கும்..
 Image:www.meijer.com

இது usual தான்...
பெட்ஷீட் and curtains
image: homedesignr.blogspot.in

இதுவும் ரெம்ப செலவு வைக்காத ஐடியா தான்...

சுவரில் ஓட்டும் ஸ்டிக்கர்கள்... Image: www.besthomedesigns.org

குட்டிஸ் க்கான குட்டி dressing  டேபிள்...
எப்படியும் பிறந்தநாள் பார்ட்டி வைக்கும் போது நிறைய பொம்மைகள் சேர்ந்து விடும்.நீங்களும் பொம்மை வாங்குவதை விட இந்த மாதிரி செலக்ட் செய்து வாங்கலாம்.இந்த பிறந்தநாளுக்கு அசத்திடுவீங்கதானே ...

Tuesday, September 4, 2012

Paper Furniture / செய்திதாள் மறுசுழற்சி-2

வாதாபி hangover ல இருந்து நான் ஒரு வழியா வெளிய வந்தாச்சு... அதுனால back to track on home decor  and recycling ...

 OK OK படத்துல சந்தானம் சொல்ற famous dialogue factu factu factu... அதே மாதிரி நீங்களும் இந்த மூணு fact யும் முதல்ல பாருங்க...பின்னாடியே பதிவு தொடருது ... :-) 

இந்த fact களுக்கும் இந்த பதிவுக்கும் என்ன சம்பந்தம்ன்னு பதிவோட இறுதில உங்களுக்கே புரியும்.

newspaper-recycling பதிவுல எப்படி செய்தி தாள்களை கொண்டு அழகான கூடைகள் செஞ்சு இருந்தாங்கன்னு பார்த்தோம்.மறுசுழற்சி ங்கறது 
நம்ம அன்றாடம் பயன்படுத்துற ஒரு பொருளா மாறினா 
எவ்வளவு நல்லா இருக்கும்... இப்போ இந்த படத்த பாருங்களேன்...

இது செய்தித்தாள்களையும் packing  அட்டைகளையும் வச்சு தயார் பண்ணிருக்கற புக் செல்ப் / saree  stand ...

இத பார்த்த உடனே உங்கள மாதிரி தான் நானும் யோசிச்சேன்...

பேப்பர் ல furniture  ஆ? எப்படி பண்ணுவாங்க...எந்த அளவுக்கு அது எடையை தாங்கும்..எந்த அளவுக்கு உழைக்கும்...எந்த அளவுக்கு உறுதியா இருக்கும்...இப்படி பல கேள்விகள் வந்துது...

அதுக்கான விடையை தேடும் போது தான் சென்னை அபிராமபுரத்துல இருக்குற
இந்த ESK Learning சென்டர் பத்தின தகவல்கள் கிடச்சுது. 
இந்த மாதிரி பேப்பர் கொண்டு தயாரிக்க படும் furniture  கள் இங்கதான் ஸ்பெஷல் children (Children with Learning Difficulties and Multiple Difficulties)  கைப்பட  தயாரிக்க படுதுன்னு தெரிஞ்சுகிட்டேன்...

இத கடந்த பதினைந்து வருடமா வெற்றிகரமா நடத்திகிட்டு வரவங்க அர்ச்சனா அச்சுதன் மேடம்....கீழே இந்த படத்துல இருக்காங்களே அவங்கதான்...
சரி எப்படி இந்த furniture கள தயாரிக்கறாங்க?


இந்த டெக்னாலஜி க்கு பேரு appropriate paper-based technology

(APT) ....இத ஜிம்பாப்வே யா சேர்ந்த Bevill Packer  கண்டு பிடிச்சுருகார் . 

இதன் படி பேப்பர் களையும்  கார்ட்போர்ட் அட்டைகளையும் மைதாவை கொண்டு தயாரிக்க பட்ட ஒரு பசையினால லேயர் லேயர் ரா ஒட்டி அத பின் வெயில்ல நல்லா காய வச்சு ஒரு panel தயாரிக்க படுது...

