ஒருவழியா என் terracotta உருளி ஆசை நிறைவேறிடுச்சு...சமிபத்துல பக்கத்துக்கு டவுனுக்கு போயிருந்த போது ஒரு குஜராத்தி exhibition நடந்துது...அங்க தான் கிடச்சுது...
ஒரு terracotta உருளியும் ஒரு பெரிய flower vase,அப்புறம் ஒரு சின்ன துளசிமாடத்துல வைக்குற விளக்கு um வாங்கிட்டு வந்தேன்...full ஆ பெயிண்ட் பண்ணின vase உம் உருளியும் தான் வச்சுருந்தாங்க...அந்த தாத்தாவ பேசி சரி பண்ணி பெயிண்ட் பண்ணாத சாமானா பார்த்து வாங்கிட்டு வந்தேன்...
ரெண்டு காரணம் ஒண்ணு natural கலர் ல தான் உருளி நல்லா இருக்கும்.ரெண்டாவது போர் அடிக்கும் போது நம்மளே பெயிண்ட் பண்ணிக்கலாம்னு...அதோட சிக்கன நடவடிக்கையா பெயிண்ட் பண்ணாத உருளி விலை கொறைச்சு தந்தார் அந்த தாத்தா...
அதோட அங்க வச்சுருந்த பிளாஸ்டிக் தாமரை பூக்கள் (!!) அப்டியே என்னை கவர்ந்து ரெண்டு தாமரை பூவும் வாங்கியாச்சு...பக்கத்துல வச்சுருந்த மிதக்கும் விளக்குகள் யையும் ஏன் விடுவான்னேன்னு அதையும் வாங்கியாச்சு... இப்போ படங்கள் ...
அந்த குட்டி கிருஷ்ணர் என் அம்மா எனக்கு கொடுத்தாங்க..அவரும் தாமரை பூவில இருந்ததுனால ஒரு டம்ளர் ஆ தலைகீழ வச்சு அதுக்கு மேல வச்சேன்...அதுனால அவரும் உருளியில் மிதந்துகிட்டு இருக்கார்.....
இது அந்த vase ..
No comments:
Post a Comment