வாதாபி hangover ல இருந்து நான் ஒரு வழியா வெளிய வந்தாச்சு... அதுனால back to track on home decor and recycling ...
OK OK படத்துல சந்தானம் சொல்ற famous dialogue factu factu factu... அதே மாதிரி நீங்களும் இந்த மூணு fact யும் முதல்ல பாருங்க...பின்னாடியே பதிவு தொடருது ... :-)
இந்த fact களுக்கும் இந்த பதிவுக்கும் என்ன சம்பந்தம்ன்னு பதிவோட இறுதில உங்களுக்கே புரியும்.
newspaper-recycling பதிவுல எப்படி செய்தி தாள்களை கொண்டு அழகான கூடைகள் செஞ்சு இருந்தாங்கன்னு பார்த்தோம்.மறுசுழற்சி ங்கறது
நம்ம அன்றாடம் பயன்படுத்துற ஒரு பொருளா மாறினா
எவ்வளவு நல்லா இருக்கும்... இப்போ இந்த படத்த பாருங்களேன்...
இது செய்தித்தாள்களையும் packing அட்டைகளையும் வச்சு தயார் பண்ணிருக்கற புக் செல்ப் / saree stand ... |
பேப்பர் ல furniture ஆ? எப்படி பண்ணுவாங்க...எந்த அளவுக்கு அது எடையை தாங்கும்..எந்த அளவுக்கு உழைக்கும்...எந்த அளவுக்கு உறுதியா இருக்கும்...இப்படி பல கேள்விகள் வந்துது...
அதுக்கான விடையை தேடும் போது தான் சென்னை அபிராமபுரத்துல இருக்குற
இந்த ESK Learning சென்டர் பத்தின தகவல்கள் கிடச்சுது.
இந்த மாதிரி பேப்பர் கொண்டு தயாரிக்க படும் furniture கள் இங்கதான் ஸ்பெஷல் children (Children with Learning Difficulties and Multiple Difficulties) கைப்பட தயாரிக்க படுதுன்னு தெரிஞ்சுகிட்டேன்...
இத கடந்த பதினைந்து வருடமா வெற்றிகரமா நடத்திகிட்டு வரவங்க அர்ச்சனா அச்சுதன் மேடம்....கீழே இந்த படத்துல இருக்காங்களே அவங்கதான்...
சரி எப்படி இந்த furniture கள தயாரிக்கறாங்க?இத கடந்த பதினைந்து வருடமா வெற்றிகரமா நடத்திகிட்டு வரவங்க அர்ச்சனா அச்சுதன் மேடம்....கீழே இந்த படத்துல இருக்காங்களே அவங்கதான்...
இந்த டெக்னாலஜி க்கு பேரு appropriate paper-based technology
(APT) ....இத ஜிம்பாப்வே யா சேர்ந்த Bevill Packer கண்டு பிடிச்சுருகார் .
இதன் படி பேப்பர் களையும் கார்ட்போர்ட் அட்டைகளையும் மைதாவை கொண்டு தயாரிக்க பட்ட ஒரு பசையினால லேயர் லேயர் ரா ஒட்டி அத பின் வெயில்ல நல்லா காய வச்சு ஒரு panel தயாரிக்க படுது...
Panel தயார் ஆன பின்னர் ஒவ்வொன்றும் grooves மூலமா இணைக்க படுது...
இதன் மேலே மறுபடியும் பசை தடவப்பட்டு பின்னர் water proof painting coat செய்ய படுது.90 கிலோ அளவு எடையை தாங்குமாம்...!!!!!
என்ன என்ன பொருட்கள் தயார் ஆகுதுன்னு பார்ப்போமா...
சிறுவர்கள் பெரியவர்கள் உட்காரும் மொட்டாக்கள் |
வரவேற்பறையில் போடப்படும் சென்டர் டேபிள்.... செய்தித்தாள் ஹோல்டர் உடன்!!!! |
அதிகம் பயன்படுத்தாத சாமான்கள், விருந்தினர் வந்தால் மட்டுமே உபயோக படுத்தும் தலையணை,போர்வைகள் போன்றவற்றை வைக்க, கொலு பொம்மைகள் வைக்க இன்னும் பலவற்றை store செய்ய உபயோக படுத்தலாம் ... |
சின்ன சின்ன அலங்கார பொருட்கள் வைக்க , உருளி வைக்க பயன்படுத்தலாம் .. |
உங்களுக்கு தேவை படுற கலர் கள்ல செஞ்சு வாங்கிக்கலாம்.. .உங்களுக்கு wood பினிஷ் வேணும்னு ஆசை பட்டீங்கன்னா அதையும் செஞ்சு தராங்க.... |
இதுதான் என்னோட favorite ... குழந்தைகளுக்கான study டேபிள்... |
உங்களுக்கு இந்த பொருட்கள் பிடிச்சு வாங்கனும்னு நினசீங்கன்னா அர்ச்சனாவ தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி...
