இன்னும் நவராத்திரிக்கு ஒரு வாரம் தானே இருக்கு.எங்கள் வீட்டில் ஐம்பது வருடங்களுக்கு மேலாக கொலு வைத்து கொண்டிருக்கிறோம். கடந்த இரண்டு வருடங்களாக சில காரணங்களால் வைக்க முடியவில்லை.
எங்கள் வீட்டில் ஒன்பது படிகள் கொண்ட கொலு வைப்போம்.ஒவ்வொரு வருடமும் கொலு வருகிறது என்றாலே மிகவும் உற்சாகமாக இருக்கும்.பரணில் இருக்கும் பொம்மைகளை எடுத்து துடைத்து , வர்ணம் மங்கிய பொம்மைகளுக்கு வர்ணம் கொடுத்து,அந்த வருடத்திற்கு புதிய பொம்மைகள் என்ன வந்திருக்கிறது என்று பார்த்து வாங்கி , கொலுவிற்கு வருகிறவர்களுக்கு கிப்ட் என்ன கொடுப்பது என்று பார்த்து பார்த்து வaங்குவதில் தொடங்கி தினம் ஒரு சுண்டலுடன்,பல விருந்தினர்கள் ,பாடல்கள்,வித விதமாக அம்மனுக்கு அலங்காரம்,அழகான ரங்கோலிகள்,கோலங்கள் என நவராத்திரி ஒன்பது நாளும் கன ஜோராக களை கட்டும்.
அடுத்த வருடம் எப்படியாவது வைத்து விட வேண்டும்.இந்த முறை கொலுவிற்கு gift பொருட்கள் வாங்கி வீட்டீர்களா..முப்பது முதல் 90 ரூபாய்க்குள் அடங்கும் வகையில் நான் ஐந்து கிப்ட் ஐடியாக்கள் சொல்றேன்.
குழந்தைகளுக்கு மர செப்பு சட்டி சாமான்கள் - Rs .75 கிடைக்கும் இடம்:Poombugar |
அழகிய பத்தி ஸ்டாண்ட் - Rs.50கிடைக்கும் இடம்:Mala iyer |
Jute / Bamboo Wall Hanging - Rs 35 கிடைக்கும் இடம்:Mala iyer |
ரெடிமேட் ரங்கோலி- Rs 75 to Rs 90கிடைக்கும் இடம்:easycrafts@gmail.com |
Hand Painted அகல் விளக்குகள் Rs-45கிடைக்கும் இடம்: sriteja womens choice , villivakkam chennai ::: cont no: 9940554883 |
அந்த மரச் சட்டி செட்... சின்னக் காலத்து நினைவு வருகிறது. :)
ReplyDelete