Friday, January 3, 2014

கோதுமை புல் சாறு / wheat grass juice / கோதுமை புல் வளர்ப்பது எப்படி

கோதுமை புல்  வீட்டிலேயே வளர்த்து அதில் இருந்து சாறு தயாரிப்பது மிகவும் எளிது.அருகம்புல் போலவே இதுவும் மிகவும் மருத்துவ குணங்கள் நிரம்பியது.
இணையத்தில் wheat grass juice பற்றி நிறைய செய்திகள் இருக்கிறது.

இது சந்தையில் மிகவும் அதிக விலைக்கு விற்கப்படும் ஒரு பொருளாகவும் இருக்கிறது.100 கிராம் கோதுமை புல் பொடி 400 ரூபாய்க்கு மேல் விற்க படுகிறது.இதன் சில நல்ல பயன்களை கீழே சுட்டியுள்ளேன்.





தேவையான பொருட்கள் :

கோதுமை - 100 கிராம் 
வளர்க்க ஒரு தொட்டி (பெரிய தொட்டி எல்லாம் தேவை இல்லை.சிறிய பிளாஸ்டிக் கப்புகள் கூட போதும்.

செய்முறை:
1 )கோதுமையை முழுகும் அளவு நீரில் ஊற வையுங்கள்.12 - 16 மணி நேரம் வரை ஊறலாம்.

2)பின்னர் நீரை நன்றாக வடித்து கழுவி அதை ஒரு துணியில் முடிந்தோ  இல்லை ஒரு hotpack லோ வைத்து 12 - 16 மணி நேரம் வைக்கவும்.திறந்து பார்க்கும் போது நன்றாக முளை கட்டி இருக்கும்.


3) நீங்கள் வளர்க்க விரும்பும் பாத்திரத்தில் மண்ணை நிரப்புங்கள்.பின் முளைகட்டிய கோதுமையை அதில் பரப்பி மேலும் மண்ணை தூவி மூடுங்கள்.கவனம் மண்ணை கோதுமை மறையும் வரை தூவினால் போதும் .அளவுக்கு அதிகமாக மண்ணை நிரப்பி மூடினால் கோதுமை புல்  வளர்வதில் சிரமம் இருக்கும். 





 4) இதற்கு அதிக நீர் தேவை படாது.கோதுமை புல் முளைத்து வெளியில் தெரியும் வரை நீரை கைகளால் தெளித்தால் போதுமானது.

5) படத்தில் இருப்பது விதை இட்டு நான்கு நாட்கள் கழித்து வளர்ந்து இருக்கும் கோதுமை புல்.அடுத்து இருப்பது ஒரு சிறிய பிளாஸ்டிக் டம்ளர் இல் வளர்த்தது.


6) படத்தில் இருப்பது வளர்ந்து 8 நாட்கள் ஆனா கோதுமை புல்.7 - 8 இன்ச் உயரம் வரும் போது நீங்கள் அறுவடைக்கு தயாராகலாம்.!!!

7) அடியில் வெள்ளை நிறத்தில் தெரியும் பகுதியை விட்டு புல்லை நறுக்கலாம்.நீங்கள் நறுக்கிய பின்னரும் புல் வளர தொடங்கும்.இரண்டு முறை அறுவடை செய்த பின்னர் முழுவதும் எடுத்து விதை இட்டு மறுபடியும் தொடங்கலாம்.



8)  கோதுமை புல்லை நன்றாக கழுவி கொள்ளவும்.



9) mixie இன் ஜூஸ் extractor இலோ அல்லது blender இலோ கழுவிய புல்லை இட்டு சிறிதளவு நீர் விட்டு அரைத்து எடுக்கவும்.நன்றாக பிழிந்து வடிகட்டினால் கோதுமை புல்  சாறு தயார். 


மேலும் கோதுமை புல் வளர்ப்பது மற்றும் சாறு தயாரிக்கும் முறையை காணொளியாக காண இந்த லிங்க் களை பார்க்கவும்.



மேலும் ஏதும் சந்தேகம் இருந்தால் கீழே இருக்கும் லிங்க் ல் பார்க்கவும்.


தொடர்புடைய பதிவுகள்:


FACEBOOK கில் கனவு இல்லத்தை தொடர இங்கே கிளிக்கவும் 
https://www.facebook.com/kanavu.illam.blog


10 comments:

  1. மிகவும் பயனுள்ள பகிர்வு... எளிதாகவும் இருக்கிறது... இணைப்புகளிலும் பார்க்கிறேன்... நன்றி... தொடர வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. உங்கள் தளம் .in என்று முடிவதால் தமிழ்மணம் இணைப்பதிலும், ஓட்டு அளிப்பதிலும் சில மாற்றங்கள் html-ல் செய்ய வேண்டும்... தொடர்பு கொள்ளவும்... dindiguldhanabalan@yahoo.com நன்றி...

    ReplyDelete
  3. appadiya..nanri thanabalan sir.will send mail to you.

    ReplyDelete
  4. இதற்கு சூரிய ஒளி அவசியமில்லையா?? வீட்டின் உள்ளேயே வளர்க்கலாமா??

    ReplyDelete
  5. வெயிலில் வைக்க வேண்டும் என்ற அவசியமில்லை.சூரிய வெளிச்சம் படும் இடம் போதும்.பால்கனி,ஜன்னல் திட்டுகளில் அருமையாக வளரும்.நான் இதை வளர்த்த போது வெயிலில் வைக்கவே இல்லை.கதவு பக்கத்தில் வைத்து இருந்தேன் because எலி likes கோதுமை புல் வெரி மச் :-)

    ReplyDelete
  6. ஓ மிக்க நன்றிங்க...அவசியம் செய்து பார்க்கிறேன்..நேரமிருக்கும் போது என தளத்திற்கும் வாங்க..

    http://sashiga.blogspot.fr

    ReplyDelete
  7. அருமையான பயனுள்ள பதிவு. எனது பக்கத்தில் பகிர்கிறேன்.
    நன்றி & வாழ்த்துகள் திருமதி Leelagomathi SV

    ReplyDelete
  8. It seems very healthy and easy to prepare.
    Thanks,

    ReplyDelete
  9. பேஸ்புக் விலாசம் தெரியப்படுத்தவும்

    ReplyDelete
  10. பேஸ்புக் விலாசம் தெரியப்படுத்தவும்

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...