Tuesday, June 12, 2012

செய்திதாள் மறுசுழற்சி (Newspaper Recycling)

இன்னைக்கு மொதல்ல படங்கள பாப்போம்...அப்புறம் விசயத்துக்கு வருவோம்... 







                                   

Image : ecocornerindia

என்னங்க எதுல செஞ்சு இருக்காங்கன்னு கண்டு பிடிச்சீங்களா ..
நானும் மொதல்ல பாக்கும் போது பிளாஸ்டிக்கோ இல்ல ஓலை கூடைகள் ன்னு நினச்சேன்...
ஆனா எல்லாமே செய்தி தாள்கள் ள செஞ்ச பொருட்கள்... 
இதெல்லாம் eco friendly paints ல கோட் பண்ணிருகங்கலாம்...கழுவினா கூட ஒன்னும் ஆகாதாம்...உடையவும் செய்யாதாம்...

இதுல செடிகள் நடவோ இல்ல laundry bag ஆவோ fruit basket ஆவோ இல்ல jewels வைக்கவோ ....நீங்க பிளாஸ்டிக் டப்பாக்கள் எதுக்கெல்லாம் use பண்ணுரீங்கள்லோ  அதுக்கு மாற்றா இத உபயோகிக்கலாம்... 

நானும் முடிஞ்சா இப்படி ஒன்னு செஞ்சு பார்த்துட்டு படங்கள் போடுறேன்...
வாங்கனும்ன்னு நினைசீங்கன்னா இந்த பொருட்கள் கிடக்குற இடம் 

Ecocorner
1 St floor , Skyzonel , High Street phenoix, lower parel, mumbai -13
Ph No : 022 3004 2350
Email Id: ecocornerindia@gmail.com

Monday, June 11, 2012

terracota உருளி அலங்காரம்


ஒருவழியா என் terracotta உருளி ஆசை நிறைவேறிடுச்சு...சமிபத்துல பக்கத்துக்கு டவுனுக்கு போயிருந்த  போது ஒரு குஜராத்தி exhibition நடந்துது...அங்க தான் கிடச்சுது...

ஒரு terracotta உருளியும் ஒரு பெரிய flower vase,அப்புறம் ஒரு சின்ன துளசிமாடத்துல வைக்குற விளக்கு  um   வாங்கிட்டு வந்தேன்...full  ஆ பெயிண்ட் பண்ணின vase உம் உருளியும் தான் வச்சுருந்தாங்க...அந்த தாத்தாவ பேசி சரி பண்ணி பெயிண்ட் பண்ணாத  சாமானா பார்த்து வாங்கிட்டு வந்தேன்... 

ரெண்டு காரணம் ஒண்ணு natural கலர் ல தான் உருளி நல்லா இருக்கும்.ரெண்டாவது போர் அடிக்கும் போது நம்மளே பெயிண்ட் பண்ணிக்கலாம்னு...அதோட சிக்கன நடவடிக்கையா பெயிண்ட் பண்ணாத உருளி விலை கொறைச்சு தந்தார் அந்த தாத்தா...  

அதோட அங்க வச்சுருந்த பிளாஸ்டிக் தாமரை பூக்கள் (!!) அப்டியே என்னை கவர்ந்து ரெண்டு தாமரை பூவும் வாங்கியாச்சு...பக்கத்துல வச்சுருந்த மிதக்கும் விளக்குகள் யையும் ஏன் விடுவான்னேன்னு அதையும் வாங்கியாச்சு... இப்போ படங்கள் ...


அந்த குட்டி கிருஷ்ணர் என் அம்மா எனக்கு கொடுத்தாங்க..அவரும் தாமரை பூவில இருந்ததுனால ஒரு டம்ளர் ஆ தலைகீழ வச்சு அதுக்கு மேல வச்சேன்...அதுனால அவரும் உருளியில் மிதந்துகிட்டு இருக்கார்..... 


இது அந்த vase ..

DIY - நீங்களே செய்யலாம் - 3: பிளாஸ்டிக் பாட்டில் இல் இருந்து ஒரு ஹோல்டர்

பிளாஸ்டிக் bottles அ பொதுவா நம்ம தூக்கி போட்டுடுவோம்...
அதுல இருந்து எப்படி அழகா ஒரு ஹோல்டர் செய்யறதுன்னு கத்துக்கலாம்...இத flower vase ஆவோ, இல்ல pen stand ஆவோ இல்ல spoon stand ஆவோ எப்படி வேணா use பண்ணிக்கல்லாம்... 


 தேவையான பொருட்கள் :
ஒரு பிளாஸ்டிக் பாட்டில்
கத்திரிகோல் 
படத்தில் காமித்த படி பாட்டில்லை பாதியாகவோ இல்ல உங்களுக்கு stand எந்த உயரத்திற்கு தேவை படுதோ அந்த அளவிற்கு கட் பண்ணிகொங்க...   
 இது முழுவதும் கட் பண்ணிய பிறகு...
 பின் படத்தில் காட்டியது போல நீள வாக்கில் strips (முக்கால் இன்ச் )  ஆக கட் செய்து கொள்ளவும்...
 அப்படி கட் செய்தால் 
 இப்படி வரும் 
 பின் இந்த strips ஒவ்வொன்றையும் படத்தில் காட்டிஉள்ளது  போல பாதியாக மடித்து விடவும்.பின் ஒரு strip எடுத்து மேல்பக்கமாக பக்கத்தில் உள்ள strip பில் பொருத்தவும்...   
மடித்து விடுவதால் ஒவ்வொன்றும் நன்றாக பிடித்து  கொள்ளும். 



பின் அதை படத்தில் காட்டிஉள்ளது போல திருப்பி நன்றாக அழுத்தவும்... இது அழகான வட்ட வடிவத்தை tight ட்டாக hold செய்ய உதவும்...

holder தயார்...


Thursday, June 7, 2012

மூங்கில் தட்டி / Bamboo Blinds



Image Courtesy: everythingsimple

சமீபத்தில் நான் டூர் போயிருந்த இடத்துல ஒரு resort  ல மூங்கில் தட்டி வச்சு dining ஹால் full  ஆ கவர் பண்ணி இருந்தாங்க...பாக்கவும் ரெம்ப அழகா இருந்துச்சு...ரூம் um கூல் லா இருந்துச்சு... என்னோட வீட்டு முற்றம் / ஓபன் varanthah க்கு ஒரு மூங்கில் தட்டி போடணும் ன்னு ஆசை வந்துடுச்சு...  இந்த படத்துல இருக்குற மாதிரி roll-able தட்டி யா இருந்த நல்லா இருக்கும்... 



image Courtesy:sarawakianaii

நீங்களும் உங்க வீட்டு பால்கனி க்கு இத ட்ரை பண்ணி பாக்கலாமே... 


image courtesy: ventolite 







பால்கனி ல மட்டும் இல்லைங்க..லிவிங் ரூம் ல இருந்து  எல்லா  ரூம் க்குமே இது அழகா தான் இருக்கும்... 






Image Courtesy : Shiva Shakthi enterprises


வேணுங்கற கலர் ல கூட கிடைக்கும் போல இருக்கு..ஆனா எனக்கு அந்த natural கலர் ஏ நல்லா இருக்குற மாறித்தான் இருக்கு...
Image Courtesy: creativeblossoming


















இல்ல இந்த மாதிரி plain னா வாங்கி உங்களுக்கு புடிச்ச டிசைன் அ பெயிண்ட் பண்ணி வால் hanging   காவும் உபயோக படுத்தலாம்  ...

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...