Wednesday, May 1, 2013

குப்பைகளை கழிக்கும் முறை -2 - ஈர பதம் உள்ள குப்பைகள் (குப்பைகளை சரியான முறையில் வெளியே கொட்டுவது)

இதை படிக்கும் முன் இதன் முதல் பாகம் Waste Management - குப்பைகளை கழிக்கும் முறை-1 படித்து பின் இதை படிக்கவும்.

Wet waste (ஈர பதம் உள்ள குப்பைகள்)
    • சமைத்த உணவு பண்டங்கள் (சைவம்  /அசைவம்  )
    • சமைக்காத உணவு பண்டங்கள் (சைவம்  /அசைவம்  )
    • பழங்களின் கழிவுகள் ,தோல்கள் ,விதைகள்  
    • காய்கறி கழிவுகள் 
    • பூஜையறை இல் இருந்து கழியும் பூக்குப்பைகள் 

இந்த மாதிரியான குப்பைகள் தினமும் நம் வீட்டில் இருந்து கழியும் .இதோடு இனிமேலாவது பிளாஸ்டிக் குப்பைகளையோ மற்ற குப்பைகளையோ  கலக்காமல் இருப்போம்.

இந்த குப்பைகளை  இரண்டு வகைகளில் கழிக்கலாம்.

1)குப்பைகளை சரியான முறையில் வெளியே கொட்டுவது.
2)இந்த வகை குப்பைகளை compost (மக்க வைத்து உரமாக மாற்றுவது ) செய்து நம் வீட்டு தோட்டங்களில் பயன்படுத்துவது.

இரண்டாவது முறை யில் குப்பைகளை கழிப்பது எல்லோராலும் சாத்தியபடாது.அதனால் முதலில்  முறையாக இந்த குப்பைகளை எப்படி வெளியே கொட்டுவது என்று பார்ப்போம் .

செய்ய வேண்டியது :

1)அடுப்பங்கரைக்கு என்று தனியாக ஒரு குப்பை தொட்டி வைத்து கொள்ளுங்கள் .
2) மற்ற குப்பைகளை இதோடு கலக்க கூடாது.
3) பிளாஸ்டிக் கவர்களை குப்பைதொட்டிக்குள் வைத்து அதன் மேல் குப்பை கொட்டுவதை  தவிர்ப்போம்.
4) குப்பைகளை பிளாஸ்டிக் கவர்களில் கொட்டி வெளியே கொட்டுவதை தவிர்க்க வேண்டும்.


எல்லாம் சரிதான்.பிளாஸ்டிக் கவர் வைக்காமல் குப்பை கொட்டினால் அசுத்தமான குப்பை தொட்டியை யார் கழுவுவது என்று கேட்பவர்களும் இருப்பார்கள்.அதற்க்காகதான் கவர் வைத்து போடுகிறோம் என்பார்கள்.

கொஞ்சம் யோசித்து பாருங்கள் .நம் வீட்டு குப்பைதானே அது.நாம் சாப்பிட்ட கழிவுகளும் காய்கறி கழிவுகளும் தானே அதில் ஒட்டி கொண்டு இருக்கும்.கொஞ்சம் மெனக்கிட்டு ஒரு கப் தண்ணீர் ஊற்றி கழுவி கொண்டால் ஆயிற்று.அதற்கு மாற்றாக 800 வருடங்கள் ஆனாலும் மக்காத ஒரு பிளாஸ்டிக் கவரை தினம் தினம் நாம் மண்ணில் கொட்டுகிறோம்.

எனவே இனி படத்தில் உள்ளது போல ஈர பதம் உள்ள குப்பையை கவர் வைக்காமல் நேரிடையாக தொட்டியில் கொட்டுவோம்.பின் கழுவி கொள்ளலாம்.



இல்லை என்றால் கீழ் கண்ட படத்தில் உள்ளது போல ஒரு செய்தி தாளை கூம்பு (cone ) வடிவில் வைத்து குப்பை தொட்டியில் வைத்து அதன் மேல் குப்பைகளை கொட்டி பின் வெளியில் கொட்டலாம்.இந்த முறையில் கழுவ கூட அதிகம் தண்ணீர்  கூட செலவழியாது.




