Monday, October 8, 2012

முதல் உதவி பெட்டி / First Aid box

        
எல்லோரும் நலமா?இன்னைக்கு பதிவு வீடுகளில் முக்கியமாக இருக்க வேண்டிய முதல் உதவி பெட்டி பற்றியது.

நேற்று பக்கத்து வீட்டு பெண்கள் சிலர் பேசி கொண்டு இருந்தோம்.எங்கள் சத்தம் கேட்டு காய்கறி நறுக்கி கொண்டு இன்னொரு பெண்ணும் உடனே அனைத்தையும் கீழே வைத்து விட்டு வந்து விட்டாள்.தப்புதான்.இரண்டு வயது குழந்தை தூங்கி கொண்டு இருந்ததால் வந்து விட்டாள்.bad லக் அவன் எழுந்து வந்து காய்கறி cutter மேலே காலை வைத்து விட்டான்.சின்ன காயம் தான்.ஆனால் இரத்தம் கொஞ்சம் வந்து விட்டது.பதறி போய் அவளுக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை.

                                    பஞ்சு எங்கே வைத்தேன்..காணோம்...
                                     dettol ஐயோ இங்க தான இருந்தது...
                      கத்திரிகோல் எங்க போய் தொலஞ்சதோ தெரியலையே...   

ன்னு ஒவ்வொரு டப்பாவா தேடி எடுத்துட்டு வரத்துக்குள்ள இரத்தமே நின்னு போய்டுச்சு. சின்ன காயமா  இருந்ததால சரியா போச்சு.எல்லா emergency  க்கும் இப்படி தேடிகிட்டு இருந்தா தப்பாச்சே.

உங்க வீட்டுல first aid பாக்ஸ் ன்னு தனியா வச்சுருகீங்களா  ... உங்களுக்கு ஒரு ஷொட்டு and பாராட்டுக்கள்.மத்தவங்களுக்கு ஒரு குட்டு and இனிமேயாச்சும் கீழ் கண்ட பொருட்களை வச்சு ஒரு முதலுதவி பெட்டி தயார் பண்ணுங்க. 

தயவு செஞ்சு இதுக்காக போய் ஒரு பிளாஸ்டிக் டப்பா  வாங்காதீங்க.ஒரு சின்ன அட்டை பெட்டி கூட போதும்.அதை white sheet ஆல் கவர் பண்ணி மேலே சிகப்பு marker கொண்டு கூட்டல் குறி வரைஞ்சுக்கொங்க.... 
கீழ் கண்ட பொருட்கள் ஒரு செட் வாங்கி இந்த டப்பாக்களில் போட்டு வைக்கணும்.
பஞ்சு roll
ஒரு சுத்தமான காட்டன் துணி 
கத்திரிக்கோல்  
Dettol  பாட்டில் 

Band aid கள் 
Gauze Bandage
Surgical tape 

காட்டன் crepe bandage
காயங்களுக்கான
அண்டிசெப்டிக் கிரீம் 
தீக்காயங்களுக்கானஅண்டிசெப்டிக் கிரீம்

தசை வலிகளுக்கான  cream or spray
paracetamol மாத்திரை (காய்ச்சல் வந்து மருத்துவரை பார்க்கும் நேரம் வரை உங்களை தயார்/ஆசுவாச படுத்த இது உதவும்)  


முக்கியமான தொலை பேசி எண்கள்.(குடும்ப மருத்துவர் , ஆம்புலன்ஸ் Etc)
மற்றும் முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயங்கள் 

1) நீங்கள் வீடில் இல்லாத சமயம் மற்றவர்கள் கூட உடனே பார்த்து எடுத்து விட கூடிய இடத்தில வைக்க வேண்டும்.
2)பெட்டியில் இருந்து ஒரு பொருளை எடுத்தால்  உடனே ஞாபகமாக அதை வாங்கி வைக்க வேண்டும்.
3)மருந்துகளின் expiry date கள் பார்த்து உபயோக படுத்த வேண்டும்.


3 comments:

  1. நினைவு தெரிந்த காலம் இருந்தே எங்கள் வீட்டில் முதலுதவிப் பெட்டி இருந்திருக்கிறது. இப்போ இங்கும் இருக்கிறது. தவிர ஒவ்வொரு காரிலும் ஒரு குட்டி கிட் வைத்திருக்கிறோம்.

    அவசியமான இடுகை.

    ReplyDelete
  2. அட!!! காரில் கூட அவசியம் வைக்க வேண்டியதுதான்.

    ReplyDelete
  3. முதல் உதவிப் பெட்டி பற்றி அருமையான பதிவு. எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
    வாழ்த்துகள் 'கனவு இல்லம்'

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...