கடை வீதி ...ம்ம்ம்...என்ன பகுதி இது ? shop visit ன்னு வச்சுக்கல்லாம்... கடை அறிமுகம்...ஆனா நான் இந்த shop அ visit பண்ணலையே...ஓகே...வெப்சைட் விசிட் ன்னு வேணா வச்சுக்கலாம்...;-)
பிளாஸ்டிக் எவ்வளவு கேடுன்னு சொல்றதுக்கு நிறைய தளங்கள் இருக்கு...நம்மளும் அதையே திருப்பி திருப்பி சொல்ல வேண்டாம்...பிளாஸ்டிக் கூடைகள், கவர்கள் ன்னு நம்ம அன்றாட வாழ்க்கைல ஒரு முக்கியமான இடத்த இந்த பிளாஸ்டிக் பிடிச்சுடுச்சு...
அதுனால நம்ம இன்னைக்கு பாக்க போறது பிளாஸ்டிக்கு ஒரு மாற்றா பனை ஓலை கொண்டு செய்ய படும் பொருட்கள்....பனை ஓலை விசிறிகள் பார்த்துருப்பீங்க ... கூடைகள் கூட முன்னாடி உபயோக படுத்திருப்போம்...
இதுன்னால சுற்று சூழலுக்கு எந்த கேடும் கொண்டு வராது..அதோட நம்ம blog கோட நோக்கமான வீட்டு அலங்காரமும் நிறைவேற போகுது...
இந்த மாதத்தோட முதல் பதிவு இவ்வளவு கலர் ful லா இருக்கும் ன்னு நானே நினைக்கல ...இன்னைக்கு நம்ம ஒரு foundation/shop பத்தி பாக்க போறோம்...ஒரு நல்ல இணைய தளத்த அறிமுகம் செஞ்சுக்க போறோம்...
இது சென்னைல இருக்குற ஒரு non profit organaization . இந்த கடையோட பேர் மஞ்சள்.இது ஒரு craft store ...அடுத்த முறை சென்னை போகும் வாய்ப்பு கிடைச்ச கண்டிப்பா இந்த கடைக்கு போனும்னு நான் முடிவே பண்ணிட்டேன்... முதல்ல இந்த கடைல கிடைக்குற பொருட்களோட கொஞ்ச படங்கள பார்க்கலாம்...அப்புறம் நான் ஏதும் பேச வேண்டாம்...படங்களே பேசும்...
இவை அனைத்துமே பனை ஓலை கொண்டு செய்யப்படும் பொருட்கள்...கிட்ட தட்ட அழிந்து போன இந்த செட்டிநாடு கிராம கலையை modern சமுதாயத்துக்கு ஏத்த மாதிரி colourful la இவங்க மீட்டு எடுத்துட்டு வந்துருக்கங்கன்னு தான் சொல்லணும்...


இதுலயே இம்ப்ரெஸ் ஆகிருபீங்க ... இதையும் பாத்துருங்க...
இது கடையோட interior ...
image courtesy : M.Rm.Rm. cultural Foundation
அந்த டேபிள் ல இருக்குற டேபிள் மேட்...dining டேபிள் லையோ..இல்ல wall hanging காவோ use பண்ணினா எவ்வளவு அழகா இருக்கும்ல...
நான் இங்க சொன்னது ரெம்ப கொஞ்சம்தான்...website ல பார்தீங்கன்னா இன்னும் அழகா இருக்கும்... சென்னைல இருக்கவங்க கண்டிப்பா கடைக்கு போய் பாருங்க...
ஓகே...இப்போ கடையோட அட்ரஸ்...
70 MRC Nagar Main Road, MRC nagar, RA Puram, Chennai - 600 028.
Phone: 91 44 24622505
To follow them on Facebook : https://www.facebook.com/pages/MRmRm-Cultural-Foundation/122570857763384