Sunday, August 12, 2012

வாதாபி நகர விஜயம்!!!-4



இதை படிக்கும் முன் கீழ்க்கண்ட பதிவுகளை படித்து விட்டு தொடரவும்.

வாதாபி குடவறை கோவில்களுக்கு போலாமா...
போவதற்கு முன்னால் கல்கி இந்த கோவில்களை பற்றி என்ன சொல்றார்னு பார்த்துட்டு போவோம்.

குண்டோ தரன் சக்கரவர்த்தியைப் பணிந்து விட்டுக் கூறினான்:

பிரபு! இப்போதெல்லாம் புலிகேசிச் சக்கரவர்த்திக்குக் கலைகளிலே ரொம்ப மோகமாம்! வாதாபியிலுள்ள பாறைகளையெல்லாம் குடைந்து மாமல்லபுரத்துச் சிற்பங்களைப் போல் அமைத்துக் கொண்டிருக்கிறாராம்! நமது தொண்டை மண்டலத்திலிருந்து கைகால்களை வெட்டாமல் சிறைப்பிடித்துக் கொண்டு போன சிற்பிகள் சிலர் அந்தப் பாறையிலே வேலை செய்வதை நானே பார்த்தேன். ஆனால், ஒரு வேடிக்கையைக் கேளுங்கள். அந்தச் சீன யாத்திரிகன் ஹியூன் சங்கைப் புலிகேசி மேற்படி சிற்பப் பாறைகளுக்கு அழைத்துச் சென்று காட்டியபோது, 'இந்தப் பாறைச் சிற்பங்களைப் பார்த்து விட்டுத்தான் காஞ்சி மகேந்திர பல்லவன் மாமல்லபுரத்தில் இதே மாதிரி செய்யப்பிரயத்தனப்பட்டான்! அவனுக்கு நல்ல புத்தி கற்பித்து விட்டு வந்தேன்!' என்றானாம்."


இந்த படம் ஏரிக்கரையில் இருந்து வாதாபி கோவில்களை நோக்கி எடுத்தது...படத்தை பெரிது செய்து  பார்த்தீர்கள்   என்றால் அதன் மேற்புறமும் கோட்டை போன்ற அமைப்பு உள்ளது தெரியும்.அது திப்பு சுல்தான் பின்னர் கட்டியது என்கிறார்கள்.இதை தெற்கு கோட்டை என்றும் வாதாபி கோட்டையை வடக்கு கோட்டை என்றும் சொல்கிறார்கள்.இன்னும் கூர்ந்து பார்த்தீர்கள் என்றால் வாதாபி குடவறை கோவில்கள் கூட தெரியும்.


இது முதல் குகை 


18 கைகளுடன் நடராஜர்.ஒவ்வொரு கையும் பரதத்தின் ஒவ்வொரு அடவுகளையும் காண்பிக்கிறது.
துவாரபாலகர்கள் 
சங்கர நாராயணர்.ஒரு பக்கம் விஷ்ணு லக்ஷ்மியும் மறுபக்கம் சிவன் பார்வதியும்...


பிருகு முனிவரும் அர்த்த நாரீஸ்வரரும் 


ஓவியர் மணியம் அவர்கள் ஒரு முறை கன்னட நாட்டிலுள்ள பாதாமி என்ற இடத்திற்கு சென்று அங்கிருந்த சிற்பங்களை ரசித்து வியந்து ஊள்ளார். மன்னர்கள் காலத்தில் இச்சிற்பங்கள் எப்படி வடிக்கப்பட்டு இருந்திருக்கும் என்ற கற்பனையை ஓவியமாக தீட்டி அன்றைய கல்கி இதழில் வெளியிட்டுள்ளார். இவ்வோவியங்களுக்கு அவர் வைத்திட்ட பெயர் 'வாதாபி மடல்'



இதே ஓவியங்களின் மறுபதிப்பை ஒரு பழைய மாத இதழில் (ஓம் சக்தி) பார்க்க நேரிட்டது. அவற்றின் ஸ்கேன்கள் அப்படியே இங்கே....  இங்கே கிளிக்கி பார்க்கவும்   coutesy: comicstamil.blogspot.in

மேலே பார்த்த பிருகு முனிவரும் அர்த்த நாரீஸ்வரரும்  படத்தை மணியம் அவர்களின் கை வண்ணத்தில்  
குகையின் மேற்புறங்களில் கூட சித்திரங்கள் அமைத்திருகிறார்கள்.ஒரு சிலவற்றில் வண்ணங்கள் கூட காண படுகிறது.ஆயிரத்து ஐநூறு ஆண்டுகள் முன்னாடி போடப்பட்ட வண்ணம்...
குகை கோவில்கள் அமைக்கும்போது எவ்வளவு precision இருக்க வேண்டும் இல்லையா...
இறுதியில் வீடியோ இணைத்துள்ளேன்.அதனால் ரெம்ப விரிவாக பிரஸ்தாபிக்கவில்லை  .ஒவ்வொரு குகைக்குள்ளும் உள்ள முக்கியமானவற்றை மட்டும் பகிர்ந்து கொள்ளுகிறேன்.
 இரண்டாம் குகைக்கு போவோமா...
இங்கே செல்ல நேர்ந்தால் குகைகளின் மேற்புறம் ceiling இல் செய்யபட்டிருக்கும் வேலை பாடுகளை மிஸ் செய்து விடாதீர்கள். 


