Thursday, May 31, 2012

கடை வீதி - 1

கடை வீதி  ...ம்ம்ம்...என்ன பகுதி இது ? shop visit ன்னு வச்சுக்கல்லாம்... கடை அறிமுகம்...ஆனா நான் இந்த shop அ visit பண்ணலையே...ஓகே...வெப்சைட் விசிட் ன்னு வேணா வச்சுக்கலாம்...;-)  
பிளாஸ்டிக் எவ்வளவு கேடுன்னு சொல்றதுக்கு நிறைய தளங்கள் இருக்கு...நம்மளும் அதையே திருப்பி திருப்பி சொல்ல வேண்டாம்...பிளாஸ்டிக் கூடைகள், கவர்கள் ன்னு நம்ம அன்றாட வாழ்க்கைல ஒரு முக்கியமான இடத்த இந்த பிளாஸ்டிக் பிடிச்சுடுச்சு...

அதுனால நம்ம இன்னைக்கு பாக்க போறது பிளாஸ்டிக்கு ஒரு மாற்றா பனை ஓலை கொண்டு செய்ய படும் பொருட்கள்....பனை ஓலை விசிறிகள் பார்த்துருப்பீங்க ... கூடைகள் கூட முன்னாடி உபயோக படுத்திருப்போம்...
இதுன்னால சுற்று சூழலுக்கு எந்த கேடும் கொண்டு வராது..அதோட நம்ம blog கோட நோக்கமான வீட்டு அலங்காரமும் நிறைவேற போகுது...

இந்த மாதத்தோட முதல் பதிவு இவ்வளவு கலர் ful லா இருக்கும் ன்னு நானே நினைக்கல ...இன்னைக்கு நம்ம ஒரு foundation/shop பத்தி பாக்க போறோம்...ஒரு நல்ல இணைய தளத்த அறிமுகம் செஞ்சுக்க போறோம்...
இது சென்னைல இருக்குற ஒரு non profit organaization . இந்த கடையோட பேர் மஞ்சள்.இது ஒரு craft store ...அடுத்த முறை சென்னை போகும் வாய்ப்பு கிடைச்ச கண்டிப்பா இந்த கடைக்கு போனும்னு நான் முடிவே பண்ணிட்டேன்... முதல்ல இந்த கடைல கிடைக்குற பொருட்களோட கொஞ்ச படங்கள பார்க்கலாம்...அப்புறம் நான் ஏதும் பேச வேண்டாம்...படங்களே பேசும்...

இவை அனைத்துமே பனை ஓலை கொண்டு செய்யப்படும் பொருட்கள்...கிட்ட தட்ட அழிந்து போன இந்த செட்டிநாடு கிராம கலையை modern சமுதாயத்துக்கு ஏத்த மாதிரி colourful la இவங்க மீட்டு எடுத்துட்டு வந்துருக்கங்கன்னு தான் சொல்லணும்... 




இதுலயே இம்ப்ரெஸ் ஆகிருபீங்க ... இதையும் பாத்துருங்க...







இது கடையோட interior ...


 image courtesy : M.Rm.Rm. cultural Foundation

அந்த டேபிள் ல இருக்குற டேபிள் மேட்...dining டேபிள் லையோ..இல்ல wall hanging காவோ use பண்ணினா எவ்வளவு அழகா இருக்கும்ல... 

நான் இங்க சொன்னது ரெம்ப கொஞ்சம்தான்...website ல பார்தீங்கன்னா இன்னும் அழகா இருக்கும்... சென்னைல இருக்கவங்க கண்டிப்பா கடைக்கு போய் பாருங்க...

