உங்க வீட்டுல ஒரு சுவர் ரெம்ப வெறுமையா இருக்குன்னா உங்க மனசும் வெறுமையா இருக்குன்னு அர்த்தமாம்...அப்டில்லாம் விடலாமோ?
இப்போ latest trend சுவர் அலங்கரதுல என்னன்னு பார்த்தீங்கன்னா wall decal or ஸ்டென்சில் டிசைன் பண்றதுதானாம்...அது என்னடான்னு பார்த்தீங்கன்னா இந்த படத்த பாருங்க உங்களுக்கே புரியும்...
image courtesy : wall sticker
இந்த மாதிரி சுவர் ல permanent அவோ இல்ல remove பண்ற மாதிரியோ decorate பண்றது...
உங்களுக்கு கொஞ்சம் வரையுற திறமையும், சுவர் ல அலங்காரம் பண்றதுக்கு அனுமதியும்(!!!!) இருந்துதுன்னா நீங்களே பண்ணலாம். இல்லைன்னா இந்த மாதிரி ஸ்டிக்கர்ஸ் வாங்கி ஒட்டி வைக்கலாம் . அதும் இல்லன்னா ஸ்டென்சில் கிடைக்குது...அப்படின்னா என்னன்னு கேக்குறீங்களா?
image courtesy: balzer designs
இது தான் ஸ்டென்சில்...இத சுவர்ல ஒட்டி இது மேல பெயிண்ட் பண்ணினா இந்த ஸ்டென்சில் ல இருக்குற டிசைன் உங்க சுவர் ல வந்துடும்....அப்பறம் இந்த பேப்பர் அ எடுத்துடனும்.இத மாதிரி ஸ்டென்சில் நம்மளே பண்ணலாம்..இல்லைன்னா ரெடிமேட் ஆவும் கிடக்குது...
அத வாங்கி பண்ணல்லாம்...நம்மளே அலங்காரம் பண்ணினா திருப்தியும் கிடைக்கும்...இல்லைன்னா professional painters அ வச்சும் பண்ணலாம்... இந்த படங்கள பாருங்க...உங்களுக்கே ஒரு ஐடியா கிடைக்கும்...
No comments:
Post a Comment