என் கணவர் சமீபமா ஒரு t ஷர்ட் வாங்கனும்னு இணையத்துல தேடிட்டு இருந்தார்.யாரோ wrestling பிளேயர் jhon cena வாம்...அவர் டிசைன் பண்ணின ஷர்ட் போல .அதுவும் particular wording வேணும்னு பார்த்திட்டு இருந்தார்.ஆனா t ஷர்ட் black கலர் ல மட்டும் தான் இருந்துது...இவரும் நீல கலர் ல தேடி பார்த்துட்டு கிடைக்கலன்னு வேலைக்கு கிளம்பி போய்ட்டார்.அது என்ன அப்படி ஒரு ஊர்ல இல்லாத ஷர்ட் ன்னு பார்த்தா இதோ இந்த படத்தில இருக்கறதுதான்...
சரி வேலை முடிஞ்சு வரது குள்ள நம்மளே ஒரு surprise கொடுக்கலாம்னு பண்ணினதுதான் இந்த DIY ப்ராஜெக்ட்.
வீட்டில் இருந்த ஒரு சில பாக்கிங் அட்டைகள் எடுத்து அதில் படத்தில் உள்ள wordings யை அப்படியே எழுதி கொண்டேன்.அட்டை கொஞ்சம் தடிமனாக இருப்பது நல்லது.வெறும் பேப்பரில் என்றால் நகராமல் இருக்க பின் செய்ய வேண்டி இருக்கும்.
பின் cutter கொண்டு படத்தில் காண்பித்து போன்று உள் பக்கமாக நறுக்கி எடுக்க வேண்டும்.
இப்போது ஸ்டென்சில் கள் தயார் .
இதை வீட்டில் இருந்த ஒரு நீல கலர் ப்ளைன் t ஷர்ட் மீது வைத்து வெள்ளை வண்ணத்தை brush கொண்டு தீட்டினேன்(acrylic colors / Fabric paint).ப்ளூ அண்ட் வைட் beautiful sight இல்லையா..அதுனால தான் இந்த கலர் combination . !!!
அடியில் அதாவது சட்டையின் உள்பக்கம் சில செய்தி தாள்களை மடித்து வைத்து கொள்ள வேண்டும்.அப்போது நீங்கள் முன்பக்கம் செய்யும் கலர் சட்டையின் பின் பக்கம் படியாமல் இருக்கும்.
ஸ்டென்சில் ஐ எடுக்காமல் இரண்டு மூன்று முறை கலரை கோட் செய்து கொண்டேன்.இப்போது t ஷர்ட் தயார்.இதை ஒரு நாள் முழுவதும் காய விடுங்கள்.நன்றாக காய்ந்த உடன் சட்டையை உள் பக்கமாக திருப்பி மிதமான சூட்டில் அயன் செய்து கொள்ள வேண்டும்.அவ்வளவு தான் .துவைத்தாலும் இது போகாது.ஆனால் நேரடியாக அயன் செய்யாமல் ஒவ்வொரு முறையும் திருப்பி போட்டு அயன் செய்ய வேண்டும்.
வீடு திரும்பிய கணவருக்கு நிஜமாவே ரெம்ப surprise ...பின்னே அந்த சட்டை விலை 1500 ஆச்சே...நான் வெறும் நாலு டப்பா வெள்ளை கலர் fabric பெயிண்ட் மட்டும் வைச்சு அவர் ஆசையை நிறைவேத்திருக்கேனே ..(ஓரளவுக்காவது ஒரிஜினல் சட்டை மாறி தானே வந்திருக்கு?)
சிம்பிள் ஐடியா தானே..
குழந்தைங்க t ஷர்ட் ளையும் நீங்களே டிசைன் பண்ணலாம்.ஏழு கலர் ல ப்ளைன் t shirts வாங்கி ஒவ்வொரு சட்டையிலும் அந்த சட்டை வண்ணத்தின் பெயர், ஒரு கிழமையின் பெயர்,ஒரு பழத்தின் பெயர்,ஒரு காய்கறியின் பெயர் ஸ்டென்சில் பண்ணி கொடுத்தீங்கன்னா விளையாட்டா அவங்க எல்லா ஸ்பெல்லிங்கும் படிச்சுக்குவாங்க.வண்ணங்களையும் தெரிஞ்சுக்குவாங்க.
No comments:
Post a Comment