ஓகே...இப்போ கடையோட அட்ரஸ்...
                                                    M.Rm.Rm. cultural Foundation
70 MRC Nagar Main Road, MRC nagar, RA Puram, Chennai - 600 028.
Phone: 91 44 24622505

ரங்கோலி - 1

கோலம் போட நம்ம பெண்களுக்கு சொல்லி தர வேண்டாம்...இந்த பகுதில கொஞ்சம் வித்தியாசமான கோலங்கள் பத்தி பாக்கலாம்...
இதுல முதல் பதிவா நான் prize வாங்குன கோலம் பத்தி சொல்றேன்... இது அரிசிய வச்சு போடற ரங்கோலி...
இதுக்கு தேவையான பொருட்கள் 


food color - என்ன என்ன கலர் ல கிடக்குமோ அத use பண்ணுங்க..நான் இதுல மஞ்சள், பச்சை, ஆரஞ்சு use பண்ணிருக்கேன்... 
blue ink,red ink,green ink - இதுல கிடக்கற கிரீன் கலர், food கலர் ல கிடைக்குற  கிரீன் கலர் ரும் வேற வேற மாதிரி தான் இருக்கும்...
அரிசி - உங்க கோலத்துக்கு தேவையான அளவு...கொஞ்சம் குண்டு குண்டான அரிசியா பார்த்து வாங்கிகோங்க  ...
நான் இதுல ரேஷன் அரிசிதான் உபயோக படுத்திருக்கேன்...

கைல முடிஞ்சா glouse போட்டுட்டு பண்ணுங்க...தரைல பேப்பர் விரிச்சுகொங்க...அதுக்கு மேல ஒரு பிளாஸ்டிக் ஷீட்ல தேவையான அளவு அரிசி ய போட்டு இன்க்  ன்னா அப்படியே அரிசி மேல ஊத்தியே கலக்கலாம். .. 
food கலர் னா கொஞ்சம் தண்ணீர் ல கலந்துகிட்டு அரிசி மேல விட்டு கலந்து விட்டுகொங்க...

இத மாதிரி உங்களுக்கு தேவையான கலர் ல அரிசிய தயார் பண்ணிக்கணும்...கொஞ்ச நேர இந்த அரிசிய அப்படியே காய விடுங்க...நல்லா காஞ்சதும் டப்பாக்களில் எடுத்து வச்சுகோங்க... 

image courtasy : origamy
இப்போ நான் போட்ட கோலம்..
  
பிள்ளையார் சதுர்த்திக்காக நடந்த competion ங்கறதால நடுல பிள்ளையார் மாதிரி (!!!) போற்றுகேன்... இதே competion ல என்னை கவர்ந்த மற்ற 2 கோலங்கள் உங்க பார்வைக்கு...


 இவங்க ரெண்டு பேரும் அரிசி மட்டும் இல்லாம பருப்பு கோதுமை எல்லாம் உபயோக படுதினதுனால prize கிடைக்கல...



இப்போ நம்ம பாக்க போறது இதே முறைல என் அறுசுவை/Facebook தோழி கவிசிவா & கோ போட்டு முத பரிசு வாங்கின கோலம்...

இதையும் பாருங்க 

Wednesday, May 30, 2012

DIY - நீங்களே செய்யலாம் - 2 / சுவர் அலங்காரம் - 2


இதுவும் ஏற்கனவே சொன்ன ஐடியா தான்... invitation  கார்ட்ஸ்...
இது நான் என்னோட ஹால் ல ஒரு பக்க சுவர் ல பண்ணிருக்கற அலங்காரம்...


நான் ஏற்கனவே http://kanavuillam.blogspot.in/2012/05/diy-1.html சொன்ன மாதிரி வேற வேற color contrasting invitation கார்ட்ஸ் அ ஒட்டி செட் பண்ணிருக்கேன்...இதுல நடுல பிள்ளையார் இருக்கறதால சுத்தியும் பிள்ளையார் theme எடுத்துட்டு பண்ணிருக்கேன்...      

சுவர் அலங்காரம் - 1

உங்க வீட்டுல ஒரு சுவர் ரெம்ப வெறுமையா இருக்குன்னா உங்க மனசும் வெறுமையா இருக்குன்னு அர்த்தமாம்...அப்டில்லாம் விடலாமோ?