ஒரு சின்ன முயற்சி தானே.முயன்று பார்க்கலாம்.இயற்க்கைக்கு நம்மால் ஆன ஒரு சின்ன உதவி.உங்கள் உறவினர்களிடமும் நண்பர்களிடமும் கூட இதே போல செய்ய வலியுறுத்துங்கள் .

பதிவு தொடரும்....
FACEBOOK கில் கனவு இல்லத்தை தொடர இங்கே கிளிக்கவும் 
https://www.facebook.com/kanavu.illam.blog

ஸ்டென்சில் ரங்கோலி

அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.சில அலுவல்களின்  காரணமாக வலைப்பூ பக்கம் வரவே முடியவில்லை.

அண்மையில் எங்கள் டவுன்ஷிப்பில் தமிழ் புத்தாண்டு கொண்டாட்டம் நடைபெற்றது.விழா நடக்கும் இடத்தின் முகப்பில் கொஞ்சம் வித்தியாசமாகவும் அதே சமயம் எளிதாகவும் ரங்கோலி போட திட்டமிட்டோம்.எளிதாக என்ற டன் எனக்கு தோன்றியது ஸ்டென்சில் வைத்து போட்டு விடலாமே என்றுதான்.

ஸ்டென்சில் என்று நான் சொல்வது நீங்கள் ஊர் பக்கம் நடக்கும் exhibition களில் பார்த்திருக்க கூடும்.கீழ்க்கண்ட படத்தில் இருப்பது போல மாவு சல்லடைகளில் அழகிய கோலங்கள்,design கள் வரைந்து விற்று  கொண்டிருப்பார்கள்.  

Image: flicker
என்னிடம் இது போல ஸ்டென்சில் நான்கு இருந்தது.என் தோழி மீராவிடம்  இரண்டு இருந்தது.


கலர் பொடியும் ரெம்பவே எளிதான ஒரு design னும் தயார் செய்து கொண்டோம்.

நான், என் அம்மா,என் தோழிகள் மஞ்சு,மீரா,ராதிகா வும் இணைந்து விழாவிற்கு போட்ட கோலம் உங்கள் பார்வைக்கு.




அம்மா 


வித்தியாசமாக இருந்ததால் அனைவரின் பாராட்டையும் பெற்றது எங்கள் கோலம்.அதோடு மிகவும் குறைந்த நேரமே பிடித்தது.

இதையும் பாருங்க 

FACEBOOK கில் கனவு இல்லத்தை தொடர இங்கே கிளிக்கவும் 
https://www.facebook.com/kanavu.illam.blog

Wednesday, January 23, 2013

Waste Management - குப்பைகளை கழிக்கும் முறை-1


இதென்ன தலைப்பு ?வீடுகளில் குப்பையை கழிக்க ஒரு முறை இருக்கிறதா என்ன? குப்பையை dustbin இல் போட்டு பின் குப்பை தொட்டியில் கொண்டு கொட்ட வேண்டியதுதானே?அதுக்கு என்ன முறை வேண்டி கிடக்குது என்று கேட்கிறீர்களா?

கண்டிப்பாக இருக்கிறது என்பதை சொல்வதற்கே இந்த பதிவு.

முதல் வீடுகளில் என்ன என்ன குப்பை நாம் generate பண்ணுகிறோம் என்று பாப்போம்.
  1. Wet waste (ஈர பதம் உள்ள குப்பைகள்)
    • சமைத்த உணவு பண்டங்கள் (சைவம்  /அசைவம்  )
    • சமைக்காத உணவு பண்டங்கள் (சைவம்  /அசைவம்  )
    • பழங்களின் கழிவுகள் ,தோல்கள் ,விதைகள் 
    • காய்கறி கழிவுகள் 
    • பூஜையறை இல் இருந்து கழியும் பூக்குப்பைகள் 

    2. Dry  waste (உணவு பண்டம் அல்லாத  / ஈரப்பதம் இல்லாத/ மக்காத குப்பைகள் )
    • கண்ணாடி 
    • துணி வகைகள் 
    • தோல் பொருட்கள் 
    • ரப்பர் 
    • தெர்மோகோல் 
    • உலோகங்கள் 
    • காகிதங்கள் 
    • மர துண்டுகள் 
    • முக்கியமாக பிளாஸ்டிக் குப்பைகள் 
    • ரெக்ஸின் பைகள் முதலியன 




