Wednesday, May 1, 2013

குப்பைகளை கழிக்கும் முறை -2 - ஈர பதம் உள்ள குப்பைகள் (குப்பைகளை சரியான முறையில் வெளியே கொட்டுவது)

இதை படிக்கும் முன் இதன் முதல் பாகம் Waste Management - குப்பைகளை கழிக்கும் முறை-1 படித்து பின் இதை படிக்கவும்.

Wet waste (ஈர பதம் உள்ள குப்பைகள்)
    • சமைத்த உணவு பண்டங்கள் (சைவம்  /அசைவம்  )
    • சமைக்காத உணவு பண்டங்கள் (சைவம்  /அசைவம்  )
    • பழங்களின் கழிவுகள் ,தோல்கள் ,விதைகள்  
    • காய்கறி கழிவுகள் 
    • பூஜையறை இல் இருந்து கழியும் பூக்குப்பைகள் 

இந்த மாதிரியான குப்பைகள் தினமும் நம் வீட்டில் இருந்து கழியும் .இதோடு இனிமேலாவது பிளாஸ்டிக் குப்பைகளையோ மற்ற குப்பைகளையோ  கலக்காமல் இருப்போம்.

இந்த குப்பைகளை  இரண்டு வகைகளில் கழிக்கலாம்.

1)குப்பைகளை சரியான முறையில் வெளியே கொட்டுவது.
2)இந்த வகை குப்பைகளை compost (மக்க வைத்து உரமாக மாற்றுவது ) செய்து நம் வீட்டு தோட்டங்களில் பயன்படுத்துவது.

இரண்டாவது முறை யில் குப்பைகளை கழிப்பது எல்லோராலும் சாத்தியபடாது.அதனால் முதலில்  முறையாக இந்த குப்பைகளை எப்படி வெளியே கொட்டுவது என்று பார்ப்போம் .

செய்ய வேண்டியது :

1)அடுப்பங்கரைக்கு என்று தனியாக ஒரு குப்பை தொட்டி வைத்து கொள்ளுங்கள் .
2) மற்ற குப்பைகளை இதோடு கலக்க கூடாது.
3) பிளாஸ்டிக் கவர்களை குப்பைதொட்டிக்குள் வைத்து அதன் மேல் குப்பை கொட்டுவதை  தவிர்ப்போம்.
4) குப்பைகளை பிளாஸ்டிக் கவர்களில் கொட்டி வெளியே கொட்டுவதை தவிர்க்க வேண்டும்.


எல்லாம் சரிதான்.பிளாஸ்டிக் கவர் வைக்காமல் குப்பை கொட்டினால் அசுத்தமான குப்பை தொட்டியை யார் கழுவுவது என்று கேட்பவர்களும் இருப்பார்கள்.அதற்க்காகதான் கவர் வைத்து போடுகிறோம் என்பார்கள்.

கொஞ்சம் யோசித்து பாருங்கள் .நம் வீட்டு குப்பைதானே அது.நாம் சாப்பிட்ட கழிவுகளும் காய்கறி கழிவுகளும் தானே அதில் ஒட்டி கொண்டு இருக்கும்.கொஞ்சம் மெனக்கிட்டு ஒரு கப் தண்ணீர் ஊற்றி கழுவி கொண்டால் ஆயிற்று.அதற்கு மாற்றாக 800 வருடங்கள் ஆனாலும் மக்காத ஒரு பிளாஸ்டிக் கவரை தினம் தினம் நாம் மண்ணில் கொட்டுகிறோம்.

எனவே இனி படத்தில் உள்ளது போல ஈர பதம் உள்ள குப்பையை கவர் வைக்காமல் நேரிடையாக தொட்டியில் கொட்டுவோம்.பின் கழுவி கொள்ளலாம்.



இல்லை என்றால் கீழ் கண்ட படத்தில் உள்ளது போல ஒரு செய்தி தாளை கூம்பு (cone ) வடிவில் வைத்து குப்பை தொட்டியில் வைத்து அதன் மேல் குப்பைகளை கொட்டி பின் வெளியில் கொட்டலாம்.இந்த முறையில் கழுவ கூட அதிகம் தண்ணீர்  கூட செலவழியாது.




ஒரு சின்ன முயற்சி தானே.முயன்று பார்க்கலாம்.இயற்க்கைக்கு நம்மால் ஆன ஒரு சின்ன உதவி.உங்கள் உறவினர்களிடமும் நண்பர்களிடமும் கூட இதே போல செய்ய வலியுறுத்துங்கள் .

பதிவு தொடரும்....
FACEBOOK கில் கனவு இல்லத்தை தொடர இங்கே கிளிக்கவும் 
https://www.facebook.com/kanavu.illam.blog


5 comments:

  1. நல்ல யோசனைகள்... வீட்டில் இது போல் தான் செய்கிறார்கள் (குழந்தைகள் உட்பட)...

    தொடர வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. முகநூல் நண்பர் திருமதி Leelagomathi SV அவர்களின் பயனுள்ள பதிவு - ஈர பத உள்ள குப்பைகளை பிளாஸ்டிக் கவர் உபயோக படுத்தாமல் கழிப்பது குறித்து எனது வலை பூவில் பதிவு இட்டுள்ளேன்.
    நண்பர்கள் படித்து பார்க்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.
    வாழ்த்துகள் திருமதி லீலா கோமதி, நல்ல முயற்சி, நிறைய எழுதுங்கள்.

    ReplyDelete
  3. ரொம்பவும் அருமையான, உபயோகமான பதிவு!

    ReplyDelete
  4. மிகவும் பயனுள்ள அனைவரும் பின்பற்றவேண்டிய விபரம். பகிர்விற்கு நன்றி!

    ReplyDelete
  5. சரிய சொன்னீங்க

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...