Panel  தயார் ஆன பின்னர் ஒவ்வொன்றும் grooves மூலமா இணைக்க படுது... 

இதன் மேலே மறுபடியும்  பசை தடவப்பட்டு பின்னர் water  proof  painting  coat  செய்ய படுது.90 கிலோ அளவு எடையை தாங்குமாம்...!!!!!

என்ன என்ன பொருட்கள் தயார் ஆகுதுன்னு பார்ப்போமா...

சிறுவர்கள் பெரியவர்கள் உட்காரும் மொட்டாக்கள்

 வரவேற்பறையில் போடப்படும் சென்டர் டேபிள்....
செய்தித்தாள் ஹோல்டர் உடன்!!!!

அதிகம் பயன்படுத்தாத சாமான்கள்,
விருந்தினர் வந்தால் மட்டுமே உபயோக படுத்தும்
தலையணை,போர்வைகள் போன்றவற்றை வைக்க,
கொலு பொம்மைகள் வைக்க இன்னும்
பலவற்றை store செய்ய உபயோக படுத்தலாம் ...

சின்ன சின்ன அலங்கார பொருட்கள் வைக்க ,
உருளி வைக்க பயன்படுத்தலாம் ..
உங்களுக்கு தேவை படுற கலர் கள்ல செஞ்சு வாங்கிக்கலாம்..
.உங்களுக்கு wood பினிஷ் வேணும்னு
ஆசை  பட்டீங்கன்னா அதையும் செஞ்சு தராங்க....
இதுதான் என்னோட favorite ...
குழந்தைகளுக்கான study டேபிள்...

இந்த பொருட்கள் அனைத்தும் லைப் லாங் உபயோக படுத்தலாம்...நீங்க எதிர் பார்ப்பதை விட இந்த பொருட்கள் பல மடங்கு உறுதியாய் இருக்கும் என்று உறுதி கூறுகிறார் அர்ச்சன்னா  ...

உங்களுக்கு இந்த பொருட்கள் பிடிச்சு வாங்கனும்னு நினசீங்கன்னா அர்ச்சனாவ தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி...

O#34 N#15/2 subramaniam St,
Abhiramapuram, Chennai,
Tamil Nadu 600018

Mobile No: 98843-61562

Facebook id: https://www.facebook.com/#!/pages/ESK-Learning-Centre/306869449337342

அர்ச்சனா வோட Facebook id: https://www.facebook.com/#!/archana.achuthan

நீங்க சென்னையில் இருந்தா நேர்லயே போய் பார்த்து வாங்கலாம்..மற்ற இடங்களுக்கு courier செய்து தருகிறார்கள்.உங்களின் ஆர்டர் இன் பேரிலேயே பொருட்கள் தயார் செய்ய படும்.அதுனால உங்களுக்கு தேவையான கலர்களில் அளவுகளில் செய்து வாங்கலாம்.

எவ்வளவோ ருபாய் கொடுத்து மரச்சாமான்கள் , பிளாஸ்டிக் சாமான்கள் வாங்குகிறோம்...அதே அளவு உறுதியோடு இயற்கைக்கும் எந்த கெடும் விளைவிக்காத இந்த பொருட்களை வாங்கி உபயோக படுத்தலாமே...கொஞ்ச நாள் உபயோக படுத்திய பின் கலர் மாற்ற வேண்டும் இல்லை ஏதேனும் மாற்றம் செய்ய வேண்டும் என்றாலும் இவர்களே செய்து தருகிறார்கள்.

உங்களுக்கு இன்னும் தகவல்கள்,பொருட்களின் விலை விபரங்கள்  வேண்டும் என்றால் அர்ச்சனாவை அவரது facebook id il தொடர்பு கொள்ளுங்கள்.

அப்படியே மேல போய் அந்த facts a திரும்ப ஒரு முறை படிச்சு பாருங்க...
இந்த மாதிரி furniture  கள் உபயோக  படுத்தறது  எவ்வளவு அவசியம் ன்னு 
இன்னும் நல்லா புரியும்  

Image Courtesy: ESK learning center.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...