      3.சானிடரி கழிவுகள் 
    • சானிடரி நாப்கின்கள் 
    • டையப்பர்கள் 
    • பேண்டஜ்கள் 
    • மற்றும் ரத்த கரை படிந்த பஞ்சு / மருத்துவ கழிவுகள் 
    4.அபாயம் மற்றும் ஆபத்து விளைவிக்கும் கழிவுகள் 
    • பல்புகள் , tube லைட் 
    • பேட்டரி 
    • கிளீனிங் பொருட்கள் (eg lizol ,சோப்பு பவுடர் போன்றவை )
    • பெயிண்ட் 
    • எண்ணெய் 
    • அழகு பொருட்கள் 
    • பூச்சி மருந்து 
    • காலாவதியான மருந்துகள்
    • ஊசி 
    • மற்றும் e waste எனப்படும் கால்குலேட்டர் ,கை பேசி ,சார்ஜர்கள் ,பழைய ரேடியோக்கள் போன்றவை 
    5. தோட்ட  கழிவுகள்  (இலை தளைகள்,மரம் வெட்டிய கழிவுகள் போன்றவை)

   6. இது போக செங்கல்கள் ,வீடு வேலை செய்யப்பட்ட பொது மிஞ்சிய கழிவுகள் ,சிமெண்ட்    போன்றவைகளும் அடங்கும். 



ஒரு வீட்டில் இருந்தே இத்தனை குப்பைகளை உருவாக்குகிறோம்.ஒரு ஊர்,நகரம், என்றால் எவ்வளவு கழிவுகள்?

வீடு என்றால் மேற்கண்ட குப்பைகள் கண்டிப்பாக பல தினசரியோ, சில ஒரு மாதத்திற்கு ஒருமுறையோ இருக்கும் தான்.பிரச்னை அதில் இல்லை .இவ்வளவு குப்பைகளையும் ஒரே இடத்தில கொண்டு கொட்டும் பொழுது மக்கும் குப்பையும் மக்காத குப்பைகளும்,அபாயமான குப்பைகளும் மண்  மேலே குவிந்து குவிந்து மண்ணின் தன்மையே மாறி நிலத்தடி நீர் வற்றி ,கண்மாய்கள் அடைத்து கொண்டு எவ்வளவு அபாயகரமான சூழ்நிலை உருவாகிறது.


 நாம் வீட்டில் இருந்து குப்பைகளை கழிக்கும் போதே மக்கும் குப்பைகளை மட்டும் கழித்தால் இந்த பிரச்னை ஓரளவுக்காவது குறையும்.மேலே குறிப்பிட்ட ஒவ்வொரு கழிவுகளையும் எவ்வாறு கழிப்பது,இந்த பூமிக்கு நம்மால் ஆன ஒரு சிறிய உதவியை எப்படி ஒரு அன்றாட பழக்கம் ஆக்கி கொள்வது என்பதை உங்களுடன் பகிரவே இந்த தலைப்பு. 

அதோடு வேஸ்ட் management தில் நான் expert எல்லாம் இல்லை.நான் தெரிந்து கொண்டதை உங்களுடன் பகிர்கிறேன்.உங்களுக்கு தெரிந்த விசயங்களும் நீங்கள் பயன்படுத்தும் முறைகளும் , கூட கருத்துக்களாக பதிவு செய்யுங்கள்.

பதிவு தொடரும்....

இதன் தொடர்ச்சி 
குப்பைகளை கழிக்கும் முறை -2 - ஈர பதம் உள்ள குப்பைகள்


FACEBOOK கில் கனவு இல்லத்தை தொடர இங்கே கிளிக்கவும் 
https://www.facebook.com/kanavu.illam.blog

Friday, January 18, 2013

வைரம் போன்று மின்னும் பதிவர்கள்

தமிழ் பதிவர் உலகத்தின் முன்னணி Blog ஆன http://blogintamil.blogspot.in/ ன் வைரங்கள்!!! பதிவில் "வைரம் போன்று மின்னும் பதிவர்கள் ....!!! பகுதியில் கனவு இல்லம் blog ம் இடம் பிடித்திருக்கிறது.