வாதாபி  திரு விக்ரமன் or  வாமன அவதாரம் 
மகாபலிபுரத்தில் உள்ள திரு விக்கிரமன் சிலை .... இரண்டுக்கும் எவ்வளவு ஒற்றுமை .தமிழர்கள் தான் இதை  செய்திருப்பார்கள் என்பதற்கு இதை விடவும் சாட்சி வேண்டுமோ  ...


வாதாபி  வராக மூர்த்தி 
மகாபலிபுரத்தில் உள்ள  வராக மூர்த்தி  சிலை 


அப்போவே செஸ் விளையடுவாங்களோ  ?


மூன்றாம் குகை 
நான்காவது சமணர் குகை.
இப்போது வீடியோ வ பாருங்க...


சரி போன பதிவுல வாதாபிக்கே கூட்டிட்டு போறேன்னு சொல்லி இருந்தேன் இல்லயா...என்ன போலாமா..ரெடி ஆகிடீங்களா...

இப்போ நான் இங்க கொடுத்து இருக்குற link சை ஒவ்வொன்னா கிளிக் பண்ணி பாருங்க.360 டிகிரி view இருக்கு.

அதுல இருக்குற வளைந்த அம்பு குறிய கிளிக் பண்ணினா அதே play ஆக ஆரம்பிக்கும்.இல்லன்னா உங்க mouse அ click பண்ணியே வச்சுருந்தீங்கன்னாலும் play ஆகும்.

ஒவ்வொரு லிங்க் play ஆகி முடிச்சவுடனே அந்த view ல உங்களுக்கு அங்க அங்க சில சிகப்பு புள்ளிகள் தெரியும்.அத கிளிக் பண்ணினீங்கன்னா மற்ற இடங்களையும் பார்க்கலாம்.

ஒரு முறை பார்தீங்கன்னா  உங்களுக்கே புரியும். ready set go ... U R ON A VIRTUAL TOUR

Link 1: மொதல்ல கோட்டைக்கு போகலாமா...அங்க அங்க தெரியுற சிகப்பு புள்ளிகளை கிளிக் பண்ணி பாக்க மறந்துராதீங்க...

Link 2: upper sivalaya கோவிலுக்கு போவோமா...

Link 3:lower sivalaya (வாதாபி கோவில்) லும் பார்த்துருவோம்..

Link 4:கோட்டையின் பின்புறம் 

Link 5:பூதநாதர் கோவில்   

Link 6:ஏரிக்கரையில் உள்ள இன்னொரு கோவில் மல்லிகர்ஜுனர் கோவில்.(இதை போரில் வெற்றி பெற்ற உடன் மாமல்லர் கட்டினாருன்னு நினக்குறேன்) 

Link 7:குகை கோவில்கள் க்கு போவோமா..இங்க உள்ள எந்த சிகப்பு புள்ளிகளையும் மிஸ் பண்ணாம பாருங்க..

என்னங்க சொன்னபடி பாதாமிக்கு கூட்டிட்டு போயிட்டேன் இல்லயா...

இல்ல நான் நேர்லயே போய் தான் பார்க்கணும்னு நினைச்சீங்கன்னா இந்த தகவல்கள் உங்களுக்கு உபயோகமா இருக்கும். 

  • Location: Badami is located in Karnataka, 30 Kms from Bagalkot and 589 Km from Bangalore
  • Nearest Airport: Belgaum, 190 Km
  • Nearest Railway station: Hubli, 100 Km
  • Accomodation: There are plenty of options for staying in Badami, but most of them are lodges and low to medium end hotels. 


7 comments:

  1. படங்கள் மிக நல்ல இருக்கு



    நன்றி,
    ஜோசப்
    http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

    ReplyDelete
  2. பதிவு அருமையாக இருக்கிறது. பின்புலம் (back ground) இவ்வளவு அழுத்தமான நிறங்கள் வேண்டியதில்லை என்பது என் கருத்து. பின்புறம் வெண்மையாக இருந்தால் எழுத்துகள் கறுப்பாக இருக்கும். படிக்க எளிமையாக இருக்கும். நீங்கள் உங்கள் நண்பர்களையும் கருத்து கேளுங்கள்.
    படங்கள் அருமையாக இணைத்திருக்கிறீர்கள். உங்கள் உழைப்பை வாழ்த்துகிறேன்.
    நன்றி.

    ReplyDelete
  3. இப்பதான் படித்தேன்.... நாம பல்லவர்களை கொண்டாடற மாதிரி அவங்க ஊர்ல சளுக்கர்களை கொண்டாடத்தான் செய்வாங்க

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...