O#34 N#15/2 subramaniam St,
Abhiramapuram, Chennai,
Tamil Nadu 600018
Mobile No: 98843-61562
Facebook id: https://www.facebook.com/#!/pages/ESK-Learning-Centre/306869449337342
அர்ச்சனா வோட Facebook id: https://www.facebook.com/#!/archana.achuthan
நீங்க சென்னையில் இருந்தா நேர்லயே போய் பார்த்து வாங்கலாம்..மற்ற இடங்களுக்கு courier செய்து தருகிறார்கள்.உங்களின் ஆர்டர் இன் பேரிலேயே பொருட்கள் தயார் செய்ய படும்.அதுனால உங்களுக்கு தேவையான கலர்களில் அளவுகளில் செய்து வாங்கலாம்.
எவ்வளவோ ருபாய் கொடுத்து மரச்சாமான்கள் , பிளாஸ்டிக் சாமான்கள் வாங்குகிறோம்...அதே அளவு உறுதியோடு இயற்கைக்கும் எந்த கெடும் விளைவிக்காத இந்த பொருட்களை வாங்கி உபயோக படுத்தலாமே...கொஞ்ச நாள் உபயோக படுத்திய பின் கலர் மாற்ற வேண்டும் இல்லை ஏதேனும் மாற்றம் செய்ய வேண்டும் என்றாலும் இவர்களே செய்து தருகிறார்கள்.
உங்களுக்கு இன்னும் தகவல்கள்,பொருட்களின் விலை விபரங்கள் வேண்டும் என்றால் அர்ச்சனாவை அவரது facebook id il தொடர்பு கொள்ளுங்கள்.
அப்படியே மேல போய் அந்த facts a திரும்ப ஒரு முறை படிச்சு பாருங்க...
இந்த மாதிரி furniture கள் உபயோக படுத்தறது எவ்வளவு அவசியம் ன்னு
இன்னும் நல்லா புரியும்
Image Courtesy: ESK learning center.
நல்ல பயனுள்ள தகவல் .... மிக்க நன்றி....
ReplyDeleteபேப்பர் மாதிரி இல்லாம எல்லாமே அழாகயிருக்கு கோமதி.
உபயோகமான தகவல்
ஸ்டடி டேபிள் ஓ.கே
ReplyDeleteஆனா உட்காரும் மோடா ம் கொஞ்சம் பயமாதான் இருக்கு
(ஒரு டன் பேப்பருக்கு 24மரமா??அப்பாடி
பேப்பர் மாதிரி தெரியல.ரொம்ப அழகா இருக்கு.
ReplyDeleteநல்ல பயனுள்ள தகவல்..
ReplyDeleteநன்றி,
மலர்
http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)
அருமையான தகவல்கள்.
ReplyDeleteநல்ல மாற்று உபயோகம்.
எனது பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
வாழ்த்துகள்.
பயனுள்ள தகவல். அர்ச்சனா அச்சுதன் அவர்கள் நிச்சயம் பாராட்டப் பட வேண்டியவர்.
ReplyDeleteநன்றி இமா டீச்சர்
ReplyDeleteநல்ல பயனுள்ள தகவல். என் அம்மா அந்தக்காலத்தில் பேப்பரை வெந்தயம் கலந்து அரைத்து அதை பானையில் ஒரு பழதுணி போட்டு அதன் மேல் அரைத்த கலவையை போட்டு வெயிலில் காயவைத்து காய்ந்தபின் பூச்சிகள் அரிக்காமல் இருக்க வர்ணம் பூசி வைத்து இருப்பார்கள். எந்த டிசைன் வேண்டுமோ அந்த மாதிரி செய்வார்கள்.
ReplyDeleteஇப்போது நீங்கள் சொல்வது இன்னும் நவீனமாக்கப்பட்டு இருக்கிறது இதை வாங்க ஆவலை ஏற்படுத்துகிறது.
படங்கள் எல்லாம் அழகு.
//ஸ்பெஷல் children (Children with Learning Difficulties and Multiple Difficulties) கைப்பட தயாரிக்க படுதுன்னு தெரிஞ்சுகிட்டேன்...//
இன்னும் மிக விஷேசம் அவர்களின் திறமையை பாராட்ட வேண்டும் அவர்களுக்கு உதவியாக இதை எல்லோரும் வாங்கலாம்.
பகிர்வுக்கு நன்றி.
மிக்க நன்றி கோமதி அரசு!உங்களுக்கும் எனது வாழ்த்துக்கள்.
ReplyDeleteseyyum aavalai thoontuthu...payanulla pakirvu.
ReplyDelete