இப்போ latest trend சுவர் அலங்கரதுல என்னன்னு பார்த்தீங்கன்னா wall decal or ஸ்டென்சில் டிசைன் பண்றதுதானாம்...அது என்னடான்னு பார்த்தீங்கன்னா இந்த படத்த பாருங்க உங்களுக்கே புரியும்...  

image courtesy : wall sticker

இந்த மாதிரி சுவர் ல permanent அவோ இல்ல remove பண்ற மாதிரியோ decorate பண்றது...  
உங்களுக்கு கொஞ்சம் வரையுற திறமையும், சுவர் ல அலங்காரம் பண்றதுக்கு அனுமதியும்(!!!!) இருந்துதுன்னா நீங்களே பண்ணலாம். இல்லைன்னா  இந்த மாதிரி ஸ்டிக்கர்ஸ் வாங்கி ஒட்டி வைக்கலாம் . அதும் இல்லன்னா ஸ்டென்சில் கிடைக்குது...அப்படின்னா என்னன்னு கேக்குறீங்களா?

image courtesy: balzer designs
இது தான் ஸ்டென்சில்...இத சுவர்ல ஒட்டி இது மேல பெயிண்ட் பண்ணினா இந்த ஸ்டென்சில் ல இருக்குற டிசைன் உங்க சுவர் ல வந்துடும்....அப்பறம் இந்த பேப்பர் அ எடுத்துடனும்.இத மாதிரி ஸ்டென்சில் நம்மளே பண்ணலாம்..இல்லைன்னா ரெடிமேட்  ஆவும் கிடக்குது...
அத வாங்கி பண்ணல்லாம்...நம்மளே அலங்காரம் பண்ணினா திருப்தியும் கிடைக்கும்...இல்லைன்னா professional painters அ வச்சும் பண்ணலாம்... இந்த படங்கள பாருங்க...உங்களுக்கே ஒரு ஐடியா கிடைக்கும்...
 



image courtesy : cuttingedgestencils

Monday, May 28, 2012

டேபிள் அலங்காரம் -1


உங்க வீட்டுல சின்ன சின்ன கண்ணாடி பாட்டில்கள் இருக்கா...அத வச்சு கூட செலவில்லாம உங்க டேபிள் அ அழகா வச்சுக்கலாம்...(சின்ன குழந்தைகள் இருந்தா கவனம்...)...இதோ இங்க பாருங்க...





பாட்டில் க்கு எங்க போறதுன்னு கேக்கறீங்களா ...இருக்கவே இருக்கு நம்ம maggi sauce பாட்டில், ஊறுகாய் பாட்டில்,ink பாட்டில்,dettol பாட்டில்...;-)

Image courtesy :Blogger
Image courtesy: vintage bottles

Sunday, May 27, 2012

DIY - நீங்களே செய்யலாம் - 1

என்னதான் கடைல இருக்குற அழகான பொருட்கள வீட்டுல வச்சு அழகு படுத்தினாலும் நம்மளே சின்ன சின்ன பொருட்கள் செஞ்சு நம்ம வீட்ட அழகு படுதற திருப்தியே தனிதான்...அந்த மாதிரி சின்ன சின்ன crafts பண்ண சொல்லி தரதுதான் இந்த பகுதியோட நோக்கம்...DO it yourself !!!!        

உங்களுக்கு வர வித்தியாசமான color color ஆன invitations அ சேகரிச்சு  வைக்குற பழக்கம்  இருக்கா உங்களுக்கு...அப்போ நீங்க உடனே இத செஞ்சுடலாம்...

நம்ம வீட்டுக்கு வரவங்க முதல்ல பாக்குறது calling bell அ தான் ....சோ அத simple அ அலங்கரிக்குறதுதான் இந்த project . 

இதுக்கு தேவையான பொருட்கள் நாலஞ்சு விதமான invitation , கத்திரிகோல், ordinary gum / பசை....


இது நான் என் வீட்டு calling பெல்லுக்கு பண்ணிருக்கிற அலங்காரம்... contrasting color அட்டைகள எடுத்துகோங்க... உங்களுக்கு விருப்பமான geometric  வடிவங்கள்ல அத வெட்டி ஒட்டி முடிச்சா அழகான craft தயார்... எனக்கு ராஜா காலத்து மடல் அனுப்புற ஸ்டைல் ல வந்த invitation அ பேஸ் அ வச்சு அதுக்கு மேல மத ரெண்டு கலர் அ வந்த invitation அ ஒட்டி இன்னொரு invitation ல இருந்து பிள்ளையாரையும் ஒட்டி முடிச்சா அழகான இந்த craft தயாரா ஆகிடுச்சு...
நீங்களும் உங்க விருப்ப படி இந்த மாதிரி செஞ்சு பாருங்களேன்... 

