Monday, October 22, 2012

கலசத்தை அம்மனாக அலங்கரிக்கும் முறை

தேவையான பொருட்கள் 

ஒரு வெண்கல செம்பு அல்லது எவர்சில்வர் செம்பு
மாவிலைகள்
குடுமி உள்ள தேங்காய்
அம்மன் முகம் 
Blouse துணிகள் - இரண்டு அல்லது மூன்று...


முதலில் ஒரு பலகையை நன்றாக கழுவி துடைத்து அதன் மேல் சிறு கோலம் இட்டு கொள்ளுங்கள்.மற்ற பூஜை சமயங்களில் இந்த பலகை மேலேயே அம்மன் அலங்கராம் செய்யலாம்.

 

இது சரஸ்வதி பூஜை ஆதலால் வீட்டில் குழந்தைகளின் புத்தகங்கள்,பெரியவர்களின் புத்தகங்கள், நோட்டுகள் போன்றவற்றை அடுக்கி பின் அம்மன் அலங்காரம் செய்ய வேண்டும் .இதற்கு ஏடு அடுக்குதல் என்று பெயர்.பின் இதனை ஒரு துணியால் மூடி விட வேண்டும். 

சரஸ்வதி பூஜை அன்று பூஜையில் வைத்து பூஜிக்கும் புத்தகங்களை அன்று முழுவதும் பூஜையிலேயே வைக்க வேண்டும்.இதன் உள்ளே வைத்த புத்தகங்களை மறு நாள் விஜய தசமி  அன்று பூஜை செய்து பின்னரே பிரிக்க வேண்டும்.இதற்கு ஏடு பிரித்தல் என்று பெயர்.

 


இதன் மேலே வெண்கல செம்பை நீர் இட்டு வைத்து,மாவிலை நடுவில் வைத்து பின்னர் தேங்காய் வைக்க வேண்டும்.அம்மன் முகம் கொண்டு தேங்காய் குடுமியில் கட்ட வேண்டும்.

அம்மன் முகம் இல்லாதவர்கள் குடுமி பகுதியில் மஞ்சளையும் சந்தனத்தையும் கொண்டு சாற்றி மூக்கு போன்று பிடித்து கொள்ளவும்.கண் அமைப்பதற்கு இரு சிறிய பூண்டு எடுத்து கொண்டு மூக்கின் மேல் பகுதியில் வைக்கவும்.பூண்டின் மேலே மிளகு வைத்து அமுக்கி விடவும்.குங்குமம் கொண்டு உதட்டு பகுதி வரைந்து கொள்ளவும்.


 


செம்பின் வாய் பகுதியில் ஒரு கயறு கட்டவும்.ஒரு துணியை நன்றாக கொசுவம் வைத்து மடித்து இந்த கயிறில் சொருகி நன்றாக விரித்து விடவும்.இன்னொரு துணி கொண்டு படத்தில் காண்பித்த படி அமைக்கவும்.நான் blouse களில்  border வைக்க பயன்படுத்தும் துணி வைத்து அலங்கரித்துள்ளேன்.




இப்போது பூக்கள் கொண்டும்,நகைகள் அணிவித்தும் மேற்படி அலங்காரம் செய்யலாம்.  



 இப்போது அழகான அம்மன் உங்கள் வீட்டிலேயே எழுந்து அருளி இருப்பதாக ஐதீகம் . இதே முறையில் வர லக்ஷ்மி பூஜை மற்றும் அம்மனை மையமாக வைத்து வரும் பூஜைகளுக்கு அம்மன் அலங்காரம் செய்யலாம்.


படம் மட்டும் வைத்து பூஜை செய்வதற்கு பதில் இந்த முறையில் செய்யலாம்.விளக்கை எப்படி அம்மனாக அலங்கரிப்பது என்று இன்னொரு சந்தர்ப்பத்தில் படங்களுடன் விளக்குகிறேன்.


அனைவருக்கும் சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி வாழ்த்துக்கள்.


7 comments:

  1. குறைந்த செலவில் பூஜை...நடத்துங்கோ

    ReplyDelete
  2. உங்களுக்கும் என் சரஸ்வதி பூஜை நல்வாழ்த்துக்கள்....

    நன்றி,
    மலர்
    http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

    ReplyDelete
  3. அருமையான பதிவு.
    மகிழ்ச்சி.
    வாழ்த்துகள்.

    ReplyDelete
  4. உங்கள் கைவண்ணத்தில் அழகாக இருக்கிறார் அம்மன். பாராட்டுக்கள்.

    ReplyDelete
  5. நன்றி சிட்டுக்குருவி,மலர்,Rathnavel Natarajan ayya,இமா டீச்சர்

    ReplyDelete
  6. நன்றி கோமா அத்தை...

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...