Tuesday, July 24, 2012

DIY - நீங்களே செய்யலாம் - 4/Lamp shade

இந்த lamp shade feviart facebook page மூலமா கிடச்சுது...  ரெம்ப சிம்பிள் ஆன ஒரு lamp shade செய்முறை. 


தேவையான பொருட்கள் :
பலூன் - 1
fevicol
கொஞ்சம் தடிமனான சனல் நூல் கண்டு -1
பலூனை ஊதி கொள்ளுங்கள்.பின் அதன் மேல் ஒரு bulb உள்ளே செல்லும் அளவுக்கு இடம் விட்டு ஒரு வட்டம் வரைந்து கொள்ளுங்கள்.
சனல் நூல் கண்டின் மேல் பெவிகால் தடவி கொள்ளுங்கள்.வெறும் fevicol  லை தடவுவது கடினமாக இருக்கும்.அதனால் பெவிகால் லை சிறிது நீருடன் கலந்து பின் கண்டின் மேல்  தடவுங்கள்...
பின் அதை பலூன் முழுவதும் படத்தில்  காண்பித்தது போல் சுற்ற தொடங்குங்கள்.இவ்வாறு சுற்றியவுடன் ஒரு இரவு முழுவதும் இதை காய விடுங்கள்.
காலையில் பலூனை எடுத்து விடுங்கள்.
எடுத்தால் அழகிய எளிதான சனல் நூல் கண்டு lamp shade தயார்...



Project & Image courtesy : FEVIART 


1 comment:

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...