ஆகும் செலவு : ௦ ௦ ௦௦0 Rs ;-) 
  

Friday, May 25, 2012

உருளியில் பூ அலங்காரம்


நம் வீட்டு வரவேற்பறையை அதிகம் செலவில்லாமல் அம்சமாக அலங்கரிக்க ரெம்ப சுலபமான வழி ஒரு மண் (terrakotta )அல்லது வெண்கல உருளியில் தண்ணீர் நிரப்பி அதில் பூக்களை இட்டு நிரப்புவதுதான்...  உங்க வீட்டு தோட்டத்தில் பூத்த பூக்களை வச்சு அலங்காரம் பண்ணினா மனசுக்கும் சந்தோசம்..purse க்கும் சந்தோசம்.


எங்க வீட்டுல ஒரு வெண்கல உருளி இருக்கறதுனால நான் அதையே உபயோக படுத்திட்டு இருக்கேன்..இருந்தாலும் ஒரு டெரகோட்டா உருளி பெரியது வாங்கணும் நு ரெம்ப ஆசை.உருளி ல பூக்கள் போடறது மட்டும் இல்லாம மிதக்கும் விளக்குகள் வாங்கி உருளி ல மிதக்க விட்டு மாலை நேரத்துல ஏத்தி வைக்கலாம்.

இல்லன்னா வாசனை மெழுகு வர்த்திகள் வாங்கி இந்த உருளிகளுக்கு பக்கத்துல ஏற்றி வைத்தாலும் ரம்மியமா இருக்கும்.அட அதெல்லாம் கூட வேண்டாங்க ..ஒரு சாம்பிராணி யை பொருத்தி பூக்கள் நிறைந்த உருளி பக்கம் வைங்க....அந்த அறையோட சூழ்நிலையே மாறிடும்.

இந்த படத்த பாருங்க...தோட்டத்துல கூட உருளி பார்வையா இருக்கில்லங்க...  


வெண்கல உருளிகள் இப்போ விலை அதிகமா தாங்க இருக்கு...உங்க வீட்டுல பாட்டி காலத்து வெண்கல பாத்திரங்கள் ல்லாம் இருந்தா அழகா அத வச்சே உங்க வீட்ட அலங்கரிக்கலாம்... பொங்கல் வைக்குற வெண்கல பானைகள் ல்லாம் இருந்தா அத அழகான செயற்கை பூங்கொத்துக்கள் வச்சு வரவேற்பறைல வைக்கலாம் ...

டெரகோட்டா பொருட்களை பெரிய பெரிய கடைகள்ல யோ மால் கள் ல வாங்குறத விட சாலை ஓரங்களில் மண் பாண்ட தொழிலாளர்கள் கிட்ட வாங்கலாம்...விலை ரெம்பவே மலிவா தான் கிடைக்கும்...தரமானதவும் இருக்கும்.நம்ம பட்ஜெட் குள்ள வும் அடங்கும் ...இந்த கடைகளில் உருளி முப்பது ருபாய் ல இருந்து கிடக்குது...

Monday, May 21, 2012

வீட்டு காய்கறி தோட்டம்


இது என்னோட குட்டி வீட்டு காய்கறி தோட்டம்...விதை போட்டு இரண்டு வாரங்கள் ஆக போகுது...குட்டி குட்டி செடிகள் மண்ணில் தோன்றி இருக்கின்றன...தினம் தினம் ஒவ்வொரு செடியா மண்ணை கீறி வெளிய  வரத பாக்கறதே ரெம்ப சந்தோசமா இருக்கு... உங்கள் பார்வைக்கு...


கொத்தவரங்காய் 

வெண்டைக்காய் 

மிளகாய் 

தக்காளி 

பீன்ஸ் 

கத்திரிக்காய் 

பீட்ரூட் 

தோட்டத்துல பாத்தி கட்டி 

பாகற்காய் 

என் வீட்டு தோட்டத்தில் பூத்த பூக்கள்

இதெல்லாம் என் வீட்டு தோட்டத்தில் பூத்த பூக்கள்...


LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...