காலையில் எழுந்த உடன் இந்த செய்தி என்னை வரவேற்றது.இன்னும் நிறைய எழுத வேண்டும் என்று ஆவலை தூண்டுகிறது.உங்களின் இந்த நல்ல முயற்சிக்கு வாழ்த்துக்கள்.இடுகையில் இடம்பிடித்த மற்ற வைரங்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.


திருமதி.மனோ சாமிநாதன் அவர்களுக்கு மிக்க நன்றி.



புதிய stainless ஸ்டீல் பாத்திரங்களில் இருந்து ஸ்டிக்கர்களை நீக்க ஒரு எளிய வழி


புது stainless ஸ்டீல் பாத்திரம் வாங்கும் போது  அதன் மீது ஒட்டியுள்ள ஸ்டிக்கர்களை நீக்க ஒரு எளிய வழியை என் பெரியம்மா சொன்னார்.



பொதுவாக இந்த ஸ்டிக்கர்கள் எளிதாக எடுக்க வராது.அப்படியே எடுத்தாலும் முழுதாக பிய்த்து எடுக்க முடியாது.அங்கு அங்கு ஒட்டி கொண்டு பார்க்கவும் நன்றாக இராது.இந்த முறை மூலம் எளிதாக எடுக்க வருகிறது எந்த மார்க்கும் இல்லாமலே...

ஸ்டிக்கர் ஒட்டி இருக்கும் பாத்திரத்தை  எடுத்து கொள்ளுங்கள் .காஸ் அடுப்பிலோ இல்லை மெழுகுவர்த்தியிலோ ஸ்டிக்கர் ஒட்டி இருக்கும் பக்கத்திற்கு அடிபாகத்தை  சிறு தீயில் காண்பியுங்கள்.



பாத்திரம் லேசாக சூடானால் போதுமானது .பத்து வினாடிகள்  கூட போதும்.

பாத்திரம் இலகுவான சூட்டில் இருக்கும் போதே ஒரு கத்தியோ இல்லை ஸ்பூனோ கொண்டு ஸ்டிக்கரை லேசாக தூக்கி விடுங்கள்.இலகுவாக எடுக்க வரவில்லை என்றால் மீண்டும் பாத்திரத்தை லேசாக சூடு பண்ணி கொள்ளுங்கள்.கத்தியால் தூக்கி விட்ட பிறகு கைகளாலேயே எளிதாக எடுத்து விடலாம்.sticker ரும் பிய்யாமல் முழுதாக வந்து விடும்.


அடுத்த முறை புது பாத்திரம் வாங்கும் போது மறக்காமல் இந்த முறை பின்பற்றி பாருங்கள்.


Monday, January 7, 2013

நிகிலா தங்கதுரை யின் கைவண்ணம்: Upcycled மொபைல் Pouch

அனைவருக்கும் இனிய புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துக்கள்.


இன்றைய பதிவும் என் தோழி நிகிலா அவர்களின் ஒரு கைவினை பொருள்தான்.நீங்கள் அணியும் உடைக்கு பொருந்தும் விதத்தில் மிகவும் எளிதாக செய்ய கூடிய கைபேசி உறை (!!!) - மொபைல் Pouch யை எப்படி செய்வது என்று படங்களுடன் ஒரு e -மெயில்  அனுப்பி இருந்தார். அவை உங்கள் பார்வைக்கு...

அதோடு ரெடிமேடு ஷர்ட் வாங்கினால் கிடைக்குமே ஒரு  ஸ்பாஞ்ச்...அதை உபயோகமாக பயன்படுத்த ஒரு வழியும் கூட...

சுடிதார் தைக்க கொடுக்கும் போது கட் பண்ணியப்பறம் மீதி துணியை வாங்கிக்குங்க.

தேவையான பொருட்கள் 

1)  சுடி துணி,
2)  லைனிங் க்ளாத்(விரும்பினால்),
3)  ஜிப் 





படத்தில் காண்பித்தது போல லைனிங் துணி,சுடி துணி வைத்து விலகாத வண்ணம் ஓரத்தை தைத்து கொள்ளவும்.



இரு துண்டையும் இணைத்து ஜிப் வைத்து தைக்கவும் .பவுச் ரெடி 


அதோடு எனது பாட்டில் மறுசுழற்சி பதிவில் உள்ள vase போலவே அவரும் அவர் இல்லத்தில் செய்த Vase  உங்கள் பார்வைக்கு...


LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...