Friday, October 19, 2012

cushion கவர் சுவர் அலங்காரம்

சமீபத்தில் ஐந்து cushion கவர்கள் வாங்கினேன்.வாங்கியதில் இருந்தே இதை cushion கவர் ஆக பயன் படுத்த தோன்றவே இல்லை!!!.வேறு என்ன பண்ணலாம் என்று யோசித்த போது வந்தது இந்த wall hanging ஐடியா.  

தேவையான பொருட்கள் 
அழகிய ஐந்து cushion கவர்கள்.
கைதையல் போட தேவையான நூல் கண்டு.
கொஞ்சம் கனமான அட்டைகள் 

 cushion கவர்கள் வாங்கிய போது
 நான்கையும் இணைத்து கை தையல் போட்டுள்ளேன்.(பிறகு மனசு மாறினால் cushion கவர் ஆ கூட உபயோக படுத்தலாமேன்னு ;-))
 முன் பக்கம் 
 மீதமுள்ள கவர் யை நான்கு பக்கமும் மடித்து பின் செய்துள்ளேன்.
 அதன் முன் பக்கம் 
 மடித்த ஐந்தாவது cover ஐ படத்தில் காண்பித்து போல நடுவில் வைத்து பின் செய்துள்ளேன்.
 ஒரு பழைய ஜன்னல் கொசுவலை ரெம்ப நாட்களாக என்னிடம் சும்மாவே இருந்து வந்தது.அதை அடியில் வைத்து நான்கு புறமும் மடித்து பின் செய்துள்ளேன்.



wall hanging ஆக தொங்க விடும் போது பக்கவாட்டில் மடியாமல் இருபதற்க்காக shoe box அட்டையை நான்கு புறமும் வைத்துள்ளேன்.
எதாவது ஒரு முனையில் சின்ன நூலை கொண்டு ஆணியில் தொங்க விட ஒரு வளையம் போன்று செய்து கொள்ளவும் . கொசு வலை,அட்டை டப்பாக்கள் recycle செய்ய முடிந்ததில் மகிழ்ச்சி .
குறைந்த செலவில் அழகிய wall hanging தயார் (cushion கவர்கள் 350 ரூபாய்க்கு வாங்கினேன்) . 


5 comments:

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...