நம் வீட்டு வரவேற்பறையை அதிகம் செலவில்லாமல் அம்சமாக அலங்கரிக்க ரெம்ப சுலபமான வழி ஒரு மண் (terrakotta )அல்லது வெண்கல உருளியில் தண்ணீர் நிரப்பி அதில் பூக்களை இட்டு நிரப்புவதுதான்... உங்க வீட்டு தோட்டத்தில் பூத்த பூக்களை வச்சு அலங்காரம் பண்ணினா மனசுக்கும் சந்தோசம்..purse க்கும் சந்தோசம்.
எங்க வீட்டுல ஒரு வெண்கல உருளி இருக்கறதுனால நான் அதையே உபயோக படுத்திட்டு இருக்கேன்..இருந்தாலும் ஒரு டெரகோட்டா உருளி பெரியது வாங்கணும் நு ரெம்ப ஆசை.உருளி ல பூக்கள் போடறது மட்டும் இல்லாம மிதக்கும் விளக்குகள் வாங்கி உருளி ல மிதக்க விட்டு மாலை நேரத்துல ஏத்தி வைக்கலாம்.

இல்லன்னா வாசனை மெழுகு வர்த்திகள் வாங்கி இந்த உருளிகளுக்கு பக்கத்துல ஏற்றி வைத்தாலும் ரம்மியமா இருக்கும்.அட அதெல்லாம் கூட வேண்டாங்க ..ஒரு சாம்பிராணி யை பொருத்தி பூக்கள் நிறைந்த உருளி பக்கம் வைங்க....அந்த அறையோட சூழ்நிலையே மாறிடும்.
இந்த படத்த பாருங்க...தோட்டத்துல கூட உருளி பார்வையா இருக்கில்லங்க...
வெண்கல உருளிகள் இப்போ விலை அதிகமா தாங்க இருக்கு...உங்க வீட்டுல பாட்டி காலத்து வெண்கல பாத்திரங்கள் ல்லாம் இருந்தா அழகா அத வச்சே உங்க வீட்ட அலங்கரிக்கலாம்... பொங்கல் வைக்குற வெண்கல பானைகள் ல்லாம் இருந்தா அத அழகான செயற்கை பூங்கொத்துக்கள் வச்சு வரவேற்பறைல வைக்கலாம் ...
டெரகோட்டா பொருட்களை பெரிய பெரிய கடைகள்ல யோ மால் கள் ல வாங்குறத விட சாலை ஓரங்களில் மண் பாண்ட தொழிலாளர்கள் கிட்ட வாங்கலாம்...விலை ரெம்பவே மலிவா தான் கிடைக்கும்...தரமானதவும் இருக்கும்.நம்ம பட்ஜெட் குள்ள வும் அடங்கும் ...இந்த கடைகளில் உருளி முப்பது ருபாய் ல இருந்து கிடக்குது...

;) என்னைப் போலவே யோசிக்கிறீங்க. ;) நானும் தோட்டத்தில் இப்படி வைக்கிறது உண்டு, செயற்கை தாமரைகள் இலைகளோடு.
ReplyDeleteஅழகா இருக்கு உங்க வலைப்பூ. வாழ்த்துக்கள்.
நன்றி...இமா...உங்க வலை பூவும் ரெம்ப நல்லா இருக்கு...ஒவ்வொண்ணா படிச்சுட்டு இருக்கேன்...நான் இந்த blogging க்கு கொஞ்சம் புதுசு...கமெண்ட்ஸ் பாக்கவே சந்தோசமா இருக்கு...
ReplyDeleteநான் இந்த வலைப்பூல ஒன்னு ஒன்னா படிச்சிட்டு வரேன் ரொம்ப அருமையா இருக்கு எல்லாமே
ReplyDeleteஎனக்கு ஒரு சந்தேகம் இந்த மாதிரி இந்த மாதிரி உருளில பூக்களை போட்டு வைக்க எதாவுது முக்கிய காரணம் இருக்கா , இதை வீட்டு உள்ளே வைக்கணுமா இல்லை வெளியே வைக்கணுமா (நான் இருப்பது அடுக்கு மாடி குடி இருப்பில் ) இதற்க்கு பதில் தெரிந்தால் சொல்லுங்கள் நன்றி
ரெம்ப நன்றி தனா...இது வாஸ்து படி ஏதோ நல்லதுன்னு நினக்குறேன்...என்னா என் வீட்டுக்கு வரவங்க எல்லாம் வாஸ்துக்காக வச்சுருகீங்கலான்னு தான் கேப்பாங்க...நான் அழகுக்காக தான் வச்சுருக்கேன்...வெளியவும் வைக்கலாம்..வீட்டுக்குள்ளயும் வைக்கலாம்...sofaset center table அ கூட சின்ன உருளியா வைக்கலாம்...நான் கதவுகிட்ட உள்ள வச்சுருக்கேன் தனா...
ReplyDeleteநன்றி கோமதி நானும் வீட்டின் உள்ளே தான் வைத்து இருக்கேன் பதில் கூறியதற்கு நன்றி நானும் அழகுக்காக தான் வைத்து உள்ளேன்
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDelete