Thursday, July 26, 2012

ஐந்து அழகிய பாட்டில் மறுசுழற்சி ஐடியாக்கள்

முதலாவது பாட்டில்களை அழகிய flower vase ஆக மாற்றுவது...மிகவும் எளிதானதும் கூட...

Image : paperplateandplane
 இங்கு கவனிக்க வேண்டியது மூன்று விஷயங்கள் 
  • பூக்களோட வண்ணத்தோட பாட்டில்களின் வண்ணமும் மேட்ச் பண்ணிருகாங்க...  
  • glitter உபயோகபடுத்தி decorate பண்ணிருக்காங்க... 
  • ஒரே நிறத்தின் வெவ்வேறு shadeகள் உபயோக படுத்தி பாட்டில்களை கலர் பண்ணிருக்காங்க .
ரெண்டாவது ஐடியா பாட்டில்களின் அடி பாகத்தை உபயோகப்படுத்தி தோரணங்கள் கட்டுவது ... நான் சொல்றத விட இந்த  படத்த  பார்த்தால் உங்களுக்கே புரியும்...

Wednesday, July 25, 2012

மெத்தை to sofa

உங்க வீட்டுல பழைய இலவம் பஞ்சு மெத்தை இருக்கா.... புதுசு வாங்கியாச்சு பழச என்ன பண்றது...use ஆகவே இல்ல...ன்னு யோசிச்சுட்டு இருக்கீங்களா...உங்களுக்குதான் இந்த ஐடியா...

Image Courtesy : Mr.Sharad sundar
இங்க பாருங்க ஒருத்தர் எவ்வளவு சிம்பிள் ஆ அவரோட மெத்தையா sofa வா மாத்திருக்கார்... வீட்டுகுள்ள இல்லன்னாலும் பால்கனி ல யாவது போடலாமே...    

Tuesday, July 24, 2012

DIY - நீங்களே செய்யலாம் - 4/Lamp shade

இந்த lamp shade feviart facebook page மூலமா கிடச்சுது...  ரெம்ப சிம்பிள் ஆன ஒரு lamp shade செய்முறை. 


தேவையான பொருட்கள் :
பலூன் - 1
fevicol
கொஞ்சம் தடிமனான சனல் நூல் கண்டு -1
பலூனை ஊதி கொள்ளுங்கள்.பின் அதன் மேல் ஒரு bulb உள்ளே செல்லும் அளவுக்கு இடம் விட்டு ஒரு வட்டம் வரைந்து கொள்ளுங்கள்.
சனல் நூல் கண்டின் மேல் பெவிகால் தடவி கொள்ளுங்கள்.வெறும் fevicol  லை தடவுவது கடினமாக இருக்கும்.அதனால் பெவிகால் லை சிறிது நீருடன் கலந்து பின் கண்டின் மேல்  தடவுங்கள்...
பின் அதை பலூன் முழுவதும் படத்தில்  காண்பித்தது போல் சுற்ற தொடங்குங்கள்.இவ்வாறு சுற்றியவுடன் ஒரு இரவு முழுவதும் இதை காய விடுங்கள்.
காலையில் பலூனை எடுத்து விடுங்கள்.
எடுத்தால் அழகிய எளிதான சனல் நூல் கண்டு lamp shade தயார்...



Project & Image courtesy : FEVIART 

Tuesday, July 17, 2012

X-ray மறுசுழற்சி - 2

x ray வைத்து வேற என்னல்லாம் பண்ணலாம் ன்னு தேடின அப்போ இந்த படம் கிடைச்சுது...

image : www.grainsofearth.org


இதுவும் நல்ல ஐடியா தான் இல்லையா...spiral பைண்டிங் பண்றதுக்கு x ray use பண்ணிருக்காங்க... xerox கடை காரங்க வீடு வீடா பேப்பர் collect பண்றவங்க கிட்ட சொல்லி இப்படி x ray collect பண்ணி அவங்க கடையில easy யா recycle பண்ணலாம்... 
அது பேராசையோ...:-) முடிஞ்ச அளவு நம்ம வீட்டுக்கு எதாச்சும் xerox இல்ல spiral பைண்டிங் பண்ணினா நம்ம வீட்டுல இருக்கிற x ray க்கள மறு சுழற்சி பண்ணிக்கலாம்...     
இன்னொரு funny ஐடியா... தோரணம் கட்டலாம்...

image : www.grainsofearth.org

Sunday, July 15, 2012

X-ray மறுசுழற்சி

பழைய x -ray க்கள்   - இது எல்லார் வீடுகள் லயும்   கண்டிப்பா ஏதோ ஒரு அலமாரில ஒளிஞ்சுகிட்டு இருக்கும்...திரும்ப அது உதவாது...ஆனாலும் சில நேரம் நம்ம அந்த பழைய x ray க்கள தூக்கி போடாம வச்சுக்கிட்டு இருப்போம்...அத மறுசுழற்சி பண்ற ப்ராஜெக்ட்(!!) தான் இது...

x ray வையுமா அப்படின்னு நீங்க கேக்குறது எனக்கும் கேக்குது... ;-)

x ray ல வரையறதுக்கு பென்சில் தான் கரெக்ட் choice ... ஸ்கெட்ச் um உபயோக படுத்தலாம் .. ஆனா correction பண்ணனும்னா பென்சில்னா அழிச்சுட்டு வரஞ்சுக்கலாம்...

உங்களுக்கு வரைய  தெரிஞ்சா ஓகே... இல்லன்னா  உங்களுக்கு பிடிச்ச படத்து மேல x ray ய  வச்சு easy யா trace பண்ணிடலாம்...

பிறகு போஸ்டர் கலர்ஸ் வச்சு கலர் பண்ணிபருங்க...சும்மா சூப்பரா இருக்கும்...இது நான் அப்படி பண்ணின ஒரு painting ...நான் வரஞ்சுதான் பண்ணிருக்கேன்...போஸ்டர் கலர்ஸ் and 3d கலர்ஸ் உபயோக படுத்திருக்கேன்...



சின்னதா ட்ரை பண்ணி பாக்கனும்னா butterfly வரஞ்சு ட்ரை பண்ணி பாருங்க...3 னு  butterflies பெரிசு , சின்னது அதுக்கும் சின்னதா ஒண்ணுன்னு வரஞ்சு கலர் பண்ணி குழந்தைங்க ரூம்ல ஒட்டி பாருங்களேன்... 

Thursday, July 12, 2012

DIY - நீங்களே செய்யலாம் - 3/பிளாஸ்டிக் ஸ்பூன் recycling

இதும் ஒரு recycling project தான்
சே...சான்சே இல்ல..உட்கார்ந்து யோசிப்பாங்களோ அப்படின்னு என்னை யோசிக்க வச்ச ஒரு DIY project இது... பிளாஸ்டிக் spoons அ கண்டிப்பா தூக்கி வீசாம collect பண்ண ஆரம்பிச்சுருக்கேன்...என்ன ஒரு creativity ...  
Project & Image Courtesy :   ohmyindia







இதுக்குள்ள ஒரு பல்ப் வச்சு connection கொடுத்தா இப்படி வரும்...

இன்னும் கலர் ஸ்பூன்ஸ் o இல்ல இந்த ஸ்பூன்ஸ் ye கலர் பண்ணி வச்சா இன்னும் பிரமாதமா இருக்கும்... சின்ன பாட்டில்கள் ல்ல  கூட ட்ரை பண்ணி பாக்கலாம்..

Wednesday, July 11, 2012

பாட்டில் recycling

இன்னைக்கு பதிவும் பாட்டில் recycling பத்திதான்...

உங்க வீட்டுல சின்ன குழந்தைகள் இருந்தாங்கன்னா இத அவகளுக்கு ஒரு craft ஐடியா வா சொல்லி கொடுங்க...இல்ல சில சமயம் நமக்கே அழகா வரைய  வராது  ...அவங்களும் இந்த technique use பண்ணலாம்...    

Image : alphamom.com


இத செராமிக் tiles ல பண்ணலாம்..இல்ல கனமான craft அட்டைகள் ல்ல கூட பண்ணலாம்...  ஈஸி ஐடியா தானே... 

அப்படியே இந்த ஐடியா வும் கொஞ்சம்  பாருங்க ... சில சமயம் கடைகள் ல்ல கவர் ல வாங்கிட்டு வர பொருட்கள் ல வக்குரதுக்கு தகுந்த டப்பா கிடைக்காது...அத ஒரு முடிச்சு போட்டோ இல்ல ஒரு ரப்பர் பேண்ட் சுற்றியோ வைப்போம்.இந்த ஐடியா வ பாருங்களேன்...  

Image: Facebook

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...